தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 23 oktober 2014

18ம் திருத்தச்சட்டத்துக்கு ஆதரவளித்தது குறித்து வெட்கப்படுகின்றேன்! வசந்த சேனநாயக்க

12 மில்லியன் ரூபாயில் பல்கலைக்கழக பட்டம்: மாணவர் ஒன்றியம் குற்றச்சாட்டு
[ வியாழக்கிழமை, 23 ஒக்ரோபர் 2014, 03:11.43 AM GMT ]
தமது கோரிக்கைகள் வெற்றி பெறும் வரை போராட்டங்களை முன்னெடுக்கப் போவதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் எச்சரித்துள்ளது.
இந்தநிலையில் தமது போராட்டத்துக்கு விவசாயிகள், மீனவர்கள் மற்றும் தொழிலாளர் பிரதிநிதிகளையும் இணைத்துக் கொள்ளப் போவதாக ஒன்றியம் அறிவித்துள்ளது.
இறுதியாக இரண்டு நாட்களுக்கு முன்னர் ஒன்றியத்தினர் நடத்திய போராட்டத்தின்மீது நாடாளுன்ற பிரதேசத்தில் வைத்து கண்ணீர் புகைக்குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.
எனினும் இவ்வாறான செயற்பாடுகள் தமது போராட்டத்துக்கு தடைகளை ஏற்படுத்தாது என்று அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய அழைப்பாளர் நஜித் இந்திக தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது அவர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.
தனியார் பல்கலைக்கழகங்களை மூடவேண்டும், மாலபே தனியார் பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்கப்படும் 5000ரூபா புலமைப் பரிசில் நிறுத்தப்பட வேண்டும்.
பல்கலைக்கழக பட்டங்கள் பணத்துக்கு விற்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகளையே மாணவர்கள் முன்வைத்துள்ளனர்.
இதேவேளை கல்விப் பொதுத்தராதர உயர்தரத்தில் சித்தியெய்தாதவர்களும் 12 மில்லியன் ரூபாய்களை செலவழித்து பட்டம் பெறும் வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதாக அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
தமது போராட்டத்தின்போது நேற்று முன்தினம் பொலிஸார் நடத்திய தாக்குதலில் 12 மாணவர்கள் காயமடைந்ததாகவும் இந்திக குறிப்பிட்டார்.
http://www.tamilwin.com/show-RUmszARXKWev6.html

சோபித தேரரின் கலையாத கனவு! தேர்தலில் போட்டியிட தொடர் முயற்சி (செய்தித் துளிகள்)
[ வியாழக்கிழமை, 23 ஒக்ரோபர் 2014, 03:16.44 AM GMT ]
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது அபேட்சகராக போட்டியிடுவதற்கான முயற்சியில் மாதுளுவாவே சோபித தேரர் தொடர்ந்தும் ஈடுபட்டுள்ளார்.
நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் என்ற அமைப்பின் தலைவரான மாதுளுவாவே சோபித தேரர் கோட்டே நாகவிகாரையின் விகாராதிபதியாக இருக்கின்றார்.
இவற்றின் மூலம் கிடைத்த பிரபல்யத்தைப் பயன்படுத்தி அவர் ஜனாதிபதித் தேர்தலில் பொது அபேட்சகராக களமிறங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
எனினும் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் ரணில் விக்கிரமசிங்க தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து பல கட்சிகளும் அவருக்கு ஆதரவைத் தெரிவித்துள்ளன.
இதன் காரணமாக எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் தேர்தலில் போட்டியிடும் சோபித தேரரின் எதிர்பார்ப்பு கைகூடவில்லை.
எனினும் சோபித தேரர் தனது முயற்சியில் இருந்து இதுவரை பின்வாங்கவில்லை. நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் சார்பில் நடத்தப்படும் கூட்டங்களின் மூலம் ஜனாதிபதித் தேர்தலின் பொது வேட்பாளராகவே தன்னை அவர் அறிமுகப்படுத்திக் கொள்கின்றார்.
எதிர்வரும் நாட்களில் எதிர்க்கட்சிகளின் போதுமான வரவேற்பு கிடைக்காத பட்சத்தில், கடைசி கட்டமாகவே ரணிலுக்கு ஆதரவு வழங்குவது என்று அவர் தீர்மானித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் விட்டுக்கொடுப்புக்கு தயாரில்லை- ரத்தன தேரர்
19வது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பான தமது கட்சியின் கொள்கையை எந்தவிலைக்கும் விற்க தயாரில்லை என்று ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.
கொழும்பில் செய்தியாளர்கள் மத்தியில் உரையாற்றிய அவர்,
தமது கட்சியின் அரசியல் அமைப்பு திருத்த யோசனை தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடியதாக குறிப்பிட்டார். இதன்போது குழு ஒன்றை நியமித்து அது தொடர்பாக ஆராய்வதாக ஜனாதிபதி உறுதியளித்ததாக தேரர் தெரிவித்தார்.
அந்தக்குழு தமது பரிந்துரையை ஐந்து நாட்களுக்குள் வழங்கவுள்ளது. எனினும் இதற்கிடையில் இடைக்கால உடன்பாடுகளுக்கு செல்ல தமது கட்சி தயாரில்லை என்று ரத்தன தேரர் கூறினார்.
பதவிகளுக்காக நாட்டின் நலனுக்கு துரோகமிழைக்க முடியாது! அமைச்சர் நவீன் திசாநாயக்க
அற்ப பதவிகளுக்காக நாட்டின் நலனுக்குத் துரோகம் இழைக்க முடியாது என்று அமைச்சர் நவீன் திசாநாயக்க வலியுறுத்தியுள்ளார்.
மறைந்த எதிர்க்கட்சித் தலைவர் காமினி திசாநாயக்கவின் நினைவு தினம் நேற்று கொழும்பில் அனுஷ்டிக்கப்பட்டது. இந்த வைபவத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் நவீன் திசாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
எனது தந்தை காமினி திசாநாயக்க எப்போதும் பதவிகளை விட நாட்டு நலனுக்கு முக்கியத்துவம் அளித்தவர். ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவின் குடியுரிமை பறிக்கப்பட்டபோது ஆளுங்கட்சியில் இருந்து கொண்டே அதனை எதிர்த்தார்.
பின்னர் ஜனாதிபதி பிரேமதாசவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்து, தனது அமைச்சுப் பதவி, நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளையும் தியாகம் செய்தார்.
அதே போன்று நாடு கடும் நெருக்கடியை எதிர்கொண்ட நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ஏற்றுக் கொண்டார். துணிந்து ஜனாதிபதித் தேர்தலிலும் போட்டியிட்டார்.
அவரது மூத்த புதல்வன் என்ற வகையில் நான் அவர் காட்டித் தந்த வழியை பின்பற்றுகின்றேன். நாட்டின் நலன் என்று வரும்போது பதவிகளைப் பற்றி நான் கவலைப்படுவதில்லை என்றும் அமைச்சர் நவீன் தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் நவீன் திசாநாயக்க அமைச்சுப் பதவியைத் துறந்து, எதிர்க்கட்சிக்கு மாறப் போவதாக செய்திகள் அடிபடும் நிலையில் அவரது உரை அதனை ஆமோதிக்கும் வகையில் அமைந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த வைபவத்தில் அமைச்சர் பசில் ராஜபக்ஷ, ஐக்கிய தேசியக் கட்சி பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
வெளிநாட்டு நாணயங்களை எடுத்துச் செல்ல முயற்சித்த நபர் கைது
சட்டவிரோதமாக நாட்டில் இருந்து வெளிநாட்டு நாணயங்களை எடுத்துச் செல்ல முயற்சித்த நபர் ஒருவர் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சார்ஜா செல்லும் நோக்கில் விமான நிலையத்திற்கு வந்திருந்த கொழும்பு மருதானை பிரதேசத்தை சேர்ந்த வர்த்தகர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடம் இருந்து 60 லட்சத்து 66 ஆயிரத்து 94 ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயங்களும் இலங்கை ரூபாவும் கைப்பற்றப்பட்டுள்ளதாக சுங்க திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் லெஸ்லி காமினி தெரிவித்துள்ளார்.
அமெரிக்க டொலர்கள் மற்றும் யூரோ ஆகிய வெளிநாட்டு நாணயங்களை சந்தேக நபர் எடுத்துச் செல்ல முயற்சித்துள்ளார்.
கைப்பற்றிய பணம் அரசுடமையாக்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபருக்கு இரண்டு லட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszARXKWev7.html
18ம் திருத்தச்சட்டத்துக்கு ஆதரவளித்தது குறித்து வெட்கப்படுகின்றேன்! வசந்த சேனநாயக்க
[ வியாழக்கிழமை, 23 ஒக்ரோபர் 2014, 03:25.52 AM GMT ]
18ம் திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்தது குறித்து வெட்கப்படுவதாக ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த சேனநாயக்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் எதிர்க்கட்சி உறுப்பினர்களையும் ஆளுங்கட்சிக்குள் இழுத்துக் கொண்டு ஜனாதிபதி பதவியின் காலவரையறையை நீடித்துக் கொள்ள உதவும் திருத்தச் சட்டத்தை நிறைவேற்றிக்கொண்டது.
குறித்த திருத்தச் சட்டத்தின் உதவியுடன் தற்போது ஜனாதிபதி மூன்றாவது தடவையாகவும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முயற்சிக்கின்றார். இதற்கிடையே ஜனாதிபதியின் எதேச்சாதிகாரப் போக்கு குறித்து ஆளுங்கட்சிக்குள்ளேயே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இந்நிலையில் ஆளுங்கட்சியின் இளம் நாடாளுமன்ற உறுப்பினரான வசந்த சேனநாயக்க, 18ம் திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்தது குறித்து வெட்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டபோதே அவர் மேற்கண்ட கருத்தைத் தெரிவித்துள்ளார்.
வசந்த சேனநாயக்க மிக விரைவில் ஐக்கிய தேசியக் கட்சியில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதனை உறுதிப்படுத்தும் வகையில் அவரும் தற்போது கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
வசந்த சேனநாயக்கவின் தகப்பனார் ருக்மன் சேனநாயக்க ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் முக்கிய தலைவர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmszARXKWewy.html

Geen opmerkingen:

Een reactie posten