[ புதன்கிழமை, 08 ஒக்ரோபர் 2014, 06:38.17 AM GMT ]
இந்த பாராட்டுப் பரிசு வழங்கும் நிகழ்வு நேற்று கிளிநொச்சி படைகளில் தலைமையகத்தில் கிளிநொச்சி இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க தலைமையில் நடைபெற்றது.
மாங்குளம் பிரதேசத்தில் கடந்த 2 ஆம் திகதி சேவையில் ஈடுபட்டிருந்த 57வது படைப் பிரிவு மற்றும் 3வது கஜபா படைப் பிரிவின் அதிகாரிகள் பிரதேசத்தை சுத்தப்படுத்தும் பணிகளை மேற்கொண்டனர்.
அப்போது பிரதேசத்தில் உள்ள கிணறு ஒன்றில் பிள்ளை விழுந்துள்ளதுடன், காப்பாற்றுமாறு தாய் கதறி அழுததுடன் இராணுவத்தினரின் உதவியை கோரியுள்ளார்.
உடனடியாக செயற்பட்ட கோப்ரல் எம்.டப்ளியூ. விஜித பெரேரா, கோப்ரல் டி.எம். லீலாரத்ன ஆகியோர் கிணற்றிக்குள் குதித்து சிவக்குமார் சிந்துஜன் என்ற பிள்ளையை காப்பாற்றியதுடன் குழந்தை குடித்திருந்த தண்ணீரை வெளியேற்றியுள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmszATcKWmx5.html
ஜனாதிபதி மஹிந்தவிடம் குறைகள் இருக்கலாம்: பசில்- இடதுசாரிகள் பொது வேட்பாளராக குமார் குணரட்னம்?
[ புதன்கிழமை, 08 ஒக்ரோபர் 2014, 06:04.51 AM GMT ]
களனி மஹர கடவத்தை பிரதேசத்தில் அண்மையில் நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர் கூட்டமொன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
உலகில் குறைபாடுகள் அற்ற எவரும் கிடையாது. ஜனாதிபதியிடமும் என்னிடம் அமைச்சர் மேர்வின் சில்வாவிடமும் குறைபாடுகள் இருக்கலாம்.
அவ்வாறான பிழைகள் குறைபாடுகளை அமைதியான முறையில் திருத்திக்கொள்ள முடியும்.
2005ம் ஆண்டில் ஜனாதிபதி தேர்தல் நடைபெற்ற போது மஹிந்தவிற்கு முடியாது என்றார்கள். தேர்தலில் வெற்றியீட்டினார்.
தமிழீழ விடுதலைப் புலிகளை தோற்கடிக்க முடியாது என்றார்கள். இலகுவில் புலிகள் தோற்கடிக்கப்பட்டனர்.
நாடாளுமன்றில் பெரும்பான்மை பலத்தைப் பெற்றுக்கொள்ள முடியாது என்றார்கள் அதனையும் செய்து காட்டினார்.
பொதுத் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தைப் பெற்றுக்கொள்ள முடியாது என்றார்கள். மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் கிடைக்கப்பெற்றது.
உலகத் தலைவர்கள் இலங்கைக்கு விஜயம் செய்ய மாட்டார்கள் என கூறினார்கள். ஜப்பான் சீனா உள்ளிட்ட தலைவர்கள் இலங்கைக்கு விஜயம் செய்தார்கள்.
தற்போது மஹிந்தவிற்கு மூன்றாம் தடவை போட்டியிட முடியாது என்கிறார்கள் சிலர். போட்டியிட்டாலும் வெற்றியீட்ட முடியாது என்கிறார்கள்.
ஜனாதிபதி மூன்றாம் தவணைக்காக போட்டியிடுவார். போட்டியிட்டு இலகுவில் வெற்றியீட்டுவார்.
நாட்டின் பெரும்பான்மையான மக்கள் ஜனாதிபதியுடன் கைகோர்த்துக் கொண்டுள்ளனர் என பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இடதுசாரிகள் பொது வேட்பாளராக குமார் குணரட்னம்?
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் இடதுசாரி கட்சிகளில் பொது வேட்பாளராக முன்னிலை சோசலிசக் கட்சியின் தலைவர்களில் ஒருவரான குமார் குணரட்னத்தை நிறுத்துவதற்கான தயார் நிலைகள் இருப்பதாக அந்த கட்சியின் உறுப்பினரான துமிந்த நாகமுவ தெரிவித்துள்ளார்.
இவ்வாறான சந்தர்ப்பத்தில் குமார் குணரட்னத்தின் தலைமைத்துவம் இடதுசாரிகளுக்கு அவசியம் எனவும் அவர் கூறியுள்ளார்.
முன்னிலை சோசலிசக் கட்சி அவுஸ்திரேலியாவில் இருக்கும் குமார் குணரட்னத்தை இலங்கைக்கு வரவழைக்க நடவடிக்கை எடுத்து வருகிறது என்றும் துமிந்த நாகமுவ குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszATcKWmx4.html
Geen opmerkingen:
Een reactie posten