பிக்குமார் மீது சாணம் வீச்சு; எதிர்த்து ஆர்ப்பாட்டம் !
[ Oct 03, 2014 12:00:00 AM | வாசித்தோர் : 3260 ]
இந்த தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதாக ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பிக்கு மாணவர்கள் தெரிவித்தனர்.
http://www.athirvu.com/newsdetail/1129.htmlபோலி கடவுச்சீட்டில் இந்தியா சென்று பெரும் மோசடியில் ஈடுபட்ட இலங்கை தம்பதி !
[ Oct 03, 2014 12:00:00 AM | வாசித்தோர் : 4580 ]
ஆனால், சொன்னபடி வேலை வாங்கித் தரவில்லை, இதனால் பணத்தை இழந்தவர்கள் வெல்லத்தூவல் பொலிஸ் நிலையத்தில் புகார் செய்தனர். பொலிஸார் வழக்கு பதிவு செய்து, நேற்று பிரபாகரனை கைது செய்து விசாரணை நடத்தினர். பிரபாகரன் இலங்கை கொழும்பு பகுதியைச் சேர்ந்தவர். இவர் தனது மனைவி சாந்தி(38), மகள் பிரசாந்தி (18)ஆகியோருடன் சேர்ந்து, கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு போலி கடவுச்சீட்டில் தமிழகம் வந்துள்ளார். பின்னர், கோவை மாவட்டம் வால்பாறை அருகே வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கி, அப்பகுதியைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவரிடம் இந்திய ரூ.40 லட்சம் வரை வாங்கி ஏமாற்றி உள்ளார். பின்னர், அங்கிருந்து தப்பி பல்வேறு இடங்களில் பண மோசடி சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார்.
அதன்பின், கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு ஆனைக்கால் பகுதியில் குடியேறினார். அப்பகுதி மக்களிடம் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.30 லட்சம் வரை பெற்று ஏமாற்றியுள்ளார். இதற்கு அவரது மனைவி, மகள் உடந்தையாக இருந்துள்ளனர். இதையடுத்து அவரது வீட்டில் பொலிஸார் சோதனை நடத்தினர். இதில் அவர் தேவிகுளம் முகவரியில் வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை பெற்றிருந்தது கண்டறியப்பட்டது. இதுதொடர்பாக பொலிஸார் வழக்கு பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர். இதுகுறித்து கோவை பொலிஸாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://www.athirvu.com/newsdetail/1130.html
Geen opmerkingen:
Een reactie posten