தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 7 oktober 2014

தாமதமின்றி தமிழ் மக்களுக்கு நியாயம் வழங்கவும்: விக்கிரமபாகு வலியுறுத்தல்!

இலங்கையில் பேஸ்புக் துஷ்பிரயோகம்! 1500 கணக்குகள் முடக்கம்
[ செவ்வாய்க்கிழமை, 07 ஒக்ரோபர் 2014, 05:29.12 AM GMT ]
இலங்கையில் பேஸ்புக் துஷ்பிரயோக நடவடிக்கைகள் காரணமாக சுமார் 1500 பேஸ்புக் பயனாளர்கள் தடை செய்யப்பட்டுள்ளனர்.
பேஸ்புக் ஊடாக யுவதிகளை ஏமாற்றுதல் உள்ளிட்ட பல்வேறு மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களின் கணக்குகள் இனங்காணப்பட்டு அவை தடை செய்யப்பட்டுள்ளன.
பேஸ்புக் மோசடிகள் தொடர்பான நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் இலங்கை கணணிசார் அவசர வினையாற்றல் குழு இதற்கான பரிந்துரைகளை செய்திருந்தது. பல்வேறு நபர்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையில் இந்தப் பரிந்துரை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த வருடத்தில் மட்டும் பேஸ்புக் முறைகேடுகள் தொடர்பாக சுமார் 1800 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக குறித்த வினையாற்றல் குழுவின் பொறியியலாளர் ரொஷான் சந்திரகுப்த தெரிவித்துள்ளார். இவற்றில் பெரும்பாலானவை போலிப் பெயர்களில் உருவாக்கப்பட்ட பேஸ்புக் கணக்குகள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் பேஸ்புக் ஊடாக மேற்கொள்ளப்படும் மோசடிகளைத் தடுக்கும் வகையில் கடுமையான சட்டங்களை நடைமுறைப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது பேஸ்புக் மோசடிகள் தொடர்பான முறைப்பாடுகளுக்கு 011 2 691 692 எனும் தொலைபேசி இலக்கத்தில் தொடர்பு கொள்ள முடியும் என்றும் சந்திரகுப்த தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszATbKWmsz.html
துவாரகேஸ்வரன் பிணையில் விடுதலை
[ செவ்வாய்க்கிழமை, 07 ஒக்ரோபர் 2014, 05:33.25 AM GMT ]
ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தியாகராசா துவாரகேஸ்வரன் பிணையில் விடுதலை செய்வதற்கு யாழ். நீதவான் அனுமதி அளித்துள்ளார்.
ஒரு இலட்சம் ரூபாய் சரீர பிணையில் செல்ல நீதவான் பொ.சிவகுமார் நேற்று அனுமதியளித்தார். அத்துடன்,  இது தொடர்பிலான வழக்கை எதிர்வரும் 21 ஆம் திகதிக்கு நீதவான் ஒத்திவைத்துள்ளார்.
துவாரகேஸ்வரனுக்கு சொந்தமான யாழ்.கொழும்பு சேவையில் ஈடுபடும் பஸ் ஒன்று ஏ - 9 வீதி வழியாக செல்லாமல் நல்லூர் செம்மணி வழியாக கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு சென்றபோது பொலிஸார் மறித்து சோதனையிட்டனர்.
பஸ் வழித்தடம் மாறி வந்த குற்றத்துக்காக பொலிஸார் தண்டச்சீட்டு எழுதியபோது, அங்கு வந்த துவாரகேஸ்வரன் தண்டச்சீட்டை கிழித்து எறிந்ததுடன், பொலிஸாரையும் தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார்.
இதனையடுத்து, துவாரகேஸ்வரனை கைதுசெய்த பொலிஸார், நீதவான் முன்னிலையில் நேற்று மாலை ஆஜர்ப்படுத்திய போதே நீதவான் இவ்வுத்தரவினை பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmszATbKWms0.html
மியன்மார் கடற்பரப்பில் உள்ள இலங்கை மீனவர்களுக்கு பாதிப்பில்லை: டீ.எம்.ஆர்.பி திஸாநாயக்க
[ செவ்வாய்க்கிழமை, 07 ஒக்ரோபர் 2014, 05:51.50 AM GMT ]
தெற்கு கடற்பரப்பில் இருந்து கடலுக்குச்சென்ற சந்தர்ப்பத்தில் பலத்த காற்றினால் மியன்மாருக்குள் பிரவேசிப்பதற்கு அனுமதி கோரிய மீனவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என தகவல் கிடைத்துள்ளதாக கடற்றொழில் அமைச்சின் செயலாளர் கலாநிதி டீ.எம்.ஆர்.பி திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
சர்வதேச கடற்பரப்பை அண்மித்த பகுதியில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை தொடர்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
அந்தப் பகுதியில் மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்களை எச்சரிக்கையுடன் செயற்படுமாறு ஏற்கனவே அறிவுறுத்தியுள்ளதாகவும் டீ.எம்.ஆர்.பி திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், மியன்மார் கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட சில இலங்கை மீனவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ள போதிலும், அதற்கும் வானிலைக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சின் செயலாளர் மேலும் சுட்டிக்காட்டினார்.
31 படகுகளில் சென்றுள்ள சுமார் 180 மீனவர்கள் தமது உயிரைப் பாதுகாப்பதற்கு மியன்மார் கடற்பரப்பிற்குள் பிரவேசிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கோரியதாக, திக்வெல்லயில் இருந்து அவர்களுடன் செய்மதி ஊடாக தொடர்பாடல் பரிமாற்றத்திலுள்ள நதுன் தாரக்க தெரிவித்தார்.
இதேவேளை, இந்த விடயம் தொடர்பில் மியன்மாருக்கான இலங்கைத் தூதுவர் எச்.ஆர் பியசிறி கருத்து தெரிவிக்கையில்,
இலங்கை மீனவர்களுடனான சில படகுகள் அந்நாட்டு கடற்பரப்பிற்கு அருகில் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmszATbKWms1.html
தாமதமின்றி தமிழ் மக்களுக்கு நியாயம் வழங்கவும்: விக்கிரமபாகு வலியுறுத்தல்
[ செவ்வாய்க்கிழமை, 07 ஒக்ரோபர் 2014, 06:15.29 AM GMT ]
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நியாயம் வழங்க உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று விக்கிரமபாகு கருணாரத்தின வலியுறுத்தியுள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக நவ சமசமாஜக் கட்சியின் நிலைப்பாடு தொடர்பாக ஊடகங்களுக்கு அவர் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்துள்ள விக்கிரமபாகு,
யுத்த வெற்றி மூலம் இந்த நாட்டுக்கு எதுவித நன்மையும் கிடைக்கவில்லை. தமிழ் மக்கள் மாத்திரமன்றி சிங்கள மக்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
சுமார் 33 ஆயிரம் சிங்களக்குடும்பங்கள் இடம்பெயர்ந்திருந்தார்கள். இந்த நிலையில் யுத்த வெற்றியின் மூலம் இனப்பிரச்சினைக்கான தீர்வும் உருவாகவில்லை.
தமிழ் மக்களுக்கும் எதிர்பார்த்த உரிமைகள் கிட்டவில்லை.  இதன் காரணமாகவே இன்று சர்வதேச அழுத்தங்கள் இலங்கை மீது ஏற்பட்டுள்ளன.
எனவே இன்னொரு ஜனாதிபதித் தேர்தலுக்கு முன் இந்நாட்டில் அனைத்து இனங்களும் சரிசமமாக வாழும் உரிமை நிலைநாட்டப்பட வேண்டும்.
அதற்கான முதல்கட்டமாக இனியும் தாமதிக்காது தமிழ் மக்களின் நியாயமான உரிமைகள் வழங்கப்பட்டு, நியாயம் கிட்ட வழியேற்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszATbKWms3.html

Geen opmerkingen:

Een reactie posten