தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 23 oktober 2014

பிரபாகரனை கொலை செய்ய ஐ.தே.க திட்டம் தீட்டியது: போட்டுடைத்தார் சஜித்

விடுதலைப் புலி செயற்பாட்டாளர்களுக்கு கனடா, சுவிஸ் வீசா! அரசாங்கம் விசாரணை
[ வியாழக்கிழமை, 23 ஒக்ரோபர் 2014, 02:42.43 AM GMT ]
விடுதலைப் புலிகளின் செயற்பாட்டாளர்களுக்கு கனடா மற்றும் சுவிட்சர்லாந்து நாடுகள் தடையின்றி வீசா வழங்கும் விவகாரம் குறித்து அரசாங்கம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
இலங்கையில் இருக்கும் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் மற்றும் அவர்களின் முன்னாள் செயற்பாட்டாளர்கள் அண்மைக்காலமாக நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர்.
அவர்களுக்கு கனடா மற்றும் சுவிட்சர்லாந்துக்கான வீசா இலகுவாக கிடைப்பதாக கூறப்படுகின்றது.
இது தொடர்பாக பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் உயர் அதிகாரிகள் அரசாங்கத்திடம் முறைப்பாடு செய்துள்ளதாக இன்றைய திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
புலனாய்வுப் பிரிவினரின் முறைப்பாட்டை அடுத்து அரசாங்கம் இதற்கெதிரான ராஜதந்திர நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. மேலும் இது தொடர்பில் புலனாய்வுப் பிரிவினரும் தனியாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் திவயின பத்திரிகை செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszARXKWev5.html
பிரபாகரனை கொலை செய்ய ஐ.தே.க திட்டம் தீட்டியது: போட்டுடைத்தார் சஜித்
[ வியாழக்கிழமை, 23 ஒக்ரோபர் 2014, 02:29.50 AM GMT ]
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை கொலை செய்வதற்கு இரண்டாம் நிலைத் தலைவர் மாத்தையாவிற்கு ஐக்கிய தேசியக் கட்சி ஆயுதம் வழங்கியது என கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
போர் இடம்பெற்ற காலத்தில் பிரபாகரனுக்கும் மாத்தையாவிற்கும் இடையில் முரண்பாட்டு நிலைமை ஏற்பட்டது.
இந்த முரண்பாட்டை பயன்படுத்தி பிரபாகரனை கொலை செய்ய ஐக்கிய தேசியக் கட்சி தீட்டம் தீட்டியது. இதற்காக மாத்தையாவிற்கு ஐக்கிய தேசியக் கட்சி ஆயுதங்களையும் பணத்தையும் வழங்கியது.
மாத்தையாவின் ஊடாக பிரபாகரனை கொலை செய்து போரை முடிவுக்குக் கொண்டு வருவதே ஐக்கிய தேசியக்கட்சியின் திட்டமாக அமைந்திருந்தது.
இந்த திட்டம் வெற்றியளித்திருந்தால் ஆயிரக்கணக்கான உயிர்களை பாதுகாத்திருக்க முடியும். எனினும் துரதிஸ்டவசமாக இந்த திட்டம் தோல்வியடைந்தது.
தமிழீழ விடுதலைப் புலிகள் மாத்தையாவை கொலை செய்தனர். போரின் போது வகுக்கப்படும் அனைத்து திட்டங்களும் வெற்றியளிப்பதில்லை.
போர் தந்திரோபாயங்கள் வெற்றியளித்தால் மக்கள் பாராட்டுவார்கள்.
தோல்வியடைந்தால் எல்லோரியுடைய விமர்சனங்களையும் எதிர்நோக்க நேரிடும். இதுவே உலக நியதி என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
அண்மையில் சூரியவௌ ரன்முதுவௌ என்னும் இடத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszARXKWev3.html

Geen opmerkingen:

Een reactie posten