[ வெள்ளிக்கிழமை, 03 ஒக்ரோபர் 2014, 01:16.40 AM GMT ]
ஆணையாளர் பாலபட்டபெந்தி, உயர்நீதிமன்ற நீதியரசராக இருந்த வேளையில் மேற்கொண்டதாக கூறப்படும் ஊழல்கள் தொடர்பிலேயே இந்தக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
அவர் தலைமை வகிக்கும் லஞ்ச ஊழல்கள் ஆணைக்குழுவிலேயே செய்யப்பட்டுள்ள இந்த முறைப்பாடு பல மாதங்களாக விசாரிக்கப்படாமல் இருந்து வருகிறது.
உயர்நீதிமன்ற நீதிரசராக இருக்கும் போதுää வியாபாரி ஒருவரின் வாகனத்தை சுங்கவரி செலுத்தாமல் விடுவித்துக்கொள்ள உதவினார் என்று குற்றச்சாட்டு பாலபட்டபெந்தியின் மீது சுமத்தப்பட்டுள்ளது.
இந்தநிலையில் தமக்கு எதிரான குற்றச்சாட்டை விசாரிப்பதற்காக பாலபட்டபெந்தி தற்காலிகமாக பதவி விலகி குழு ஒன்றை நியமித்து விசாரணைகளை நடத்தவேண்டும் என்று ஜே வி பி கோரியுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszATXKVfxy.html
இலங்கை தொடர்பான நிலைப்பாட்டில் மாற்றமில்லை: அமெரிக்கா
[ வெள்ளிக்கிழமை, 03 ஒக்ரோபர் 2014, 04:07.06 AM GMT ]
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் ஜென் ப்சான்கி இதனைத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவுக்கு அண்மையில் விஜயம் மேற்கொண்டு, அங்கு அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரியைச் சந்தித்து நாடு திரும்பிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இலங்கை தொடர்பில் அமெரிக்கா கடைபிடிக்கும் கொள்கையில் மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதாகவும், அது நெகிழ்ச்சித் தன்மை கொண்டதாக மாறியுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், அமெரிக்கா இதை மறுத்திருக்கிறது. நேற்று இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே ஜென் ப்சான்கி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இனங்களுக்கும், மதங்களுக்கும் இடையில் முறுகலைத் தவிர்த்து, ஒற்றுமையைக் கட்டியெழுப்பும் இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கை தொடர்பில் அமெரிக்கா என்றும் அவதானத்துடன் இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszATXKVfx4.html
Geen opmerkingen:
Een reactie posten