இலங்கை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷவால் நடத்தப்படும், இணையம் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது. அதில் லண்டனில் தமிழர்களால் நடத்தப்படும் சித்திரவதைக் கூடம் இருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளார்கள். ஈழத் தமிழ் அகதிகள் இங்கிலாந்து சென்று அங்கே அகதிகள் அந்தஸ்தை கோர சித்திரவதையை ஒரு காரணமாகக் காட்டுகிறார்கள் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. பொதுவாக தம்மை தாமே தமிழர்கள் காயப்படுத்திக் கொள்வதாகவும், இதற்காக சிறப்பு நிலையங்கள் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. குறித்த இந்த நிலையங்களுக்குச் சென்றால், அங்கே உள்ளவர்கள் இலங்கை இராணுவம் அடித்து காயப்படுத்துவது போல அடித்து காயப்படுத்துவார்களாம்.
பின்னர் அந்தக் காயங்களையும், தழும்புகளையும் காட்டி, அதனூடாகவே ஈழத் தமிழர்கள் அகதிகள் அந்தஸ்த்தை கோருவதாக புதுக் கதை ஒன்றை கோட்டபாய கட்டவிழ்த்துவிட்டுள்ளார். உண்மையில் இலங்கையில் உள்ள சிங்கள இராணும் தமிழர்களை அவ்வாறு அடிப்பது இல்லையென்று அதில் மேலும் கூறப்பட்டுள்ளது. லண்டனில் இயங்கும் சில தமிழ் சொலிசிட்டர்களே, அகதிகள் அந்தஸ்த்தை பெற்றுக்கொடுக்க இவ்வாறு நடந்து கொள்வதாகவும் பாதுகாப்பு இணையத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. அத்தோடு அன் நிறுவனங்களில் புகைப்படங்களையும் இலங்கை பாதுகாப்பு இணையம் பிரசுரித்துள்ளது. ஆதாரமற்ற இக்குற்றச்சாட்டுகளை பிரசுரித்தது மட்டுமல்லாது, சொலிசிட்டர் நிறுவனங்களின் புகைப்படங்களை போட்டது ஒரு தவறான செயலாகும்.
இதற்கு பிரித்தானியாவில் உள்ள அன் நிறுவனங்கள் முறைப்படி வழக்கை தொடரவும் முடியும். அத்தோடு இலங்கை பாதுகாப்பு இணையத்தை பிரித்தானியாவில் பார்வையிட தடையை விதிக்கக் கோரி அவர்கள் நீதிமன்றில் வழக்கு தொடரவும் முடியும் என்று, சில சட்ட வல்லுனர்கள் தெரிவித்துள்ளார்கள் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.
http://www.athirvu.com/newsdetail/1340.html
Geen opmerkingen:
Een reactie posten