தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 3 oktober 2014

இரத்தினபுரியில் தாக்கப்பட்ட பெண்ணை பொலிஸ் நிலையத்துக்கு வருமாறு அழைப்பு!

யாழில் ஜனாதிபதியின் நிகழ்வுகளில் த.தே.கூட்டமைப்பு கலந்து கொள்ளுமா?
[ வியாழக்கிழமை, 02 ஒக்ரோபர் 2014, 04:23.34 PM GMT ]
யாழிற்கு எதிர்வரும் 13ம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விஜயம் செய்யவுள்ள நிலையில், அவர் கலந்து கொள்ளும் நிகழ்வுகளில் த.தே.கூட்டமைப்பினர் கலந்து கொள்வதா, இல்லையா என்பது தொடர்பிலான இறுதி முடிவு எதிர்வரும் 6ம் திகதி அறிவிக்கப்படும் என கூட்டமைப்பு வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இன்றைய தினம் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனின் அலுவலகத்தில், கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன் தலைமையில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடமாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் கூடி சுமார் 6 மணிநேரம் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கின்றனர்.
மேற்படி கூட்டத்தில் பேசப்பட்ட விடயங்கள் தொடர்பில் முழுமையான தகவல்கள் உடனடியாக வெளியிடுவதற்கு கூட்டமைப்பினர் விரும்பம் தெரிவிக்கவில்லை.
எனினும், வடமாகாணசபையின் ஒரு வருடகால செயற்பாடுகள் மற்றும் எதிர்காலச் செயற்பாடுகள் தொடர்பில் அதிகம் பேசப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் எதிர்வரும் 12ம், 13ம் திகதிகளில் கிளிநொச்சி, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களுக்கு ஜனாதிபதி விஜயம் செய்யவுள்ளார்.
இந்நிலையில், அவருடைய விஜயத்தின்போதும், அவர் கலந்து கொள்ளும் நிகழ்வுகளின்போதும் கூட்டமைப்பினர் முக்கியமாக முதலமைச்சர் கலந்துகொள்வதா, இல்லையா என்பது தொடர்பில் 6ம் திகதி இறுதியான முடிவு எடுக்கப்படும் என கூட்டமைப்பு வட்டாரங்கள் செய்தி வெளியிட்டிருக்கின்றன.
http://www.tamilwin.com/show-RUmszATWKVfw2.html

இரத்தினபுரியில் தாக்கப்பட்ட பெண்ணை பொலிஸ் நிலையத்துக்கு வருமாறு அழைப்பு
[ வியாழக்கிழமை, 02 ஒக்ரோபர் 2014, 11:32.35 PM GMT ]
இரத்தினபுரி நகரில் பொலிஸ் அதிகாரி ஒருவரால் தாக்கப்பட்ட பெண்ணை வாக்குமூலம் அளிப்பதற்காக பொலிஸ் நிலையத்துக்கு வருமாறு அழைத்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். 
இந்த வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே குறித்த பெண்ணுக்கான மருத்துவ உதவிகளுக்கான விபரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க முடியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை சம்பவம் குறித்து விசாரணை செய்ய இரண்டு பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பபட்டுள்ளன.
அந்தக் குழுக்கள் இதுவரை 15 பேரின் வாக்குமூலங்களை பெற்றுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் கடந்த செப்டம்பர் 6 ம் திகதி பிற்பகல் 3.00 மணியளவில் இடம்பெற்றமை சாட்சிகளின் அடிப்படையில் தெரியவந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை பெண்ணை தாக்கிய பொலிஸ்காரர் பணிஇடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இந்தநிலையில் குறித்த பெண் மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்துள்ளதுடன், 5 கோடி ரூபா நட்டஈடு கோரி வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmszATWKVfw3.html

Geen opmerkingen:

Een reactie posten