இலங்கை ஐ.நாவோடு போடும் டீல் என்ன ? ராணுவத்தை அனுப்ப சம்மதம் தெரிவித்துள்ளது !
[ Oct 30, 2014 12:00:00 AM | வாசித்தோர் : 4695 ]
ஹெய்டி நாட்டில் ஏற்கனவே 1000 இலங்கை இராணுவத்தினர் பணிபுரிந்து வருகிறார்கள். இதேவேளை மேலதிகமாக சுமார் 700 இராணுவத்தை அனுப்ப அவர்கள், ஒப்புக்கொண்டுள்ளார்கள். ஐ.நாவிடம் இது தொடர்பாக இலங்கை பேச்சுவார்த்தை ஒன்றை நடத்தியுள்ளது. அதன் அடிப்படையில் மேலதிக இலங்கை இராணுவத்தை அன் நாட்டுக்கு அனுப்ப இலங்கை அரசு ஒத்துக்கொண்டுள்ளது என்று மேலும் அறியப்படுகிறது. ஐக்கிய நாடுகளோடு சுமூகமான டீல் ஒன்றை போட்டு ஒட்டிக்கொள்ள இலங்கை அரசு கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருவது நன்றாக புலப்படுகிறது.
http://www.athirvu.com/newsdetail/1324.htmlமகிந்தரின் உற்ற நண்பருக்கு நடந்தது என்ன ? இலங்கை சென்று பித்தம் தெளிந்ததா ?
[ Oct 30, 2014 12:00:00 AM | வாசித்தோர் : 11850 ]
காணாமல்போனோர் தொடர்பிலான தகவல்களை வெளியிடுவது இலங்கையின் நீண்டகால நல்லிணக்கத்திற்கு வழிவகுக்கும் என பொதுநலவாய நாடுகள் அமைப்பின் செயலாளர் நாயகம் கமலேஷ் ஷர்மா தெரிவிக்கின்றார். பொதுநலவாய நாடுகள் அமைப்பின் செயலாளர் நாயகம் கமலேஷ் ஷர்மா தனது இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் தொடர்பில் விளக்கமளிப்பதற்காக இன்று ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தார்.தனது உத்தியோகபூர்வ விஜயத்தினை நிறைவு செய்து நாட்டிலிருந்து புறப்பட்டுச் செல்வதற்கு முன்னர் இந்த ஊடக சந்திப்பில் அவர் கலந்து கொண்டார். இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகள் தொடர்பில் பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் கமலேஷ் ஷர்மா இதன்போது விளக்கமளித்தார்.
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை தொடர்ந்து நடைமுறைப்படுத்துவதன் ஊடாக, வெற்றி கொண்ட சமாதானத்தை பாதுகாக்க முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கையில் நிரந்தர நல்லிணக்கம் மற்றும் ஒருமைப்பாட்டை ஏற்படுவதற்கான பிரயத்தனங்களை மேற்கொள்வது தொடர்பில் அரசாங்கத்திற்கு தாம் எடுத்துக் கூறியுள்ளதாகவும் இந்த ஊடக சந்திப்பில் கமலேஷ் ஷர்மா தெரிவித்துள்ளார். காணாமல் போயுள்ளவர்கள் தொடர்பிலான தகவல்களை உரிய முறையில் அறிந்து கொள்ளாமல் நீண்டகால நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது எனவும், அவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பதனை அறிந்து கொள்ளும் வரை அந்த வடுக்களை அழிக்க முடியாது என்றும் பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.
http://www.athirvu.com/newsdetail/1326.html
Geen opmerkingen:
Een reactie posten