மாதகலில் இருந்து மானிப்பாய் வீதியின் ஊடாக யாழ்ப்பாணத்துக்கு சென்ற பஸ், ஆறுகால் மடத்தில் 40 வயதான ஒருவர் மீது மோதியதில் அவர் ஸ்தலத்திலேயே பலியானார்.
இன்று மாலை இடம்பெற்ற இவ்விபத்தில் நாவந்துறையை சேர்ந்த நிக்கலஸ் டொமினிக் என்ற நபரே உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இதனையடுத்து கோபமடைந்த மக்கள் பஸ்ஸை தாக்கி சேதப்படுத்தியுள்ளனர். இதன்போது அங்கு குவிந்த இராணுவத்தினரும் பொலிஸாரும் பொதுமக்கள் மீது தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.
இதில் ஊடகவியலாளர் ஒருவரும் தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அவர் தமது ஊடக அடையாள அட்டையை காண்பித்தபோதும் சிவில் உடையில் இருந்து பொலிஸ்காரர் ஒருவர் அவரை தாக்கியுள்ளார்.
இதனையடுத்து யாழ்ப்பாணம் பொலிஸ் அதிகாரியிடம் முறையிடப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை பஸ்ஸின் சாரதி சுன்னாகம் பொலிஸில் சரணடைந்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszAQUKXkwy.html

Geen opmerkingen:
Een reactie posten