ஜனாதிபதியின் தேர்தல் பிரசார அலுவலகம் அலரி மாளிகைக்கு மாற்றம்!
[ புதன்கிழமை, 08 ஒக்ரோபர் 2014, 09:22.41 AM GMT ]
பிரசார நடவடிக்கை அலுவலகம் ஸ்தாபிக்கப்பட்டுள்ள அலுவலகத்தில் இதுவரை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.
ஜனாதிபதியின் தேர்தல் பிரசார நடவடிக்கை அலுவலகம் அங்கு ஸ்தாபிக்கப்பட்டதை தொடர்ந்தும் நாமல் ராஜபக்ச தனது அலுவலகத்தை வர்த்தகர் ரவி விஜேவர்தனவுக்கு சொந்தமான கொள்ளுப்பிட்டியில் உள்ள அலுவலகத்திற்கு மாற்றியுள்ளார்.
மூன்றாவது முறையாகவும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் மகிந்த ராஜபக்சவின் பிரதான தேர்தல் அலுவலகம் அமைச்சர் பசில் ராஜபக்ச தலைமையில், கொழும்பு 7 கிறகரி வீதியில் கடந்த 25 ம் திகதி திறந்து வைக்கப்பட்டதுடன் அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்கள் பலர் அந்த நிகழ்வை பகிஷ்கரித்திருந்தனர்.
இந்த நிலையில், அரசாங்கத்தின் அமைச்சர்களுக்கு அழுத்தங்களை கொடுத்தாவது தேவையான சந்தர்ப்பத்தில் வரவழைப்பதற்கு இலகுவாக இருக்கும் என்பதால், அலுவலகம் அலரி மாளிகைக்கு மாற்றப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszATcKWlpy.html
யாழ். - கொழும்பு பேரூந்து மீது மீசாலையில் வைத்து கல்வீச்சு! முன் கண்ணாடி சேதம்
[ புதன்கிழமை, 08 ஒக்ரோபர் 2014, 09:01.16 AM GMT ]
யாழ். தென்மராட்சிப் பிரதேசத்தில் மீசாலை பகுதியில் வைத்து நேற்று இரவு கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸில் முறையிடப்பட்டுள்ளது.
பற்றைக்குள் மறைந்திருந்தவர்களே இவ்வாறு கல்வீச்சு தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
இதில் பேருந்தின் முன் கண்ணாடி சேதமடைந்துள்ளது.
இதனையடுத்து பேரூந்தில் இருந்த பயணிகள் பிறிதொரு பேரூந்தில்; ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டனர்.
தாக்குதலுக்குள்ளான பேரூந்து பொலிஸ் நிலையத்துக்கு ; கொண்டு செல்லப்பட்டது.
இந்தநிலையில் இதுவரை குறித்த சம்பவம் தொடர்பில் எவரும் கைதுசெய்யப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
http://www.tamilwin.com/show-RUmszATcKWlo7.html
Geen opmerkingen:
Een reactie posten