தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 31 oktober 2014

கிழக்கில் வாக்குகள் கொள்ளை: பிள்ளையானுக்கு பெருந்தொகை பணம்!

நிறைவேற்று அதிகாரமே பயங்கரவாதத்தை வளர்த்தெடுத்தது: அத்துரலியே- ஜனாதிபதிக்கு அழுத்தம்: தயாராகும் ராஜித சேனாரத்ன
[ வெள்ளிக்கிழமை, 31 ஒக்ரோபர் 2014, 06:53.44 AM GMT ]
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவியின் கீழ் பயங்கரவாதம் பிறப்பெடுத்து வளர்ந்ததுடன் அது வளர்க்கப்பட்டது என ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.
ஜனநாயகத்திற்கான மக்கள் அமைப்பு நுகேகொடையில் நேற்று நடத்திய பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
நிறைவேற்று அதிகாரத்தின் கீழே பயங்கரவாதம் பிறந்து வளர்ந்ததுடன் வளர்க்கப்பட்டது. இதனால், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவி இருப்பதால் மாத்திரம் பயங்கரவாதத்தை அடக்க முடியாது.
இதனால், இந்த ஆட்சி நிர்வாக முறைக்கு எதிராக ஜனநாயகத்திற்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும்.  ஆட்சியாளர்களின் அதிகாரத்தை பாதுகாக்கவோ ஊழல்வாதிகளின் ஊழல் பயணத்தை பாதுகாக்கவோ நானில்லை.
ஜனநாயகம் இல்லாமல் போகும் சந்தர்ப்பத்திலேயே பயங்கரவாதம் பிறப்பெடுக்கும்.
நாட்டின் பொறுப்புமிக்கவர்கள், பொறுப்புமிக்க பிரஜைகள் இந்த ஆபத்தை காணவில்லை என்றால், மீண்டும் ஒரு சூரியகந்த, அழுது புலம்பும் தாய்மார், புரட்சி செய்யும் இளைஞர்கள் உருவாகுவார்கள்.
டயர்கள் எரியும் யுகத்தை மீண்டும் காணவிரும்பினால் இந்த அரசியலமைப்பை தொடர்ந்தும் முன்னெடுக்கலாம் எனவும் அத்துரலியே ரத்ன தேரர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுக்க அணியை தயார்படுத்தும் அமைச்சர் ராஜித சேனாரத்ன
அதிகாரத்தை பரவலாக்குவதை அடிப்படையாக கொண்டு அரசியலமைப்புச் சட்டத்தின் திருத்தங்களை செய்யுமாறு ஜனாதிபதிக்கு அழுத்தங்களை கொடுக்கும் நோக்கில் அமைச்சர் ராஜித சேனாரத்ன ஆளும் கட்சிக்குள் அணியொன்றை தயார்படுத்தி வருவதாக அரசாங்கத்தின் உட்தரப்பு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த அணியில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பல நாடாளுமன்ற உறுப்பினர்களை இணைத்து கொள்ள ராஜித நடவடிக்கை எடுத்து வருகிறார்.
அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் இடதுசாரி கட்சிகளின் ஆதரவு இதற்கு கிடைத்துள்ளது.
அரசியலமைப்பு மறுசீரமைக்கும் யோசனைகளை இம்முறை ஜனாதிபதித் தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்குமாறு அவர்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக அந்த வட்டாரங்கள் கூறியுள்ளன.
அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, எஸ்.பி.திஸாநாயக்க, ரெஜினோல்ட் குரே உட்பட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் மட்டுமல்லாது ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் இடதுசாரி கட்சிகளின் அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அதிகாரப் பரவலாக்கல் தொடர்பில் தொடர்ந்தும் குரல் கொடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmszAQVKXjo5.html
யாழ் மக்களை அச்சுறுத்தும் நுண்ணுயிர்கள்- அசைவ உணவில் பல்லி, சைவ உணவில் ஆட்டெலும்பு: வடக்கு சுகாதார அமைச்சர் கவலை
[ வெள்ளிக்கிழமை, 31 ஒக்ரோபர் 2014, 06:42.03 AM GMT ]
இலங்கையில் குடிநீரினால் பரவும் வயிற்றோட்டம், நெருப்புக் காய்ச்சல் நோய்களுக்கு யாழ் குடாநாட்டு மக்களே அதிகம் பாதிக்கப்படுவதாக அதிர்ச்சித் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
குடிநீரில் கலந்துள்ள நுண்ணுயிர்களே இதற்குக் காரணம் என்று யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆர்.கேதிஸ்வரன் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார்.
கடந்த 9 மாதத்தில் மட்டும் யாழ்ப்பாணத்திலுள்ள அரச வைத்தியசாலைக்கு 554இற்கும் அதிகமானவர்கள் மேற்படி நோய்களால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
யாழில் இயங்கி வந்த ஐஸ்கிறீம், ஜுஸ் உற்பத்தி நிறுவனங்களுக்கான தடை விதிக்கப்பட்டது சம்மந்தமான கலந்துரையாடல் நேற்று மாலை யாழ்.வணிகர் சங்கத்தில் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கை முழுவதிலும் குடிநீரினால் அதிகமாக பரவும் வயிற்றோட்டம், நெருப்புக் காய்ச்சல் நோய்க்கு உள்ளாக்கப்படுபவர்களில் அதிகமானவர்கள் யாழ்.மாவட்டத்திலேயே அதிகமான உள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் நிலக்கீழ் நீரில் நுண்ணுயிர் தொற்கு உள்ளது என்பது பல வருடங்களுக்கு முன்னர் அறிக்கை வெளியிடப்பட்டு விட்டது. நிலக்கீழ் நீரினை பாதுகாப்பதற்கான திட்டங்கள் பல வகுக்கப்பட்டும் உள்ளது. இதில் சில நடைமுறைப்படுத்தப்பட்டு விட்டது.
யாழில் சகல பகுதிகளிலும் உள்ள கிணறுகளில் உள்ள நீரை எடுத்து பரிசீலித்துப் பார்த்தால் அதில் திருப்தி இல்லாத முடிவே கிடைக்கும்.
கடந்த 2013 ஆம் ஆண்டு யாழ்.மாவட்டத்தில் உள்ள அரச வைத்தியசாலைகளில் வயிற்றோட்டம் காரணமாக 489 நோயாளர்களும், நெருப்புக் காய்ச்சல் காரணமாக 350 பேரும் அரச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர்.
கடந்த 9 மாதத்திற்குள்ளும் வயிற்றோட்டம் காரணமாக 261 நோயாளர்களும், நெருப்புக் காய்ச்சல் காரணமாக 293 நோயாளர்களும் இதுவரையில் சிகிச்சை பெற்றுள்ளனர்.
மேற்படி நோய் தொற்றுக்கு உள்ளாக்கப்படுபவர்களுடைய தொகை நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்லுகின்றது.
அசைவ உணவில் பல்லி, சைவ உணவில் ஆட்டெலும்பு: வட மாகாண சுகாதார அமைச்சர்
யாழில் உள்ள பல உணவகங்கள் சுகாதாரச் சீர்கேட்டுடன் இயங்குவதாக தெரிவித்த் வடமாகாண சுகாதார அமைச்சர், அசைவ உணவில் பல்லியும், சைவ உணவில் ஆட்டெலும்பும் இருந்ததாகக் குறிப்பிட்டார்.
யாழில் இயங்கிவந்த ஐஸ்கிறீம், யூஸ் உற்பத்தி நிறுவனத்திற்கு திடீர் தடை விதிக்கப்பட்டமை தொடர்பான கலந்துரையாடல் நேற்று மாலை யாழ்.மாணிப்பாய் வீதியில் அமைந்துள்ள யாழ்.வணிகர் சங்கத்தில் நடைபெற்றது.
இந்த கலந்துரையாடலில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டாவாறு குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,
யாழ்ப்பாணத்திற்கு அண்மையில் வருகைதந்த போது உணவகம் ஒன்றிற்கு உணவருந்துவதற்காக சென்றிருந்தேன். அங்கு நான் அருந்திய உணவில் பல்லி ஒன்று உயிரிழந்து கிடப்பதை அவதானித்திருந்தேன்.
அதே போன்று வேறொரு நாள் சைவ உணவு உண்பதற்கு ஆசைப்பட்டு சைவ உணவகத்திற்கு சென்று உணவருந்திக் கொண்டிருக்கும் போது, அங்கு எனக்கு கொடுக்கப்பட்ட சைவ உணவில் ஆட்டு எலும்புக் கறி வாசத்தை என்னால் நுகர முடிந்தது.
அதே போன்று என்னுடன் வந்த இன்னுமொருவருக்கு ஆட்டுக் கறி உண்டால் அவருக்கு ஒவ்வாமை வருவதுண்டு. குறித்த உணவகத்தில் உணவருந்தி விட்டு வெளியில் வருவதற்கு முன்பே அவருடைய முகத்தில் மாற்றம் தெரிந்ததையும் என்னால் அவதானிக்க முடிந்தது.
இது தொடர்பில் குறித்த உணவகத்தின் உரிமையாளரிடம் முறையிட்ட போது அவர் அதனை ஏற்க மறுத்திருந்தார்.
இந்த நிலையில் உள்ளன யாழ்ப்பாண உணவகங்கள். இதனால் யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்து நான் 5 நாட்கள் தங்குவதாக இருந்தாலும், 3 வேளையும் பாணை மட்டுமே பதப்படுத்தி உண்ணுகின்றேன் என்றும் அமைச்சர் தனது கவலையினை வெளியிட்டிருந்தார்.
http://www.tamilwin.com/show-RUmszAQVKXjo4.html
கிழக்கில் வாக்குகள் கொள்ளை: பிள்ளையானுக்கு பெருந்தொகை பணம்
[ வெள்ளிக்கிழமை, 31 ஒக்ரோபர் 2014, 06:35.40 AM GMT ]
ஜனாதிபதித் தேர்தலில் கிழக்கு மாகாணத்தின் வாக்குகளை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு பெற்றுக்கொடுப்பதற்காக, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் கட்சி தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான பிள்ளையான் என்ற சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கு அரசாங்கம் பெருந்தொகை பணத்தை கொடுத்துள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது.
கிழக்கு மாகாணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகளின் ஆற்றலை குறைத்தல், மக்கள் அந்த கட்சியுடன் கொண்டுள்ள தொடர்புகளை இல்லாமல் செய்தல் என்பன இந்த திட்டத்தின் முதல் நடவடிக்கை என தெரியவந்துள்ளது.
ஏற்கனவே பாடசாலைகளின் ஆசிரியர்களை இணைத்து கொண்டு மகிந்த ராஜபக்ஷவை தேர்தலில் வெற்றி பெற செய்ய வேண்டும் என பிள்ளையான் தரப்பினர் மக்களுக்கு அழுத்தங்களை கொடுத்து வருகின்றனர்.
விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து விலகிய கருணா என்ற விநாயகமூர்த்தி முரளிதரன் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியை ஆரம்பித்ததுடன் பிள்ளையான் அந்த கட்சியின் இரண்டாம் நிலை தலைவராக இருந்து வந்தார்.
கருணா, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்ததை தொடர்ந்து பிள்ளையான், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரானார்.
கடந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் பிள்ளையான் வெற்றி பெற்ற போதிலும் மீண்டும் முதலமைச்சராக நியமிக்கப்படாததுடன் ஜனாதிபதியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.
கிழக்கு மாகாணத்தில் ஆட்கள் காணாமல் போன சம்பவம் தொடர்பில் கருணாவுக்கு அடுத்ததாக பிள்ளையான் மீதே அதிக குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.
காணாமல் போனோர் தொடர்பில் விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் பிள்ளையானுக்கு எதிராக பல முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
காத்தான்குடி படுகொலைகள் குறித்தும் பிள்ளையான் மீதே குற்றம் சுமத்தப்பட்டுள்ளது எனவும் அந்த சிங்கள இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.
எவ்வாறாயினும் கிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வாக்கு வங்கி தொடர்பில் தாக்கங்களை ஏற்படுத்த பிள்ளையானால் முடியாது என கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
பிள்ளையானுக்கு அப்படியான அடிப்படையில்லை எனவும் கிழக்கு மாகாண சபை உறுப்பினராக பிள்ளையான் மாகாண சபைக் கூட்டங்களுக்கும் செல்வதில்லை எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாணத்தில் அண்மையில் கூட்டம் ஒன்று நடைபெற்றதுடன் அதில் இம்முறையும் மகிந்த ராஜபக்ஷவே வெற்றிபெறுவார் என பிள்ளையானால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் கிழக்கு மாகாண மக்களின் வாக்குகளை பணத்தை வீசி பெற முடியாது எனவும் சுமந்திரன் கூறியதாகவும் குறித்த சிங்கள இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.
எவ்வாறாயினும் இந்த செய்தி சம்பந்தமாக முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனை தொலைபேசியில் தொடர்பு கொண்டதாகவும் அவரிடம் இருந்து பதில் கிடைக்கவில்லை எனவும் இதனையடுத்து அவரது செயலாளர் என அறிமுகப்படுத்திக் கொண்ட ஒருவர் பதில் கூற மறுத்ததுடன் தொலைபேசியை துண்டித்து கொண்டதாகவும் லங்கா ஹெரலட் என்ற அந்த சிங்கள இணையத்தளம் மேலும் தெரிவித்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszAQVKXjo3.html

Geen opmerkingen:

Een reactie posten