கிளிநொச்சி முருகண்டி பிரதேசத்தில் யாழ்தேவி ரயிலுக்கு 1984 ஆம் ஆண்டு டெலோ அமைப்பே குண்டு தாக்குதல் நடத்தியதாக வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாண சபையில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
1984 ஆம் ஆண்டு டெலோ அமைப்பு மேற்கொண்ட போராட்டத்திற்கு அமைய யாழ்தேவி ரயில் மீதான இந்த குண்டு தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
யாழ்தேவி வடக்குக்கு வருவது வடக்கில் முன்னெடுக்கப்பட்டு வந்த ஆயுதப் போராட்டத்திற்கு தடையாக இருந்த காரணத்தினால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
யாழ்தேவி ரயில் பத்து நாளில் ஒன்றரைக் கோடி வருமானம்
யாழ்தேவி ரயில் யாழ்ப்பாணத்துக்கான சேவையை ஆரம்பித்து பத்தே நாட்களில் ஒன்றரைக் கோடி ரூபா வருமானத்தை ஈட்டியுள்ளதாக தெரியவந்துள்ளது.
யாழ்.தேவி மூலம் வடக்கிற்கு செல்ல விரும்பும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதன் காரணமாக, யாழ். தேவியின் மூலமான வருமானமும் உயர்ந்து வருவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
தற்போது யாழ்தேவி ரயிலில் முதல் வகுப்பு குளிர்சாதன பெட்டிகள், முதல் வகுப்பு பெட்டிகள், காட்சிவசதிப் பெட்டிகள் போன்ற விசேட வசதிகள் கொண்ட பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ள போதும், பெருகிவரும் பயணிகளின் தேவையை பூர்த்தி செய்யப் போதுமானதாக இல்லை என்று தெரிய வருகின்றது.
இலங்கையின் ரயில்வே வரலாற்றில் புகையிரத சேவையொன்றின் மூலம் பத்தே நாட்களில் ஒன்றரைக் கோடி ரூபா வருமானம் ஈட்டியிருப்பது யாழ்தேவியின் சாதனைகளில் ஒன்றாகவே கருதப்படுகின்றது.
http://www.tamilwin.com/show-RUmszARdKXkp3.html
Geen opmerkingen:
Een reactie posten