கொச்சிக்கடையில் இறந்த பெண்ணின் மரண மர்மம் தற்போது வெளியானது !
[ Oct 03, 2014 12:00:00 AM | வாசித்தோர் : 7260 ]
நீர்கொழும்பு - கொச்சிக்கடை பிரதேசத்தில் அண்மையில் சடலமாக மீட்கப்பட்ட பெண் மரணத்தில் இருந்த மர்மம் தற்போது வௌிச்சத்திற்கு வந்துள்ளது. குறித்த பெண் கொலை செய்யப்பட்டுள்ளதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளதென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார். கடந்த செப்ரெம்பர் 27ம் திகதி நீர்கொழும்பு, கொச்சிக்கடை பிரதேசத்தில் வடக்கு கட்டான, கோல்டன் கேட் தோட்டத்தைச் சேர்ந்த கோவில்பிள்ளை குமாரவதி (40 வயது) எனும் பெண் சடலமாக மீட்கப்பட்டார்.
குறித்த பெண் மரணமடைந்து நான்கு நாட்கள் கழித்து அழுகிய நிலையில் கிடந்த சடலத்தையே மீட்ட நீர்கொழும்பு பொலிஸார், அதனை நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைத்திருந்தனர். சடலத்தை பிரேத பரிசோதனை செய்த சட்ட வைத்திய அதிகாரி எம்.என்.ருஹுல் ஹக், உயிரிழந்தவரின் அடிவயிற்றில் மூன்று ஆழமான கத்திக்குத்துக் காயங்கள் காணப்பட்டன என்றும் இதனால் அதிக இரத்தப் பெருக்கு ஏற்பட்டு மரணம் சம்பவித்தது எனவும் தனது அறிக்கையில் உறுதிப்படுத்தியுள்ளார்.
ஆனால் இந்த மர்ம மரணம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை எனவும் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
http://www.athirvu.com/newsdetail/1131.htmlகாலம் மக் ரே ஜெயகுமாரி தொடர்பாக சொன்ன கருத்து: சூடாகியுள்ள ருவான் வணிகசூரிய !
[ Oct 03, 2014 12:00:00 AM | வாசித்தோர் : 8545 ]
1ம் திகதி ஊடகத்திற்கு காலம் மக் ரே அவர்கள் பேட்டி கொடுத்திருந்தார். ஆனால் மறுதினமே(2) இலங்கை இராணுவத் தளபதியும், பேச்சாளர்களில் ஒருவருமான ருவான் வணிகசூரிய இதனை முற்றாக மறுத்துள்ளர். ஜெயகுமாரி பயங்கரவாதத்தை தூண்டும் வகையில் செய்கைகளில் ஈடுபட்டார் என்றும், அதற்காகவே அவர் கைதுசெய்யப்பட்டர் என்றும் ரூவான் மேலும் தெரிவித்துள்ளார். ஜெயகுமாரியின் விடுதலை இந்த நாட்டு நீதிமன்றத்தின் கைகளில் உள்ளது, இதனை எவரும் விமர்சிக்க முடியாது என்று ரூவான் காரசாரமாக பதில் வழங்கியுள்ளார். வழமையாக காலம் மக் ரே அவர்கள் என்ன செய்தியை வெளியிட்டாலும், இலங்கை அரசுக்கு கிலி வந்துவிடுவது வழக்கம்.
தற்போது இதனையே இவர்கள் செய்துள்ளார்கள். கடந்த சில மாதங்களாக ஜெயகுமாரியை இலங்கை புலனாய்வுப் பிரிவினர் கைதுசெய்து 4ம் மாடியில் வைத்துள்ளார்கள். கேட்டால் அவர் விடுதலைப் புலிகளை மீளவும் கட்டியெழுப்ப உதவிசெய்தார் என்கிறார்கள். ஆனால் எந்த ஆதாரத்தையும் இதுவரை நீதிமன்றில் சமர்பிக்கவில்லை.
http://www.athirvu.com/newsdetail/1132.html
Geen opmerkingen:
Een reactie posten