தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 7 oktober 2014

வேண்டா வெறுப்பாக பாப்பரசரை சந்தித்தாரா ஜனாதிபதி: பரபரப்புத் தகவல்கள் !



பாப்பரசரை சந்திப்பதற்கு சஜின் வாஸ் இற்கு அனுமதி மறுக்கப்பட்டமை காரணமாக ஜனாதிபதியும் வேண்டாவெறுப்புடன் புனித பாப்பரசரை சந்தித்ததாக பரபரப்புத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜனாதிபதியின் வத்திக்கான் விஜயத்தின் போது நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்த்தனவும் அழைத்துச் செல்லப்பட்டிருந்தார்.
எனினும் பிரிட்டனுக்கான தூதுவர் கிறிஸ் நோனிஸ் மீதான தாக்குதல் காரணமாக அவர் புனித பாப்பரசரை சந்திப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.
இதன் காரணமாக ஜனாதிபதி கடும் கோபமடைந்துள்ளார். மேலும் புனித பாப்பரசரை சந்தித்தபோது தயக்கத்துடனேயே கைகுலுக்கிக் கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பொதுவாக புனித பாப்பரசரை சந்திக்கச் செல்லும் அரசியல் தலைவர்கள் கைகுலுக்க கை நீட்டிய பின்னரே புனித பாப்பரசர் கைநீட்டுவது வழக்கமாக உள்ளது.
இந்நிலையில் ஜனாதிபதி மஹிந்தவுடனான சந்திப்பின்போது புனித பாப்பரசர் கைநீட்டிய நிலையிலும், ஜனாதிபதி சிடுசிடு முகபாவத்துடன் காணப்படும் புகைப்படங்கள் சர்வதேச ஊடகங்களில் வெளியாகியுள்ளன.
சஜின் வாஸ் இற்கு அனுமதி மறுக்கப்பட்டதன் காரணமாகவே ஜனாதிபதி அவ்வாறு நடந்து கொண்டதாகவும் இது தொடர்பான செய்திகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszATbKWms2.html

Geen opmerkingen:

Een reactie posten