தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 23 oktober 2014

புலிகளுக்கு எதிரான நடவடிக்கையில் அரசாங்கம் ஆர்வமில்லை! நிலாப்தீன் குற்றச்சாட்டு!

குத்துவெட்டுகள் தான் எங்கள் தலைவிதி! அமைச்சர் ஜனகவின் கவலை
[ வியாழக்கிழமை, 23 ஒக்ரோபர் 2014, 02:08.45 AM GMT ]
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்காக பாடுபட்டு உழைத்த தனது தகப்பனாரைப் போன்றே தனக்கும் கட்சிக்கும் குத்துவெட்டுகள் நடக்கிறது என்று அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் கவலை தெரிவித்துள்ளார்.
நேற்று மாத்தளை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மத்திய குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர் தென்னகோன்,
எனது அப்பா ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆரம்ப கால உறுப்பினர். கவிதைகள் அடங்கிய பத்திரிகை விற்பனை மூலம் தான் அவர் கஷ்டப்பட்டு தனக்கான வருமானத்தைத் தேடிக் கொண்டார்.
கட்சிக்குள் ஏராளம் வெத்துகுட்டுக்களை அவர் எதிர்கொள்ள நேரிட்டது. எல்லாவற்றையும் சகித்துக் கொண்டு கட்சிக்காக தியாகத்துடன் செயலாற்றிய காரணத்தால் கடைசியில் அமைச்சுப் பதவியும் அவரைத் தேடி வந்தது.
அது போலவே இப்போது நானும் அமைச்சுப் பதவியை பெற்றுள்ளேன். எனினும் எனக்கு இன்னும் வெட்டுக் குத்துகள்தான். கட்சியை விட்டு வெளியேறுமாறு பலரும் ஆலோசனை கூறுகின்றார்கள்.
ஆனால் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக் காலத்தில் மாத்தளையில் அலிக் அலுவிகாரே நடத்திய காட்டுத்தா்பார் காரணமாக எனது ஆதரவாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டார்கள். இந்தக் கட்சியில் தொடர்ந்தும் இருப்பதுதான் அவர்களுக்காக நான் செய்யும் நன்றிக் கடனாகும்.
நாங்கள் பிறந்தது தொடக்கம் கட்சியில் இருந்தவர்கள். கட்சிக்காக பாரிய தியாகங்களைச் செய்தவர்கள். அதே போலவே இதே கட்சிக்காரனாகவே சாகும் வரை இருப்பேன்.
காசு, பணத்துக்காக கட்சி மாறமாட்டேன் என்றும் அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.
மைத்திரிபால சிறிசேனவிற்கு பிரதமர் பதவியை வழங்குமாறு கோரிக்கை
[ வியாழக்கிழமை, 23 ஒக்ரோபர் 2014, 02:15.12 AM GMT ]
சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேனாவிற்கு பிரதமர் பதவியை வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படுவதற்கு முன்னதாக பிரதமர் பதவியை மைத்திரிபால சிறிசேனாவிற்கு வழங்குமாறு பொலனறுவை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தொகுதி அமைப்பாளர் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போது சிரேஸ்ட அமைச்சர்கள் சிலர் கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
அமைச்சர் மைத்திரிபால சிறிசேன, திஸ்ஸ கரலியத்த, மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க ஆகியோர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.
ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக பிரதமர் பதவியில் மாற்றம் ஏற்படுத்தப்பட உள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தன.
ஜனாதிபதி குடும்ப அரசியலில் ஈடுபட்டு வருவதாக சுமத்தப்பட்டு வரும் குற்றச்சாட்டுக்களை பொய்ப்பிக்கும் நோக்கில் பிரதமர் பதவியை பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவிற்கு வழங்காது, அமைச்சர் மைத்திரிபால சிறிசேனாவிற்கு வழங்குவது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாக கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, தாம் தேக ஆரோக்கியத்துடன் வாழ்ந்து வருவதாகவும் பதவியை வகிக்கத் தயார் எனவும் தற்போதைய பிரதமர் டி.எம். ஜயரட்ன தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszARXKWev0.html

ஆளுங்கட்சியினர் நடிப்பிலும் வல்லவர்கள்! சினிமாவிலும் வாய்ப்பு
[ வியாழக்கிழமை, 23 ஒக்ரோபர் 2014, 02:19.05 AM GMT ]
ஆளுங்கட்சியினரின் அபார நடிப்பாற்றல் காரணமாக அமைச்சர்களுக்கு ஒருவர் பின் ஒருவராக சினிமா வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றது.
இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ள பொருளாதார மற்றும் ஏனைய நெருக்கடிகளின் காரணமாக நாடு பற்றியெரியும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
எனினும் ஆளுங்கட்சியின் அமைச்சர்களோ ஆசியாவின் ஆச்சர்யம் என்ற கனவை விதைத்து, பொதுமக்கள் மத்தியில் அற்புதமாக நடித்துக் கொண்டிருக்கின்றார்கள். ஜனாதிபதி இந்த நடிகர்களின் நாயகனாக கோலோச்சிக் கொண்டிருக்கின்றார்.
அமைச்சர்களின் நடிப்பாற்றல் கண்டு வியந்து போயுள்ள சிங்கள சினிமா மற்றும் தொலைக்காட்சி இயக்குனர்கள் தற்போது தமது புதிய திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களில் அமைச்சர்களுக்கு முக்கிய வேடம் அளிக்கத் தொடங்கியுள்ளார்கள்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்க்கட்சி வரிசை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்திருந்தார்.
அதன் பின்னர் அண்மைக் காலத்தில் புதிதாக ஒரு தொலைக்காட்சித் தொடரில் நடிக்க இணங்கியுள்ளார். ஜனாதிபதியின் புதல்வர் நாமல் ராஜபக்ஷவும் திரைப்படம் ஒன்றில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதே போன்று அமைச்சர் மேர்வின் சில்வா துட்டகைமுனு பற்றிய திரைப்படம் ஒன்றில் துட்டகைமுனுவாக நடித்திருந்தார். அதன் பின் அமைச்சர் குமார வெல்கம உள்ளிட்ட பலருக்கும் நடிப்பதற்கான வாய்ப்புகள் தேடி வந்தது.
இதே போன்று அமைச்சர் ரோஹித அபேகுணவர்த்தனவுக்கும் தற்போது தொலைக்காட்சித் தொடர் ஒன்றில் முக்கிய வேடம் கிடைத்துள்ளது.
ஸ்வர்ணவாஹினி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் களு அரலிய தொலைக்காட்சித் தொடரில் எதிரிசூரிய எனும் பொலிஸ் உயரதிகாரி வேடத்தில் அவர் நடித்துள்ளார்.
இதிலுள்ள முரண்பாடு என்னவென்றால் அரசியலுக்கு வருவதற்கு முன்னர் புகையிரதங்களில் பெண்களின் நகைகளை கொள்ளைடியத்தவர் என்று அமைச்சர் அபேகுணவர்த்தன தொடர்பில் கூறப்படுகின்றது. அவர் பொலிஸ் அதிகாரியாக நடித்திருப்பது பலருக்கும் சிரிப்பை வரவழைத்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszARXKWev1.html
மஹிந்தவுக்குத் தொடர்ந்தும் ஆதரவா? சமசமாஜக் கட்சி நாளை தீர்மானம்
[ வியாழக்கிழமை, 23 ஒக்ரோபர் 2014, 02:29.11 AM GMT ]
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்குத் தொடர்ந்தும் ஆதரவளிப்பதா, இல்லையா என்பது குறித்து நாளை கலந்தாலோசிக்கவுள்ளதாக சமசமாஜக் கட்சி அறிவித்துள்ளது.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவளிப்பதா, இல்லையா என்பது ஆராய்வது நாளைய கலந்துரையாடலின் முக்கிய நோக்கம் என்று சிரேஷ்ட அமைச்சர் திஸ்ஸ வித்தாரண தெரிவித்துள்ளார்.
நிறைவேற்று அதிகார முறையை ரத்துச் செய்யுமாறு தனது கட்சி உள்ளிட்ட இடதுசாரிக் கட்சிகள் தொடர்ந்தும் ஜனாதிபதியை வலியுறுத்தி வருகின்ற போதிலும், ஜனாதிபதி அது தொடர்பில் கரிசனை காட்டவில்லை என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தொடர்ந்தும் அரசுக்கு ஆதரவளிப்பதற்கும், ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவளிப்பதற்கும் சமசமாஜக் கட்சி சில நிபந்தனைகளை முன்வைக்கும் என்று கூறப்படுகின்றது.
17வது திருத்தச் சட்டத்தை நடைமுறைக்கு கொண்டுவந்து சுயாதீன ஆணைக்குழுக்களை மீள உருவாக்கல், தேர்தல் முறையில் மாற்றம், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியை ரத்துச்செய்தல் என்பன அந்த நிபந்தனைகளாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
http://www.tamilwin.com/show-RUmszARXKWev2.html
புலிகளுக்கு எதிரான நடவடிக்கையில் அரசாங்கம் ஆர்வமில்லை! நிலாப்தீன் குற்றச்சாட்டு
[ வியாழக்கிழமை, 23 ஒக்ரோபர் 2014, 02:37.59 AM GMT ]
விடுதலைப் புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை தொடர்வதில் அரசாங்கத்துக்கு ஆர்வம் இல்லாதிருப்பதாக பொலிஸ் அதிகாரி நிலாப்தீன் குற்றம் சாட்டியுள்ளார்.
பயங்கரவாத தடுப்புப் பிரிவின் முன்னாள் முக்கிய அதிகாரியாக இருந்தவர் பொலிஸ் பரிசோதகர் நிலாப்தீன். இவரது தனிப்பட்ட புலனாய்வு நடவடிக்கைகளின் மூலம் விடுதலைப் புலிகளின் சுமார் 160 தாக்குதல் நடவடிக்கைகள் முன்கூட்டியே முறியடிக்கப்பட்டன.
எனினும் பின்வந்த காலப்பகுதியில் விடுதலைப்புலிகளால் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்ட நிலையில் அரசாங்கம் அவரைக் கைவிட்டிருந்தது. அதன் பின் அவர் நீண்டகாலமாக தலைமறைவாக இருந்து வருகின்றார்.
இந்நிலையில் புலிகளுக்கு விதிக்கப்பட்ட தடை ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தில் நீக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் அவர் திவயின சிங்களப் பத்திரிகையை தொடர்பு கொண்டுள்ளார்.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான சாட்சியங்களுடன் தான் ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் செல்ல முயன்றதாகவும், அரசாங்கமும், பொலிசாரும் தனக்கு போதுமான ஆதரவை வழங்கவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
மத்திய வங்கி குண்டுத் தாக்குதலின் போது விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் கைரேகையை தான் தேடிக் கண்டுபிடித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கான பரிசையும் பொலிஸ் திணைக்களம் தனக்கு வழங்காமல் ஏமாற்றி விட்டதாகவும் நிலாப்தீன் தொடர்ந்தும் குற்றம் சாட்டியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszARXKWev4.html

Geen opmerkingen:

Een reactie posten