இலங்கையின் சிங்களத் தலைவர் அநகாரிக தர்மபாலவுக்கு இந்தியாவில் முத்திரை வெளியிடும் நடவடிக்கைக்கு பழ.நெடுமாறன் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக உலகத் தமிழர் பேரவையின் தலைவர் பழ. நெடுமாறன் மேலும் தெரிவித்துள்ளதாவது,
அநகாரிக தர்மபால இலங்கையில் தமிழ் மக்கள் மீது இனவாதம் கக்கியவர்.
அவரது கருத்துக்கள் காரணமாகவே இலங்கையில் சிங்கள- தமிழ் இன முரண்பாடு தீவிரம் பெற்றது.
அவ்வாறான நிலையில் அநகாரிக தர்மபாலவுக்கு இந்தியாவில் நினைவு தின முத்திரை வெளியிடப்படுவது தவறானது என தெரிவித்துள்ளார்.
இலங்கை- இந்திய அரசுகளின் கூட்டு இணக்கத்தின் பிரகாரம் சுவாமி விபுலானந்தருக்கு இலங்கையிலும், அநகாரிக தர்மபாலவுக்கு இந்தியாவிலும் நினைவு தின முத்திரை வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmszARdKXlx2.html
Geen opmerkingen:
Een reactie posten