[ செவ்வாய்க்கிழமை, 07 ஒக்ரோபர் 2014, 03:52.19 AM GMT ]
மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள சவுக்கடிக் கடற்கரையோர புதருக்குள் உருக்குலைந்த நிலையில் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று மாலை இந்த சடலம் மீட்கப்பட்டதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடற்கரையோர புதர்களுக்குள் அழுகிய நிலையில் சடலம் ஒன்று கிடப்பதாக பொதுமக்கள் வழங்கிய தகவலையடுத்து, ஏறாவூர் பொலிஸார் அப்பகுதிக்குச் சென்று சடலத்தை பார்வையிட்டதாக தெரிவித்தனர்.
சல்வார் அணிந்த நிலையில் காணப்படும் இந்தப் பெண்ணின் சடலம் சுமார் 30 வயது மதிக்கத்தக்கதாக இருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தப் பெண் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று தாம் சந்தேகிப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் மேலும் கூறினர்.
http://www.tamilwin.com/show-RUmszATbKWmr3.html
காணாமல் போனோரைக் கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கும் புலிக்காய்ச்சல் பிடிக்குமா?
[ செவ்வாய்க்கிழமை, 07 ஒக்ரோபர் 2014, 04:47.08 AM GMT ]
இலங்கையில் நடைபெற்ற இறுதி யுத்த காலகட்டத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் காணாமல் போனவர்கள் தொடர்பான விவகாரம் கடும் சர்வதேச அழுத்தத்தை ஏற்படுத்தியது.
இதிலிருந்து நழுவிச் செல்லும் நோக்குடன் இலங்கை அரசினால் காணாமல் போனவர்களைக் கண்டறிவதற்காக ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
இந்த விசாரணைக் குழுவின் நடவடிக்கைகளும் தற்போது விடுதலைப் புலிகளுக்கு எதிரான சாட்சியங்களைத் திரட்டும் நோக்கிலேயே அமைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
அதற்கு ஏதுவாக பொதுமக்களிடமிருந்து இராணுவத்திற்கு சாதகமாகவும், விடுதலைப் புலிகளுக்கு எதிராகவும் சில சாட்சியங்களைப் பெற்றுக் கொள்ள ஆணைக்குழு உறுப்பினர்கள் முயற்சித்திருந்தனர்.
ஆணைக்குழுவில் பொதுமக்கள் சாட்சியமளிப்பதற்கு இராணுவத்தினர் உதவியளிப்பதாகவும் செய்திகளை கசியவிட்டிருந்தனர்.
தற்போது விடுதலைப் புலிகளை நேரடியாக குற்றம் சாட்டும் வகையில் காணாமல் போனதாகக் கூறப்படும் இராணுவத்தினர் தொடர்பான விசாரணைகளை ஆரம்பிக்க ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
விடுதலைப் புலிகளுடனான யுத்தம் முடிவடைந்த நிலையில் 1500 இராணுவத்தினர் காணாமற்போயுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் ஆணைக்குழு முன்னிலையில் 5000 இராணுவத்தினர் காணாமற்போயுள்ளதாக புதிய எண்ணிக்கை குறிப்பிடப்பட்டு முறைப்பாடுகள் பதியப்பட்டுள்ளது.
எனவே இந்த ஆணைக்குழுவின் விசாரணை தொடர்பான இறுதி அறிக்கையில் குற்றமிழைத்த இராணுவத்தினரை பாதுகாத்து, விடுதலைப் புலிகள் மீதே பழிபோடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszATbKWmr4.html
சரத் பொன்சேகா கட்சியை உடைக்கும் நடவடிக்கையல் சஜித் பிரேமதாச?- பொதுபல சேனாவிற்கு எதிராக எழும்பும் ஐ.தே.க
[ செவ்வாய்க்கிழமை, 07 ஒக்ரோபர் 2014, 04:49.12 AM GMT ]
ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் பதவிக்கு நியமிக்கப்படும் வரை சஜித் பிரேமதாசவின் அரசியல் செயற்பாடுகள் மந்தகதியில் அமைந்திருந்தன. அவர் அரசாங்கத்துடன் இணைந்து கட்சியை உடைக்கப் போவதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன.
கட்சியின் பிரதித் தலைவர் பதவிக்கு அவர் நியமிக்கப்பட்டது முதல் ஏனைய கட்சிகளை உடைக்கும் வேலைகளில் தற்போது அவர் இறங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதன் ஒரு கட்டமாக சரத் பொன்சேகாவின் கட்சி மாகாண சபை மற்றும் பிரதேச உறுப்பினர்களை தனிப்பட்ட ரீதியில் தொடர்புகொண்டு, அவர்களை ஐ.தே.க.பக்கம் இழுககும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.
அவ்வாறு கட்சி தாவும் உறுப்பினர்களின் எதிர்காலம் குறித்து தான் உத்தரவாதமளிப்பதாகவும், சரத் பொன்சேகாவுடன் இருந்தால் எதிர்காலம் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான தகவல்கள் சரத் பொன்சேகாவுக்கு எட்டியுள்ள நிலையில், சஜித்தின் நடவடிக்கைகள் தொடர்பில் அவர் கடும் ஆத்திரமுற்றுள்ளார்.
மேலும் இதனை உடனடியாக நிறுத்துவதற்குத் தலையிடுமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்திடமும் சரத் பொன்சேகா கோரிக்கை விடுத்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
பொதுபல சேனாவிற்கு எதிராக 65 இலட்சம் வாக்குகளை திரட்ட ஐ.தே.க திட்டம்
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் 65 லட்சம் வாக்குகளைத் திரட்டும் நோக்கில் கட்சியின் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக ஐ.தே.க தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ஐ.தே.க. வின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
கிராமங்கள் தோறும் இதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டு, ஜனாதிபதித் தேர்தலின் போது நாடளாவிய ரீதியில் சுமார் 65 லட்சம் வாக்குகளை கட்சிக்குப் பெற்றுக் கொள்வது தான் நோக்கம்.
இதன் மூலம் சுமார் 80 சதவீத வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்கு ஐ.தே.க வின் எதிர்பார்ப்பாகும்.
கடந்த வாரம் பொதுபல சேனாவின் தேசிய மாநாட்டின் போது அந்த அமைப்பு தம்மிடம் 65 லட்சம் வாக்குகள் இருப்பதாக தம்பட்டம் அடித்திருந்தது.
தாம் கைகாட்டும் ஒருவரே ஜனாதிபதியாக வரமுடியும் என்றும் பொதுபல சேனா இறுமாப்புத் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் ஐ.தே.க. வும் தற்போது 65 லட்சம் வாக்குகள் எண்ணிக்கையை நோக்கி களமிறங்கியுள்ளது.
இது பொது பல சேனா அமைப்பின் நடவடிக்கைக்கு ஏட்டிக்குப்போட்டியாகத் தொடங்கப்பட்டுள்ளதாக கருதப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
இதற்கிடையே எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் பின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கிய அமைச்சர்கள் பலர் ஐ.தே. கவுடன் இணைந்து தேசிய அரசாங்கமொன்றை அமைப்பது குறித்து தற்போது பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் கசிந்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszATbKWmr5.html
மொனராகலையில் ஐஸ்கட்டி மழை
[ செவ்வாய்க்கிழமை, 07 ஒக்ரோபர் 2014, 05:12.21 AM GMT ]
நேற்று நண்பகல் தியத்தலாவை பிரதேசத்தில் கடுமையான ஆலங்கட்டி மழையுடன் ஐஸ்கட்டிகள் விழுந்துள்ளதாக தேசிய இடர்முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.
இதற்கிடையே நேற்று மாலை மொனராகலை மாவட்டத்தின் சில பகுதிகளிலும் கடுமையான ஐஸ்கட்டி மழை பெய்துள்ளது.
குறிப்பாக மொனராகலையின் மாளிகாவில, தம்பேகொட மற்றும் மொனராகலை நகரப் பகுதிகளில் இவ்வாறு ஐஸ்கட்டி மழை பொழிந்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszATbKWmr7.html
அமைச்சர் ஹக்கீமின் வேண்டுதல் அரசால் ஏற்கப்படுமா? உதாசீனப்படுத்தப்படுமா?
[ செவ்வாய்க்கிழமை, 07 ஒக்ரோபர் 2014, 05:20.15 AM GMT ]
இதை அரசு பரிசீலனை செய்யுமா? அல்லது அலட்சியப்படுத்துமா? என்ற கேள்வி தற்பொழுது ஏற்பட்டுள்ளது.
அரசின் பங்காளி கட்சிகளான இடது சாரிக்கட்சிளும் ஜனாதிபதி தேர்தலை வேண்டாமென கோரும் இந்நிலையில் ஆளும் அரசும் ஐ.தே.க ஜனாதிபதி தேர்தலை முன்வைத்து பல முன்னெடுப்புக்களை செய்து வரும் இவ்வேளையில் நீதி அமைச்சரின் கோரிக்கை அரசுக்குள் எடுபடுமா? அலட்சியப்படுத்தப்படுமா? என்று பரவலாக பேசப்படுகிறது.
http://www.tamilwin.com/show-RUmszATbKWmsy.html
Geen opmerkingen:
Een reactie posten