தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 30 oktober 2014

விடுதலைப் புலி ஆதரவாளர்களை ஜனாதிபதி சந்திக்கவில்லை: அரசாங்கம் மறுப்பு


கொஸ்லாந்த மண்சரிவு: இந்திய பிரதமர் நரேந்திர மோடி கவலை
[ வியாழக்கிழமை, 30 ஒக்ரோபர் 2014, 02:48.58 PM GMT ]
இலங்கையின் கொஸ்லாந்த மீரியபெத்த தோட்டத்தில் மண்சரிவில் உயிரிழந்த மக்களுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி தமது கவலையை வெளியிட்டுள்ளார்.
இந்தநிலையில் மண்சரிவில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என்று பிரார்த்திப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை மண் சரிவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்யவுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகரகமும் அறிவித்துள்ளது.
எனினும் இயற்கை அனர்த்த நிலைமை தொடர்பில் ஐக்கிய நாடுகள் அமைப்பினதோ அல்லது வேறு தரப்பினரது உதவி அவசியமில்லை என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmszAQUKXkv4.html


விடுதலைப் புலி ஆதரவாளர்களை ஜனாதிபதி சந்திக்கவில்லை: அரசாங்கம் மறுப்பு
[ வியாழக்கிழமை, 30 ஒக்ரோபர் 2014, 03:01.26 PM GMT ]
புலம்பெயர் விடுதலைப் புலி ஆதரவாளர்களுடன், ஜனாதிபதி சந்திப்புக்களை மேற்கொள்ளவில்லை என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அண்மையில் அமெரிக்காவுக்கு மேற்கொண்ட விஜயத்தின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களை சந்தித்தாக வெளியான தகவலை அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் மறுத்துள்ளார்.
இந்த மறுப்பை நாடாளுமன்றத்தில்  இன்று பீரிஸ் வெளியிட்டார்.
ஜனாதிபதி தமது அமெரிக்க விஜயத்தின் போது விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களை சந்திக்கவில்லை என்பதை தம்மால் உறுதிப்படுத்த முடியும் என்று அவர் குறிப்பிட்டார்.
ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்ற ஜனாதிபதி,  அதற்கு புறம்பாக உலக அரசதலைவர்களை சந்தித்து பேச்சு நடத்தினார்.
எனினும் எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க கூறியமையை போன்று, ஜனாதிபதி விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களை சந்திக்கவில்லை என்று பீரிஸ் குறிப்பிட்டார்.
http://www.tamilwin.com/show-RUmszAQUKXkv5.html

Geen opmerkingen:

Een reactie posten