தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 29 oktober 2014

லண்டனில் -ரணில் மற்றும் அமெரிக்காவில் - மகிந்தர் புலிகளை சந்தித்தர்களா ?

யானை தன் தலையில் மண்ணை வாரிப் போட்டது: சிக்கி தவிக்கும் மகிந்தர் ..நடப்பது என்ன் ?

[ Oct 29, 2014 02:54:12 PM | வாசித்தோர் : 7835 ]
சரி.. எந்த திகதியில் ஜனாதிபதி தேர்தல் நடக்கிறது என்று சொல்லுங்கள், நான் அதனை பாப்பரசருக்கு அறிவிக்கிறேன் என்று கூறியுள்ளார் மல்கம் ரஞ்சித். ஆனால் அதற்கு சரியான விடையைக் கொடுக்காது இழுத்தடித்துள்ளார்கள், மகிந்தரின் அதிகாரிகள். வாழ்நாளில் தனது சொந்த நாட்டில் பாப்பரசரை வரவேற்ப்பது என்பது மல்கம் ரஞ்சித்தை பொறுத்தவரை நடைபெறாத காரியம் ஒன்று. ஆனால் இந்த அரிய சந்தர்ப்பம் கைகூடி வரும்வேளை மகிந்தர் இவ்வாறு செய்வதனை மல்கம் சற்றும் எதிர்பார்கவும் இல்லை, விரும்பவும் இல்லை. இதனால் அவருக்கு கிடைத்த பிடியை அவர் தொடர்ந்தும் பாவிக்க ஆரம்பித்தார். அதாவது ஜனாதிபதி தேர்தல் எப்பொழுது என்பதனைச் சொல்லுங்கள் ? என்று மல்கம் அடம் பிடிக்க ஆரம்பித்து விட்டார். இதனால் கடுப்பாகிய மகிந்தர், தொலைபேசியில் அழைத்து கடிந்து தள்ளும் அளவு பிரச்சனை பூதாகரமாகிவிட்டது. ஆனால் மல்கம் வளைந்துகொடுப்பதாக இல்லை.
இதனால் என்ன மல்கம் ரஞ்சித்தை வெள்ளை வேனிலா கடத்த முடியும். அதுவும் முடியாது. என்ன செய்வது என்று தெரியாமல் மகிந்தர் ஆலோசனை நடத்திவருவதோடு, வத்திக்கானுடன் நெருக்கமான பிறிதொரு வட்டாரத்தை தொடர்பு கொண்டு, பாப்பரசர் மனம் கோணாதவகையில் மற்றும் இலங்கை வராமல் தடுக்க முயற்சிகளை மகிந்தரின் மனைவியும் கத்தோலிக்கருமான ஷிராந்தி மேற்கொண்டு வருவதாக அதிர்வு இணையம் மேலும் அறிகிறது.
கொழும்பில் இருந்து இந்த ரகசிய செய்திகள் சிங்கள ஊடகவியலாளர் ஒருவர் ஊடாக, அதிர்வு இணையத்திற்கு கசிந்துள்ளது. குடையும் குஞ்சமும் கொடுத்து பின்னர் அந்தக் குடையால் அடி வாங்குவது என்பது இதுதான் போல இருக்கே ?
http://www.athirvu.com/newsdetail/1320.html

லண்டனில் -ரணில் மற்றும் அமெரிக்காவில் - மகிந்தர் புலிகளை சந்தித்தர்களா ?

[ Oct 29, 2014 03:16:49 PM | வாசித்தோர் : 3885 ]

அமெரிக்கா என்றாலே அது நாடு கடந்த அரசின் பிரதமர் ருத்திரகுமாரன் அவர்கள் இருக்கும் இடம் என்று தான் பொருள் படும். அப்படி என்றால் மகிந்தர் என்ன ருத்திராவையா சந்தித்தார் என்று கிண்டலடிக்கிறார்களாம் சிங்கள அரசியல்வாதிகள். புலிகள் இயக்கத்தை வைத்து இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு இவர்கள் காலத்தை ஓட்டப்போகிறார்கள் என்று தெரியவில்லை. ரணில் விக்கிரமசிங்க அமெரிக்காவில் மகிந்தர் புலிகளின் தலைவரை சந்தித்துப் பேசினார் என்று கூறும்போது சிலருக்கு வயிற்றில் புளியைக் கரைப்பது போல தான் இருந்திருக்கும்... பாவம் என்ன செய்வது ?

http://www.athirvu.com/newsdetail/1321.html

Geen opmerkingen:

Een reactie posten