தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 31 oktober 2014

இலங்கை கத்தோலிக்க திருச்சபையை அச்சுறுத்திய கோத்தபாய!



வர்த்தக நிலையங்கள், இல்லங்கள் தேடிவரும் நிவாரண குழுவுக்கு மனமுவந்து உதவுங்கள்! கூட்டமைப்பு வேண்டுகோள்
[ வெள்ளிக்கிழமை, 31 ஒக்ரோபர் 2014, 08:33.12 AM GMT ]
இயற்கை அனர்த்தத்தால் கடந்த 29ம்  திகதி பதுளை கொஸ்லாந்த, மீரியபெத்த பெருந்தோட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசர உதவிகளை வழங்குதல் தொடர்பான கலந்துரையாடல் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தலைமையில் அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி நிகழ்வுடன் இன்று நடைபெற்றது.
இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவு வகைகள், உடுதுணிகள், போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீர், பிஸ்கட், பால்மா வகைகள், சவர்க்கார வகைகள், பற்பசை- பற்தூரிகைகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களை வழங்குவதற்கு வர்த்தக நிலையங்கள், அரச, அரசசார்பற்ற நிறுவனங்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் ஆகியோரது உதவியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர்  கோரியுள்ளனர்.
இன்று உங்கள் வர்த்தக நிலையங்கள், இல்லங்கள் தேடிவரும் நிவாரணப் பொருள்களை சேகரிப்பதற்கு நியமிக்கப்பட்டுள்ள குழுவினரிடம், உங்களால் முடிந்தவரையான குறித்த அத்தியாவசிய பொருள்களை வழங்கி உதவுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பாக சிவசக்தி ஆனந்தன் எம்.பி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சேகரிக்கப்படும் நிவாரணப் பொருட்கள் பாதிக்கப்பட்ட மக்களின் இருப்பிடங்களுக்கே நேரில் சென்று, வவுனியா மாவட்ட மக்கள் சார்பான குழுவினால் கையளிக்கப்படவுள்ள அதேவேளை, அனர்த்தத்தினால் உயிரிழந்த உறவுகளுக்கான ஆத்மசாந்தி பிரார்த்தனை நிகழ்ச்சியும் எதிர்வரும் வாரம் வவுனியாவில் இடம்பெறவுள்ளது.
இந்த கலந்துரையாடலில் வடமாகாண சபை உறுப்பினர்களான இ.இந்திரராசா, ம.தியாகராசா, வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை உபதலைவர் து.ரவி, உறுப்பினர்களான க.பரமேஸ்வரன், பா.பார்த்தீபன், ப.தர்மலிங்கம், இரா.இராஜசேகரம்,
செட்டிக்குளம் பிரதேச சபை உறுப்பினர்களான சு.ஜெகதீஸ்வரன், சி.சிவகேதீஸ்வரன், கோட்டக்கல்விப் பணிப்பாளர் எம்.பி.நடராஜா, முன்னாள் உப நகரபிதா க.சந்திரகுலசிங்கம், சமூக சேவையாளர் க.பவான் மற்றும் மாவட்ட முச்சக்கர வண்டி ஓட்டுநர் சங்க உபதலைவர், வடமாகாண சுகாதார அமைச்சரின் பிரத்தியேக செயலாளர், வர்த்தகர்கள், சமூக சேவையாளர்கள், சமூக நலன் விரும்பிகள், ஊடகவியலாளர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
http://www.tamilwin.com/show-RUmszAQVKXjpz.html
ராஜபக்சவினருக்கு தேவை அதிகாரம் மட்டுமே: அனுரகுமார திஸாநாயக்க
[ வெள்ளிக்கிழமை, 31 ஒக்ரோபர் 2014, 07:54.48 AM GMT ]
மகிந்த ராஜபக்சவுக்கு மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட எந்த உரிமையுமில்லை எனவும் அவர் மீண்டும் தேர்தலில் போட்டியிடுவது சட்டவிரோதமானது எனவும் ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
நுகேகொடையில் நேற்று நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
நாட்டின் அமுலில் இருக்கும் சட்டமும் அரசியலமைப்புச் சட்டமும் மகிந்த ராஜபக்சவுக்கு பொருந்தாது எனவும் அவருக்கு தேவை அதிகாரமே தவிர வேறு எதுமில்லை எனவும் அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
ராஜபக்சவிற்கோ, ராஜபக்சவின் குடும்பத்தினருக்கோ, அவர்களை சுற்றியிருப்போருக்கோ நாட்டின் பொருளாதார பிரச்சினைகள் முக்கியமல்ல.
அவர்களுக்கு தேவை அதிகாரம் மாத்திரமே. நாட்டில் எதிர்நோக்கப்படும் பிரச்சினைகளுக்கு தீர்வை கண்ட பின்னர், ஜனாதிபதித் தேர்தலை 2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடத்த முடியும்.
ஆனால், நாட்டில் எதிர்நோக்கப்படும் பிரச்சினைகளுக்கு ராஜபக்சவினரால் தீர்வு காண முடியாது என்பதால், அடுத்த வருடம் ஜனாதிபதித் தேர்தலை நடத்த அவர்கள் திட்டமிட்டுள்ளனர் எனவும் அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszAQVKXjpy.html
இலங்கை கத்தோலிக்க திருச்சபையை அச்சுறுத்திய கோத்தபாய!
[ வெள்ளிக்கிழமை, 31 ஒக்ரோபர் 2014, 07:42.15 AM GMT ]
பாப்பரசர் ஜனவரி மாதம் 13 ஆம் திகதி இலங்கைக்கு கட்டாயம் விஜயம் செய்வார் என இலங்கை கத்தோலிக்க திருச்சபை நேற்று அறிவித்தததாக த இண்டிபெண்டன் இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.
பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் அச்சுறுத்தல் காரணமாகவே பாப்பரசின் விஜயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஜனாதிபதித் தேர்தல் காரணமாக பாப்பரசரின் விஜயத்தை கத்தோலிக்க திருச்சபை இடைநிறுத்தினால், அது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் இதனால், திட்டமிட்டப்படி பாப்பரசரின் விஜயம் நடைபெற வேண்டும் என கோத்தபாய ராஜபக்ஷ, ஆயர்களை அழைத்து கூறியுள்ளார்.
இதனால், பெரும் சங்கடத்திற்கு உள்ளாகியிருக்கும் கத்தோலிக்க திருச்சபை, பாப்பரசரின் விஜயம் திட்டமிட்டபடி இடம்பெறும் என நேற்று தீர்மானித்துள்ளது எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது ஜனாதிபதித் தேர்தலுக்கு தடையாக இருந்து விடக் கூடாது எனவும் பாப்பரசரின் விஜயத்திற்கு தடைகள் ஏற்படாதபடி பாதுகாப்பு உட்பட ஏனைய வசதிகள் செய்து கொடுக்கப்படும் எனவும் பாதுகாப்புச் செயலாளர் இதன் போது உறுதியளித்துள்ளதாக தெரிய வருகிறது.
http://www.tamilwin.com/show-RUmszAQVKXjo7.html

Geen opmerkingen:

Een reactie posten