தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 25 oktober 2014

சென்னையில் யாழ். இளைஞனைக் கடத்தி பணம் கேட்டு மிரட்டிய மூவர் கைது!

சஜித்தின் கோரிக்கையை ரணில் நிராகரிப்பு
[ சனிக்கிழமை, 25 ஒக்ரோபர் 2014, 10:11.16 AM GMT ]
பிரதித் தலைவர் பதவியை பொறுப்பேற்கும் போது தனக்கு வழங்கிய வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவதாக எழுத்து மூலம் உறுதிமொழியை வழங்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச விடுத்த கோரிக்கையை ரணில் விக்ரமசிங்க நிகராகரித்துள்ளார்.
புதிய நியமனங்களை வழங்குவது தொடர்பாக தாம் எவருக்கு எந்த வாக்குறுதிகளையும் வழங்கவில்லை என தெரிவித்துள்ள ரணில், சஜித் கோரும் அதிகாரங்கள் கட்சியின் தலைவர் என்ற முறையில் தனக்கும் இல்லை எனவும் கட்சிக்கு மாத்திரமே அதிகாரங்கள் இருப்பதாகவும் கூறியுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருக்கும் பிரதித் தலைவருக்கும் இடையில் அண்மையில் எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது இது குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
இந்த பேச்சுவார்த்தையில் கட்சியின் தவிசாளர் கபீர் ஹசீம், முன்னாள் தவிசாளர் மலிக் சமரவிக்ரம ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த நிலைமையில், ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதித் தேர்தலை வழிநடத்தும் கட்சியின் ஜி-20 குழுவின் கூட்டத்தில் நேற்று சஜித் பிரேமதாச கலந்து கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது.
http://www.tamilwin.com/show-RUmszARZKXmp3.html
தங்கம் கடத்தல்: கட்டுநாயக்காவில் சிக்கியது குடும்பம்
[ சனிக்கிழமை, 25 ஒக்ரோபர் 2014, 10:14.31 AM GMT ]
பயணப் பொதிகளில் வைத்து 55 இலட்சம் ரூபா பெறுமதியான 11 தங்கத் துண்டுகளை கடத்திய குற்றச்சாட்டில் மூவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக கட்டுநாயக்க விமான நிலைய சுங்கப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இலங்கை விமான சேவைக்கு சொந்தமான யு.எல் 303 விமானத்திலேயே மூவரடங்கிய இக் குடும்பத்தினர் சிங்கப்பூரிலிருந்து தங்கத்தை இன்று சனிக்கிழமை கடத்தி வந்துள்ளனர்.
அவர்களிடமிருந்து மீட்கப்பட்ட தங்கம் அரசுடமையாக்கப்பட்டதுடன், அவர்களுக்கு இரண்டு இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதாக சுங்கப் பிரிவினர் மேலும் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு கொம்பனி வீதியைச் சேர்ந்த 31 வயதுடைய கணவன், 28 வயதான மனைவி மற்றும் 23 வயதுடைய மனைவியின் சகோதரி ஆகியோருக்கே இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszARZKXmp4.html
சென்னையில் யாழ். இளைஞனைக் கடத்தி பணம் கேட்டு மிரட்டிய மூவர் கைது
[ சனிக்கிழமை, 25 ஒக்ரோபர் 2014, 10:52.42 AM GMT ]
சென்னை வளசரவாக்கத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவரைக் கடத்தி கப்பம் கோரிய மூவரை வளசரவாக்கம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தை சேர்ந்த 28 வயதான நிரோசன் என்ற இளைஞனைக் கடத்தியே பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.
குறித்த இளைஞன் கடந்த சில வருடங்களாக வடபழனி, பஜனை கோவில் தெருவில் உள்ள வாடகை வீட்டில் தங்கி, உதவி இயக்குனராக வேலை செய்து வந்துள்ளார். குறும் படம் ஒன்றையும் இயக்கி உள்ளார்.
வளசரவாக்கம், ஸ்ரீதேவிகுப்பம் பகுதியில் இலங்கையை சேர்ந்த ஜெகன் என்பவர் நடத்தி வரும் ஹொட்டலில் நிரோசன் தினமும் சாப்பிட செல்வதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் இவர்கள் இருவருக்குமிடையில் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
நிரோசனின் உறவினர்கள் வெளிநாடுகளில் வசித்து வருவதாகவும், அவர்கள் நிரோசனின் செலவுக்கு பணம் அனுப்புவதாக தெரிவிக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி ஜெகன் ஹொட்டல் நடத்துவதற்கு நிரோசன் அதிகளவில் பணம் கடனாக கொடுத்துள்ளார்.
இந்த நிலையில், ஜெகன் தீபாவளி தினத்தன்று தனது அக்கா வீட்டிற்கு சாப்பிட வருமாறு கூறி நிரோசனை அழைத்துச் சென்றுள்ளார்.
அங்கு ரவி என்பவர் நடத்தி வரும் விடுதியில் நிரோசனை அடைத்து வைத்து, ஜெகன் மற்றும் அவரது நண்பர்கள் ரவி, தினேஷ் ஆகியோர் சரமாரியாக தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 3 நாட்களாக நிரோசனை அடைத்து வைத்து 3 பேரும் தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது. பின் அவரிடமிருந்த ஏ.டி.எம். கார்ட் மூலம் 30 ஆயிரம் ருபா பணத்தை எடுத்துள்ளனர்.
மேலும் 10 லட்சம் ருபா கேட்டு நிரோசனை தொடர்ந்தும் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அப்போது தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை எனவும், வெளியே விட்டால் நண்பர்களிடமிருந்து எப்படியாவது பணம் வாங்கி தருவதாக கூறியுள்ளார். இதையடுத்து நிரோசனை விடுவித்துள்ளனர்.
அங்கிருந்து தப்பிச் சென்ற நிரோசன் வளசரவாக்கம் பொலிஸ் நிலையத்தில் நண்பர்கள் தன்னை கடத்தி 10 லட்சம் ருபா கேட்டு மிரட்டுவதாக முறைப்பாடு செய்துள்ளார்.
அதன்பேரில் வளசரவாக்கம் பொலிஸார் வழக்குப் பதிவு செய்து மதுரவாயலில் உள்ள விடுதியில் தங்கியிருந்த ஜெகன் (வயது-29), அவரது நண்பர்கள் ரவி (வயது-32), தினேஷ் (வயது-35) ஆகிய 3 பேரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர் என இந்திய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszARZKXmp5.html

Geen opmerkingen:

Een reactie posten