தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 25 oktober 2014

சென்னை செல்லும் “CV” டெல்லி பறக்கிறார்…

வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் அடுத்த மாதத்தில் சந்திப்பு நடத்தப்படக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த சந்திப்பிற்கான நேரத்தை ஒதுக்கீடு செய்யும் முனைப்புக்களில் இந்திய அதிகாரிகள் முனைப்பு காட்டி வருவதாக குறிப்பிடப்படுகிறது.இந்திய தன்னார்வ தொண்டு நிறுவனமொன்று விக்னேஸ்வரனுக்கு இந்தியா விஜயம்செய்யுமாறு அழைப்பு விடுத்துள்ளது.
சிவில் சுதந்திரத்திற்கான மக்கள் ஒன்றியம் என்ற அமைப்பு இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளது.எதிர்வரும் நவம்பர் மாதம் 9ம் திகதி நடைபெறவுள்ள நிகழ்வு ஒன்றில் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த அழைப்பினை முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஏற்றுக்கொண்டுள்ளார்.குறித்த காலப்பகுதியில் பிரதமருடன் சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்வதில் முனைப்பு காட்டப்பட்டு வருவதாதகத் தெரிவிக்கப்படுகிறது.
பிரதமர் அலுவலக அதிகாரிகள் இந்த முனைப்பை எடுத்து வருகின்றனர். எவ்வாறெனினும் இன்னமும் உரிய நேரமொன்றை ஒதுக்கீடு செய்ய முடியாத நிலைமை காணப்படுவதாகக் குறிப்பிடப்படுகிறது. எதிர்வரும் நவம்பர் மாதம் 11ம் திகதி இந்திய பிரதமர் மூன்று நாடுகளக்கான விஜயமொன்றை மேற்கொள்ள உள்ளார் எனவும் அதற்கு முன்னதாக நேரமொன்றை ஒதுக்கீடுசெய்ய முயற்சிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சென்னையில் நடைபெறவுள்ள நிகழ்வில் பங்கேற்பதற்கு முன்னதாக விக்னேஸ்வரன் டெல்லி பயணம் செய்வார் என தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறெனினும் விக்னேஸ்வரன் பிரதமர் மோடியை சந்திப்பாரா என்பது குறித்த உறுதியான தகவல்கள் இன்னமும் வெளியிடப்படவில்லை.
http://www.jvpnews.com/srilanka/84941.html

Geen opmerkingen:

Een reactie posten