வரவு செலவுத்திட்ட விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
நிதி அமைச்சரால் சமர்ப்பிக்க்பபட்ட இந்த வரவு செலவுத்திட்டம் எந்த அளவில் நடைமுறைப்படுத்தப்படுகின்றது என்பதும் கேள்விக்குறியாகும்.
இதில் பலவற்றைப் பற்றி எடுத்துக் கூறப்பட்டுள்ளது. அவற்றில், தற்போது ஆயுததாரிகளாக இருந்தவர்களுக்கு புனர்வாழ்வளித்து அவர்களுக்கு வாழ்வை ஏற்படுத்திக் கொடுத்திருப்பதாக நிதியமைச்சர் குறிப்பிட்டடிருந்தார்.
ஆனால் உண்மையில் முன்னாள் போராளியாக இருந்தவர்கள் புனர்வாழ்வளிக்கப்பட்டார்கள். பின்னர் அவர்களை சுதந்திரமாக வாழ விடவில்லை. அந்த நிலைக்கு அப்பால், தங்களது இருப்பிடங்களில் இந்ந்து கொண்டு வெளியிடங்களுக்குச் சென்று தொழில் செய்வதற்கோ, மக்களோடு தொடர்பு கொள்ள விடாத வகையில் அவர்களை புலனாய்வினர் சுற்றி இருக்கின்றனர்.
எங்கு செல்வதாக இருந்தலும் புலனாய்வு பிரிவினருக்கு அவர்கள் பதிலளிக்க வேண்டும். இது நியாயமான சுதந்திரமா? என யோகேஸ்வரன் எம்பி கேள்வி எழுப்பியிருந்தார்.
கந்தசஷ்டி இறுதி நாளில் 50 ஆடுகள் பலியிடுவதற்கு திட்டம்! தடுத்து நிறுத்துமாறு யோகேஸ்வரன் கோரிக்கை
யாழ்ப்பாண மாவட்டத்தில் சில இடங்களில் நடாத்தப்பட்டு வந்த ஆலயங்களின் உயிர் பலியிடுதல் நிகழ்வை நிறுத்துமாறு பல இந்து அமைப்புக்கள் கடந்த சில காலமாக கடும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது.
இந்த வகையில் இலங்கை சைவ மகாசபை, சின்மயாமிசன், கொழும்பு சனாதன விழிப்புக்குழு, அகில இலங்கை இந்து மாமன்றம், இந்து கலாசார திணைக்களம் போன்றவை இதனை தடுப்பதில் தீவிரமான செயற்பட்டன.
சில நிகழ்வுகள் நீதிமன்றம் வரை சென்றது. ஆனாலும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆளுகைக்கு உட்பட்ட வலிகாமம் வடக்கு மானிப்பாய் பிரதேச சபைகள் இதற்கு அனுமதியை வழங்கியிருந்தது.
இதனால் சில இடங்களில் 450 ஆடுகள் வரை இந்து ஆலயங்களில் பலியிடப்பட்டன. இதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், கிழக்கு இந்து ஒன்றியத் தலைவருமான சீனித்தம்பி யோகேஸ்வரன் கடுமையான கண்டங்களையும் தெரிவித்திருந்தார்.
இவ்வேளை மீண்டும் வலிகாமம் வடக்கு பிரதேசத்தின் தெல்லிப்பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நரிஇட்டான் வைரவர் ஆலயத்தில் கந்தசஷ்டி இறுதி நாளில் 50 ஆடுகளை பலியிடுவதற்கு ஒழுங்கு செய்யப்பட்டது.
இதற்கு எதிராக இலங்கை சைவ மகாசபை உட்பட சில இந்து அமைப்புக்கள் நீதிமன்றம் சென்றது. இவ்வாலயம் தனியார் காணியில் அதாவது ஒரு சனசமூக நிலையத்தின் காணியில் அமைந்திருப்பதனாலும், இவ்வாலயம் அராசங்கத்தில் பதியப்படாமல் உள்ளதனாலும், காணி உரிமையாளர் அனுமதி பெற வேண்டும் என்ற அடிப்படையில் தடை ஏற்படுத்தப்பட்டது.
ஆனாலும் வலிகாமம் வடக்கு பிரதேச தவிசாளர் தமது தற்துணிவின் பெயரில் கந்தசஷ்டி விரதத்தின் இறுதி நாளில் இவ்வாலயத்தில் 50 ஆடுகளை வெட்ட அனுமதி வழங்கி ஏற்பாடுகளை மேற்கொண்டனர்.
இதற்கு எதிராக இலங்கை வைச மகாசபை தெல்லிப்பிளை பொலிஸ் நிலையத்திலும், கொழும்பு தலைமை பொலிஸ் காரியாலயத்திலும் முறைப்பாடுகளை பதிவு செய்தது.
இவ்வேளை இந்நடவடிக்கை மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மதவிடயங்களுக்கு பொறுப்பானவரும், கிழக்கு இந்து ஒன்றியத் தலைவரும், மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவருமான சீனித்தம்பி யோகேஸ்வரன் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது.
இதை தடுத்து நிறுத்துமாறு பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை. சேனாதிராஜா அவர்களினதும், பாராளுமன்ற உறுப்பினர்களான சி.சிறீதரன், சுரேஷ் பிரேமச்சந்திரன், எஸ்.சரவணபவன், அகியோர் கவனத்துக்கு கொண்டு வந்தார்.
அத்தோடு இவ்விடயமாக தெல்லிப்பிளை பொலிஸ் நிலையத்துடனும் தொடர்பு கொண்டு பொலிஸ் பொறுப்பதிகாரியிடம் விளக்கினார். மற்றும் அந்தணர்கள் அமைப்பின் தலைவர் வைதீஸ்வரக் குருக்கள் உட்பட இலங்கையில் உள்ள முக்கிய இந்து அமைப்புக்களின் கவனத்துக்கு கொண்டு வந்ததுடன், அகில இலங்கை இந்து மாமன்றத் தலைவர் கந்தையா நீலகண்டன், செயலாளர் கதிர்காமநாதன் ஆகியோர் கவனத்துக்கு கொண்டு வந்து நடவடிக்கையை மேற்கொண்டார்.
யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை. சேனாதிராஜா, பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரனிடம் இதுவிடயமாக வலிகாமம் வடக்கு பிரதேச தவிசாளருடன் உரையாடுவதாக தெரிவித்தார்.
வலிகாமம் வடக்கு பிரதேச சபை தலைவர் சொ.சுகிர்தன் அவர்களை தொடர்பு கொண்ட போது அவர் தற்போது தனது கையடக்கத் தொலைபேசியில் இல்லை என பதிலளிக்கப்பட்டது.
இவ்வேளை வலிகாமம் வடக்கு பிரதேச சபை செயலாளரும் இவ்விடயமாக பல முயற்சிகளை தடுப்பதற்காக மேற்கொண்டதாக அறிய முடிகின்றது.
இந்நிலையில் தெல்லிப்பளை பொலிஸார் வைரவர் ஆலயத்துக்கு சென்று உரிய ஒழுங்கின்றி அவ் உயிர் கொலையை ஆலயத்தில் மேற்கொள்ள அனுமதிக்க முடியாது என பிரதேச சபைக்கு தடை விதித்துள்ளனர்.
காரணம் மிருகக் கொலை புரியும் போது உரிய இடத்து பொதுச் சுகாதார பரிசோதகர் சமூகம் தராமலும், அதேவேளை இவ்வாலயம் பதிவு செய்யபடாமலும் உள்ளதாலும், உரிய காணி உரிமையாளர் அனுமதியின்றி இச்செயற்பாட்டை மேற்கொள்ள முடியாது என தடை விதித்துள்ளனர். இ
வ்வேளை சனசமூக நிலைய காணியாக உள்ளதால் இவ்வாலயத்தில் மிருகப் பலியிடுதலை சனசமூக நிலையத்தினரும் எதிர்த்துள்ளனர்.
வலிகாமம் வடக்கு நரி இட்டான் வைரவர் கோயிலில் நடாத்தப்படவிருந்த கந்தசஷ்டி விரத இறுதி நாளில் ஆடுகள் பலியிடுதலை தடுப்பதிலும், ஆலயங்களில் உயிர்பலியிடுவதை தடுப்பதிலும், இலங்கை சைவ மகாசபை, அறவழிப் போராட்டக்குழு, சின்மயாமிசன், கொழும்பு சனாதன விழிப்புணர்வுக்குழு, மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை, கிழக்கு இந்து ஒன்றியம் உட்பட பல இந்து அமைப்புக்கள் தீவிரமாக செயற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும்.
http://www.tamilwin.com/show-RUmszARdKXkp2.html
Geen opmerkingen:
Een reactie posten