[ புதன்கிழமை, 08 ஒக்ரோபர் 2014, 05:34.20 AM GMT ]
2014 ஆம் ஆண்டு ஊவா மாகாண சபைத் தேர்தலில் தெரிவான ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளில் பிரதிநிதிகள் கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளனர்.
முற்பகல் 10.09 என்ற சுபநேரத்தில் ஆரம்பமாகும் கூட்டத்தில் ஊவா மாகாண ஆளுநர் சீ. நந்தா மெத்யூ கலந்து கொள்கிறார்.
ஊவா மாகாண சபைக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி ஆகியவற்றின் சார்பில் 5 தமிழர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
ஐக்கிய தேசியக் கட்சி 13 உறுப்பினர்களை கொண்டுள்ளதுடன் மாகாண எதிர்க்கட்சித் தலைவராக ஹரின் பெர்ணான்டோ தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இலங்கையில் மாகாண சபைகள் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து ஊவா மாகாண சபைக்கு 6 முறை தேர்தல் நடத்தப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszATcKWmx0.html
ஆளும் கட்சிக்கு பக்கச்சார்பாக செயற்பட்டு வரும் அரச அதிகாரிகள் பற்றிய தகவல்கள் திரட்டப்படும்: ஐ.தே.க
[ புதன்கிழமை, 08 ஒக்ரோபர் 2014, 05:40.43 AM GMT ]
தேர்தல்களின் போது ஆளும் கட்சிக்கு ஆதரவான முறையில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் சகல அரச அதிகாரிகள் பற்றியும் தகவல்கள் திரட்ட விசேட குழுவொன்றினை ஐக்கிய தேசியக் கட்சி நியமித்துள்ளது.
தகவல் திரட்டுவதற்கு நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்திக்கொள்ளப்பட உள்ளது.
பக்கச்சார்பாக செயற்பட்டு வரும் அரச அதிகாரிகள் தொடர்பில் பொதுமக்களின் ஆதரவினையும் பெற்றுக்கொள்ள உத்தேசித்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
அரச நிர்வாக சட்டங்கள் அல்லது தேர்தல் சட்டங்களை மீறிச் செயற்பட்டு வரும் அதிகாரிகள் தொடர்பில் கட்சியின் தலைமையகமான சிறிகொத்த்தாவில் அமைந்துள்ள இலக்கம் 400 கோட்டே வீதி பிடகோட்டே ஸ்ரீ ஜயவர்தனபுர என்ற முகவரிக்கு தகவல்களை அனுப்பி வைக்க முடியும்.
0112865374, 0112865375 என்ற தொலைபேசி இலக்கங்கள் அல்லது 0112865374, 0112865380 என்ற பக்ஸ் இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு தகவல்களை வழங்க முடியும் என குறிப்பிட்டுள்ளார்.
தேசிய ரீதியான தேர்தல்களின் போது ஆளும் கட்சி அரச சொத்துக்களை துஸ்பிரயோகம் செய்யக் கூடும் என்ற அச்சம் காரணமாக இவ்வாறு தகவல்கள் திரட்டப்பட்டு வருவதாக சிங்கள ஊடகமொன்றுக்கு திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszATcKWmx1.html
எல்பின்ஸ்டன் கலை அரங்கத்திற்கு காமினி பொன்சேகாவின் பெயர் சூட்டப்பட உள்ளது
[ புதன்கிழமை, 08 ஒக்ரோபர் 2014, 05:46.35 AM GMT ]
காமினி பொன்சேகா கலைத்துறையில் மாத்திரமல்லாது அரசியல் துறையிலும் சிறந்த பாத்திரமாக விளங்கியதுடன் சபாநாயகராகவும் பதவி வகித்துள்ளார்.
அவர் நாட்டுக்கு அற்றிய பங்களிப்புக்காக அவரது பெயரை எல்பின்ஸ்டன் அரங்கத்திற்கு சூட்ட தீர்மானித்துள்ளதாக கலாசார மற்றும் கலைத்துறை அமைச்சர் டி.பி. ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
எல்பின்ஸ்டன் அரங்கம் ஒரு காலத்தில் திரையரங்கமாக இருந்து வந்ததுடன் அதில் தமிழ் திரைப்படங்கள் திரையிடப்பட்டன.
எம். ஆர். ராதா நடித்த ரத்தக்கண்ணீர் திரைப்படம் உட்பட பல தமிழ்த் திரைப்படங்கள் இந்த திரையரங்கத்தில் திரைப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னர், இந்த திரையரங்கம் கலை அரங்கமாக மாற்றப்பட்டது.
http://www.tamilwin.com/show-RUmszATcKWmx2.html
சிரியா மற்றும் ஈராக் போன்ற நிலைமைகளே இலங்கையில் காணப்பட்டது: அரசாங்கம்
[ புதன்கிழமை, 08 ஒக்ரோபர் 2014, 06:03.15 AM GMT ]
சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் சம்பந்தமான சர்வதேச இணக்கப்பாடுகள் மற்றும் அதனுடன் இணைந்த இலங்கையின் செயற்பாடுகள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் விசாரணைக் கூட்டத்தில் கருத்து வெளியிட்ட ஜெனிவாவுக்கான இலங்கையில் தூதுவர் ரவிநாத் ஆரியசிங்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.
2003 ஆம் ஆண்டுக்கு பிறகு இலங்கை தொடர்பில் இந்த விசாரணை நடத்தப்படுவது இதுவே முதல் முறையாகும்.
அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட ஆரியசிங்க,
இலங்கையில் இன்னும் பயங்கரவாத அச்சுறுத்தல்கள் தொடர்ந்த வண்ணமே உள்ளன. இவ்வாறான நிலைமையில், பயங்கரவாத தடைச் சட்டத்தை தொடர்ந்தும் அமுலில் வைத்திருக்கும் தேவை உள்ளது எனக் கூறியுள்ளார்.
அதேவேளை இலங்கை பாதுகாப்பு அமைச்சின் சார்பில் விசாரணைக் கூட்டத்தில் உரையாற்றிய, சசிகலா பிரேமவர்தன, விடுதலைப்புலிகளின் உறுப்பினர் வெளிநாடுகளில் மீண்டும் ஒன்றிணைந்து வருகின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணைக்குழுவில் அங்கம் வகிக்கும் பல நாடுகளில் பிரதிநிதிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டமை சிறப்பம்சமாகும்.
அங்கு உரையாற்றிய பல நாடுகளில் பிரதிநிதிகள், இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்து கடும் கேள்விகளை விடுத்தடுத்தனர்.
குறிப்பாக இலங்கையில் பெண்களுக்கு எதிரான வன்முறை தொடர்ந்தும் நாளுக்கு நாள் அதிகரிப்பதாகவும் வெள்ளை வான் கடத்தல் உட்பட பலவந்தமாக காணாமல் போக செய்தல் பரவலாக நடப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதனிடையே இலங்கையில் நடக்கும் காணாமல் போகும் சம்பவங்கள், சித்திரவதைகள், ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு எதிரான செயற்பாடுகள் உள்ளிட்ட விடயங்களை தொடர்பாக தெளிவுப்படுத்துவதற்காக சர்வதேச மன்னிப்புச் சபை நேற்று காலை ஜெனிவாவில் ஆர்ப்பாட்டம் ஒன்றையும் கூட்டம் ஒன்றையும் நடத்தியது.
மனித உரிமை சபையின் கூட்டத் தொடருடன் நடைபெறும் கருத்தரங்கில் இலங்கையை சேர்ந்த 8 அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர்.
காணாமல் போயுள்ள ஊடகவியலாளர் பிரகீத் ஹெக்நோலிய கொடவின் மனைவி சந்தியா ஹெக்நேலிய கொட, திருகோணமலையில் கொலை செய்யப்பட்ட மருத்துவ மாணவரின் தந்தையான மருத்துவர் மனோகரன் ஆகியோர் இதில் கலந்து கொண்டுள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmszATcKWmx3.html
Geen opmerkingen:
Een reactie posten