அரசாங்கத்தை கடுமையாக விமர்சனம் செய்த வவுனியா இளைஞன் கைது
உறவுகள் மண்ணில் புதையுண்ட சேதி கேட்டு இதயம் அதிர்ந்து போயுள்ளது! துயரில் பங்கெடுப்போம்: சிறீதரன் எம்.பி
[ வியாழக்கிழமை, 30 ஒக்ரோபர் 2014, 09:19.11 AM GMT ]
மலையகத்தில் ஏற்பட்ட பாரிய மண் சரிவினால் பாதிக்கப்பட்ட உறவுகளின் துயரில் பங்கெடுப்போம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இலங்கையின் மத்திய மலையகப் பகுதியில் எமது தமிழ் உறவுகள் வாழ்கின்ற பதுளை கொஸ்லாந்த, மீரியபெத்த பகுதிகளில் இயற்கையின் பாரிய அனர்த்தமான மண் சரிவில் மலையக சொந்தங்கள் பல நூற்றுக்கணக்கில் மண்ணில் புதையுண்டுபோன சேதி கேட்டு இதயம் அதிர்ந்து போயுள்ளது.
தமிழ்ச் சமூகம் மலையகத்தில் அன்றாட கூலிகளாய் இருநூறு ஆண்டுகளுக்கு மேலாக ஒரு விடிவற்ற வாழ்வை வாழ்ந்து கொண்டிருக்கும்வேளையில் இப்படியொரு பெருந்துயரை இயற்கை அளித்திருப்பது மனதுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
மிகவும் ஆபத்தான பிரதேசங்களில் இவர்களில் வாழ்ந்திருக்கின்றார்களே என எண்ணுகின்றபோது அதிர்ச்சி ஏற்படுகின்றது.
பதுளை கொஸ்லாந்த, மீரியபெத்த ஆகிய மலைப் பிரதேசங்களில் ஏற்பட்ட பாரிய மண்சரிவினால் நூற்றுக்கணக்கான உயிர்கள் காவு கொள்ளப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகின்ற இந்த அவலத்திற்கு பொறுப்பேற்பதில் அரசாங்கம் நழுவல் போக்கில் செயற்படுவதாகவே படுகின்றது.
இந்த பாரிய இயற்கை அனர்த்தம் நிகழப்போவது தொடர்பாக அரசாங்கத்தின் கீழ் இருக்கின்ற இது தொடர்பான அமைச்சுக்களின் கவலையீனத்தையே உணர முடிகின்றது.
தோட்ட நிர்வாகிகள் மற்றும் மலையக நிர்வாகிகள் மீதும் பழியை சுமத்திவிட்டு அரசாங்கமும் அதன் கீழிருக்கின்ற மலையக அரசியல்வாதிகளும் அமைச்சுக்களும் தப்பிவிட நினைப்பதுபோன்ற போக்குகளையே சேதிகளும் அறிக்கைகளும் வெளிக்காட்டுகின்றன.
இந்த இயற்கை அனர்த்தம் தொடர்பாக உரியமுறையில் கரிசனை எடுக்கப்பட்டு அதற்கான பணிகள் விரைபடுத்தப்பட்டிருப்பின் இத்தனை உயிர்கள் காவு கொள்ளப்பட்டிருக்காது.
ஆகவே மக்களை முட்டாள்கள் ஆக்கி மலையகத்தில் ஏற்பட்ட இந்த பாரிய இயற்கை அனர்த்தத்திற்கு அரசாங்கம் பொறுப்பேற்று அதற்கான காரணங்களை தேடியறிந்து அனரத்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிலையான வாழ்வை கட்டியெழுப்பக் கூடிய பெரிய அளவிலான நிவாரணங்களை வழங்க வேண்டுமென வேண்டி நிற்கின்றோம்.
மலையகத்தின் பாரிய இயற்கை அனர்த்தத்தின் மூலம் அரசாங்கங்கள் இதுவரை காலவரையில் மலையக மக்களை ஏமாற்றி வந்துள்ளதையே காணமுடிகின்றது.
இன்னமும் அந்த மக்கள் அடிமை நிலையிலேயே வாழ்ந்து வந்திருக்கின்றார்கள். வாழ்ந்து வருகின்றார்கள்.
அதற்கு எந்தவித அடிப்படை வசதியுமின்றி இன்றுவரை லயன்களிலேயே பிறந்து லயன்களிலேயே வாழ்ந்து லயன்களிலேயே மண்மூடி மடிந்துபோன இந்த பதுளை கொஸ்லாந்த, மீரியபெத்த உயிர்களே சாட்சி.
அவர்களின் வாழ்வு எந்த சுபீட்சங்களும் இன்றியே முடிந்திருக்கின்றது. மலையக மக்களுக்கென அமைச்சுக்களும் தலைமைகளும் உருவாகி அரசாங்களில் அங்கம் வகிக்கின்றபோதும் ஏன் இந்த மக்கள் இத்தகைய ஆபத்து நிறைந்த வாழ்கையை வாழ்ந்து இப்படி அவலமாய் மடிந்த போனார்கள் என்பது அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்துகின்றது.
இந்த நூற்றாண்டில் உலகம் மிக நவீனப்பட்ட நிலையில் இலங்கை ஆசியாவின் அதிசயம் என இலங்கை ஜனாதிபதியால் மூச்சுக்கு மூச்சு முழத்துக்கு முழம் சொல்லப்பட்டு அரச ஊதுகுழல் ஊடகங்களில் கொண்டாடப்படும் நிலையில் பதுளை கொஸ்லாந்த, மீரியபெத்த மக்களின் ஆபத்தான அவல வசதியற்ற வாழ்க்கை இருநூறு முந்நூறு ஆண்டுகள் வசதிவாய்ப்புக்களில் பின்னிற்கும் இவர்களின் வாழ்க்கை ஏன் கண்ணிற்குபடவில்லை.
அரச கொண்டாங்களுக்கும் தமிழர்களை கொன்று புதைத்து கொண்டாடப்படும் வெற்றி விழாக்களுக்கும் கொட்டுகின்ற கோடிக்கணக்கான ரூபாய்கள் போதும் மலையக மக்களுக்கு சுபீட்சமான வாழ்வை ஏற்படுத்திக் கொடுத்திருக்க.
ஆனால் இத்தனை ஆண்டுகளாய் நடைபெற்றதாக மலைய காட்சிகள் சொல்லவில்லை. மாறாக துயர் நிறைந்த வாழ்க்கையையே வெளிப்படுத்தி நிற்கின்றது.
இலங்கை முழுதும் வாழ்கின்ற இந்தியா வம்சாவழி மக்களில் சுமார் 8 இலட்சம் பேர் இலங்கையின் மத்திய சப்பிரகமுக ஊவா மாகாணங்களிலேயே வாழ்கின்றனர்.
இவர்கள் இந்த நாட்டின் ஏற்றுமதி வருமானத்திற்காக நூற்றாண்டுகளாய் உழைத்து தேய்ந்து மடிந்து போகின்றார்கள். ஆனால் இன்றும் அவர்களின் வாழ்க்கை தோட்டங்களில் லயன்களில், இந்த லயன்களில் பல நூறு தொடக்கம் 150 வருடங்கள் பழமையானவை. இதில் எங்கள் சொந்தங்களின் வாழ்வு தொலைகின்றது.
சுதந்திரத்துக்கு பின் இலங்கையில் மலையக மக்கள் எண்ணற்ற துயர்களை சந்தித்து வந்துள்ளார்கள். மலையத்தின் எமது உறவுகள் தொடர்பில் கடந்த ஆண்டு வரவு செலவு திட்ட விவாதத்தின்போதும் நாம் பேசியிருக்கின்றோம்.
தேர்தல் காலங்களில் மலையக மக்கள் ஏமாற்றப்படுகின்றார்கள் என்பதையே இப்பொழுது மலையகத்தில் நிகழ்ந்துள்ள இயற்கை அனர்த்தத்துடன் வெளிவருகின்ற சேதிகள் வெளிப்படுத்துகின்றன.
அனர்த்தங்கள் தொடர்பாக கையாள்வதற்கு ஒரு அமைச்சு அரசாங்கத்திடம் இருந்தபோதும் இத்தயை உயிரிழப்புக்கள் ஏற்ப்பட்டிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
இந்த விடயத்தில் ஒருபோதும் அரசாங்கம் யாரையும் பொறுப்பு சொல்லும்படி கூறிவிட்டு தப்பிவிடமுடியாது. இந்த நாட்டு மக்களுக்கு நடந்திருக்கின்ற அனர்த்தை பொறுப்பேற்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை.
மலையகத்தில் எமது தமிழ் சொந்தங்கள் மிகுந்த துயர் ஒன்றை சந்தித்துள்ளார்கள். 80களில் தெற்கில் ஏற்பட்ட சிங்கள வன்முறைகளால் அங்கு வாழமுடியாது துரத்தப்பட்டபோது உறவுகளுக்கு நேசக்கரம் கொடுத்து அவர்களுக்கு வாழ வழி கொடுத்ததனால் அவர்கள் வடக்கிலும் பரந்துவிரிந்த வாழ்வை கட்டியமைத்திருக்கின்றார்கள்.
இன்றும் மலையகத்தில் எமது இயற்கை அனர்த்தத்தால் உயிரிழப்புக்களையும் சொத்திழப்புக்களையும் சந்தித்துள்ள நிலையில் எமது தமிழ் மக்கள் அவர்களின் துயர்களில் பங்கெடுக்கும் அதே வேளை அவர்கள் மீண்டும் தம் வாழ்வை கட்டியெழுப்ப உலகலொம் வாழ்ந்து கொண்டிருக்கும் புலம்பெயர் தமிழ்ச் சொந்தங்கள் மலையக சொந்தங்களுக்கு உதவ முன்வர வேண்டும் என வேண்டிக்கொள்வது காலத்தின் கடமையாகின்றது என குறிப்பிடப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszAQUKXkuy.html
அரசாங்கத்தை கடுமையாக விமர்சனம் செய்த வவுனியா இளைஞன் கைது
[ வியாழக்கிழமை, 30 ஒக்ரோபர் 2014, 09:25.44 AM GMT ]
வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த பஸ்ஸில் பிரயாணம் செய்த நபர் ஒருவர் அரசாங்கத்தையும் பாதுகாப்புப் படையினரையும் கடுமையாக இழிவுபடுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பஸ்ஸில் பயணித்துக் கொண்டிருந்த போது குறித்த இளைஞர் அரசாங்கத்தை அவமரியாதைக்கு உட்படுத்தியுள்ளார்.
இந்த இளைஞர் ஆள் அடையாளத்தை உறுதி செய்யத் தவறியுள்ளார்.
கைது செய்யப்பட்டு நீண்ட நேரத்தின் பின்னர் தனது அடையாளத்தை உறுதி செய்துள்ளார்.
வவுனியா பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதான ரவிச்சந்திரன் சந்திரசேகரன் என்ற இளைஞரே இவ்வாறு அரசாங்கத்தையும் படையினரையும் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
பஸ்ஸில் பயணித்த ஒருவர் இது குறித்து மதவச்சி பொலிஸ் நிலையத்திற்கு அறிவித்ததாகவும் பின்னர் பொலிஸ் அதிகாரிகள் சந்தேக நபரை கைது செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சந்தேக நபரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszAQUKXkuz.html
நிலச்சரிவால் இடம்பெயர்ந்துள்ள 182 சிறார்கள்: பெற்றோரை இழந்த 75 பிள்ளைகளின் பொறுப்பை ஏற்ற அரசாங்கம்
[ வியாழக்கிழமை, 30 ஒக்ரோபர் 2014, 09:51.42 AM GMT ]
12 வயதுக்கு குறைந்த 82 சிறுமிகள்,100 சிறுவர்கள், 179 பெண்கள், 157 ஆண்கள் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதனை தவிர பூணாகலை தமிழ் மகா வித்தியாலயத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மீரியபெத்த நிலச்சரிவில் பெற்றோரை இழந்த 75 பிள்ளைகள் தொடர்பான பொறுப்பை அரசாங்கம் ஏற்றுள்ளது.
இவர்களின் எதிர்காலம் சம்பந்தமான சகல நடவடிக்கைகளும் அரசாங்கத்தின் தலையீட்டுடன் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszAQUKXku0.html
Geen opmerkingen:
Een reactie posten