தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 8 oktober 2014

இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை மீட்க மோடியை நாடவுள்ள தமிழக மீனவர்கள்!!!

கிளி.இரத்தினபுரம் விளையாட்டுக்கழக காணியை தனக்கு சொந்தமாக்கிய நபர்
[ புதன்கிழமை, 08 ஒக்ரோபர் 2014, 08:07.01 AM GMT ]
கிளிநொச்சி நகருக்கு அண்மையில் உள்ள மிகப்பழமையான கிராமமான இரத்தினபுரத்தில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன.
கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாக விநாயகர் விளையாட்டுக் கழகம் என்ற பெயரில் கிராமத்தின் வீர வீராங்கனைகள் விளையாடுவதற்கு இரத்தினபுரம் சிவசித்தி விநாயகர் ஆலயத்திற்கு அருகில் ஒரு விளையாட்டு மைதானம் அமைந்திருந்தது.
இந்த மைதானத்தில் கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாக விளையாடிவந்த பல தலைமுறைகள் விளையாட்டுக் கழகம் சார்பாக மாவட்ட மட்ட, மாகாண மட்ட விளையாட்டுப் போட்டிகளில் விளையாடி சாதனை படைத்த பதிவுகளை அக்கிராமத்தில் வாழ்கின்ற முன்னோடிகள் நினைவுபடுத்துகின்றனர்.
கரப்பந்து, வலைப்பந்து, எல்லே போன்றவற்றில் இரத்தினபுரம் விநாயகர் விளையாட்டுக் கழகம் கடந்த முப்பது வருடங்களில் திறமைமிக்க வீர வீராங்கனைகளை கொண்டிருந்தது.
ஆனால் தற்போது இந்த விளையாட்டுக்கழகக் காணியை தனியார் ஒருவர் உரிமை கொண்டாடி அதை தற்போது தனக்கு சொந்தமானதாக ஆக்கிக்கொண்டுள்ளார்.
இந்த நபர் கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாக இந்த பகுதிலேயே வசித்து வந்தவர் என்பது இங்கு குறிப்பிட வேண்டிய விடயம். 
கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாக இந்த நபரால் உரிமை கொண்டாடப்படாத விளையாட்டுக்கழக காணி எப்படி இப்போது உரிமை கோரப்பட்டது என்பது பற்றி இரத்தினபுரம் கிராம மக்கள் ஆச்சரியம் அடைந்துள்ளார்கள்.
இது தொடர்பாக இந்த கழகத்தில் கடந்த நிர்வாகங்களில் இருந்தவர்களோ அல்லது கிராம அபிவிருத்தி சங்க நிர்வாகிகளோ தெளிவான கருத்துக்களை மக்களுக்கு முன்வைக்கவில்லை என்பதுடன் இந்த விளையாட்டுக்கழகம் தொடர்பாக ஊழல் நடைபெற்றுள்ளதாகவே மக்கள் சந்தேகிக்கின்றனர்.
மாவட்ட செயலகத்தில் பதிவு செய்யப்பட்ட ஒரு விளையாட்டுக் கழகத்திற்கு ஒரு மைதானம் இல்லாதிருப்பது வேடிக்கையானது.
இரத்தினபுரம் கிராமத்தில் இளைய தலைமுறை சரியான முறையில் வழநடத்த தவறுகின்ற பட்சத்தில் அவர்கள் தவறான நடத்தைகளுக்கு உட்படுவது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிடும் இதற்கு இங்கு விளையாட்டு மைதானம் ஒன்று இல்லாது இருப்பதும் ஒரு காரணமாக அமையும்.
http://www.tamilwin.com/show-RUmszATcKWlo3.html
மீள்குடியேறிய மக்களுக்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் உதவி
[ புதன்கிழமை, 08 ஒக்ரோபர் 2014, 08:28.46 AM GMT ]
மன்னார் மற்றும் மாந்தை மேற்கில் போருக்கு பின்னர் மீள்குடியேறிய மக்களுக்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் உதவிகளை மேற்கொண்டுள்ளது.
இதன்கீழ் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகரகம், 160 புதிய கழிவறைகளை அமைத்துக் கொடுத்துள்ளதாக உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.
இந்த பிரதேசத்தில் தமிழ் முஸ்லிம் மக்களுக்கு அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ள இந்த கழிவறைகளின் பெறுமதி 10 மில்லியன் ரூபாய்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வேலைத்திட்டம் நேரடியாக அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகரகத்தினால் மேற்கொள்ளப்பட்டது.
இது, மன்னார் சமூக அமைப்புக்கள்,  உள்ளுர் அபிவிருத்தி நிதியம், கரிட்டாஸ் வாழ்வோதயம் மற்றும் மன்னார் நிவாரண சம்மேளனம் ஆகியவற்றின் ஊடாக முன்னெடுக்கப்பட்டது.
http://www.tamilwin.com/show-RUmszATcKWlo4.html
காணாமல் போன மீனவர்களைத் தேட போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை: முதல்வர் உத்தரவு
[ புதன்கிழமை, 08 ஒக்ரோபர் 2014, 08:35.17 AM GMT ]
காணாமல் போன 5 மீனவர்களையும் தேடும் பணியை போர்க்கால அடிப்படையில் முடுக்கிவிட தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசு செய்திக் குறிப்பில்,
நாகப்பட்டினம் மாவட்டம், தரங்கம்பாடி மற்றும் வாணவன்மாதேவி மீன்பிடி கிராமங்களைச் சேர்ந்த தங்கராஜ், இராமலிங்கம், தர்மபாலன், ஜெகன் மற்றும் விஷ்ணு ஆகிய 5 மீனவர்கள் தரங்கம்பாடியிலிருந்து IND-TN--06-MO-1202 பதிவு எண் கொண்ட மீன்பிடி படகில் ஆழ்கடல் மீன்பிடிப்பிற்கு 3.10.2014 அன்று அதிகாலை சென்றனர்.
7.10.2014 அன்று திரும்ப வேண்டிய இம்மீனவர்கள் கரைக்கு திரும்பவில்லை.
காணாமல் போன மீனவர்களை விரைவில் மீட்பதற்காக முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
மீனவர்களை வான் மற்றும் கடல் வழியாக தேடும் பணிகள் மீன்வளத் துறையினர், தமிழக கடலோரக் காவல் படை மற்றும் இந்திய கடலோரக் காவல் படையினரால் துவங்கப்பட்டுள்ளன" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszATcKWlo5.html
இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை மீட்க மோடியை நாடவுள்ள தமிழக மீனவர்கள்
[ புதன்கிழமை, 08 ஒக்ரோபர் 2014, 08:49.53 AM GMT ]
இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட 82 விசைப்படகுகளை மீட்பதற்கு இந்திய பிரதமரின் உதவியை நாட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்காக பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க தமிழக மீனவர்கள் முறையிட தீர்மானித்துள்ளனர்..

இராமேஸ்வரத்தில் நேற்று நடைபெற்ற மீனவர்களின் கூட்டமைப்பு கூட்டத்தின் போது இதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில்ää இராமநாதபுரம்ää புதுக்கோட்டைää நாகப்பட்டினம்ää தஞ்சாவூர்ää திருவாரூர்ää காரைக்கால் ஆகிய 6 மாவட்டங்களின் மீனவ பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
கடந்த ஜூன் மாதத்திலிருந்து இதுவரை தமிழக மீனவர்களின் 82 விசைப்படகுகளை இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளதாக இதன்போது தகவல்ட வெளியிடப்பட்டது.
பறிமுதல் செய்யப்பட்ட படகுகள் இலங்கையில் பாதுகாப்பின்றி வைக்கப்பட்டுள்ளன.
இதன்காரணமாக பெருமளவு சேதம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே படகுகளை விடுவிக்க மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கையை முன்வைக்கவுள்ளனர்.
இதேவேளை எதிர்வரும் 10ம் திகதி தமிழக மீன்வளத்துறை அமைச்சரை சந்தித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தமிழக மீனவர் தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.
http://www.tamilwin.com/show-RUmszATcKWlo6.html

Geen opmerkingen:

Een reactie posten