தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 8 oktober 2014

3வது தடவையாக போட்டியிடுவது குறித்து உயர்நீதிமன்றிடம் ஜனாதிபதி கோரமுடியாது!- சரத் என் சில்வா!



கடும் மழையினால் மலையகத்தில் மண்சரிவு (மலையக செய்திகள்)
[ புதன்கிழமை, 08 ஒக்ரோபர் 2014, 07:34.41 AM GMT ]
கடும் மழை காரணமாக ஹற்றன் நுவரெலியா பிரதான வீதியில் நானுஓயா பங்களாஅத்த பகுதியில் இன்று காலை 11.00 மணியளவில் பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் டீ.பீ.ஜீ குமாரசிரி தெரிவிக்கின்றார்
இதனால் அவ்வீதியினூடாக போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளர் மேலும் தெரிவிக்கின்றார்.
மண்சரிவை அகற்றுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாக மாவட்ட செயலாளர் தெரிவித்தார்.
கடும் மழையினால் கொத்மலை நீர்தேக்த்தில் நீர்மட்டம் உயர்வு
மலையகத்தில் பெய்யும் கடும் மழையினால் மேல் கொத்மலை நீர்தேக்கத்தின் நீா்மட்டம் உயா்ந்துள்ளது.
இதனால் அதன் அண்மையில் உள்ள மக்களை மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு நுவரெலியா மாவட்ட செயலாளர் டீ.பீ.ஜீ.குமாரசிரி தெரிவிக்கின்றார்.
அதிக மழை காரணமாக டெவோன் நீர்வீழ்ச்சியிலும் நீரின் மட்டம் அதிகரித்துள்ளது.
ஹற்றன் கொட்டகலை கொமர்ஷல் பகுதியும் நீரில் மூழ்கியுள்ளன. அத்தோடு விமேலசுரேந்திர நீர்தேக்கத்தின் மேலதிக நீா் வெளியாகின்றன.
ஹற்றன் கொழும்பு பிரதான வீதியிலும் ஹற்றன் நுவரெலியா பிரதான வீதியிலும் மண்சரிவு ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் இவ்வீதி வழுக்குவதற்கு அபாயம் இருப்பதாகவும் இதனால் வாகனசாரதிகளை அவதானமாக வாகனங்களை செலுத்துமாறு பொலிஸார் கேட்டுகொள்கின்றனர்.
http://www.tamilwin.com/show-RUmszATcKWlo0.html
மஹிந்த போட்டியிட்டால் நான் போட்டியிடமாட்டேன்!- சரத் பொன்சேகா
[ புதன்கிழமை, 08 ஒக்ரோபர் 2014, 07:52.22 AM GMT ]
தேவையைப் பொறுத்தே தாம் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது குறித்து தீர்மானிக்கவுள்ளதாக தெரிவித்துள்ள ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா, மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டால், தாம் போட்டியிடப் போவதில்லை எனக் கூறியுள்ளார்.
ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் எதிர்கால தேர்தலின்போது ஐக்கிய தேசியக்கட்சிக்கு ஆதரவளிக்குமாறு தம்மிடம் கேட்டிருப்பதாக சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டால், தாம் போட்டியிடப் போவதில்லை.
ஏனெனில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு மூன்றாவது தடவையாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தகுதியில்லை.
எனவே அதனை சட்டவிரோத தேர்தலாக கருதி தாம் அந்ததேர்தலில் போட்டியிடப் போவதில்லை.
எனினும் பொதுவேட்பாளர் ஒருவருக்கு ஆதரவளிக்க ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அவ்வாறு செய்தால், தமது கட்சியும் பாதிக்கப்படும். எனவே அனைத்து விடயங்களையும் ஆராய்ந்தே இந்த விடயத்தில் முடிவெடுக்கப்படும் என்று சரத் பொன்சேகா ஊடகம் ஒன்றிடம் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszATcKWlo1.html
3வது தடவையாக போட்டியிடுவது குறித்து உயர்நீதிமன்றிடம் ஜனாதிபதி கோரமுடியாது!- சரத் என் சில்வா
[ புதன்கிழமை, 08 ஒக்ரோபர் 2014, 08:00.23 AM GMT ]
மூன்றாவது முறையாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உயர்நீதிமன்றத்தின் கருத்தை கோரமுடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதமநீதியரசர் சரத் என் சில்வா இதனை தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியினால் பொதுமக்களின் முக்கியத்துவம் கருதி உயர்நீதிமன்றத்தின் ஆலோசனையை கோரமுடியும்.
அல்லது அரசியல் அமைப்பின் தெளிவுக்குறித்து உயர்நீதிமன்றத்தை நாடலாம்.
எனினும் மூன்றாவது தடவையாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது குறித்து உயர்நீதிமன்றத்தின் ஆலோசனையை கோரமுடியாது என்று சரத் என் சில்வா குறிப்பிட்டுள்ளார்.
2ம் இணைப்பு
மஹிந்த மூன்றாவது முறை போட்டியிட உச்ச நீதிமன்ற அபிப்பிராயம் கோர முடியாது - முன்னாள் நீதியரசர்
ஜனாதிபதியான ஒருவர் நாட்டின் பொது நலன் கருதியே சட்ட சிக்கல்களுக்கு உயர் நீதிமன்றத்தின் அபிப்பிராயத்தை கேட்க முடியும் அதைவிடுத்து தான் மூன்றாவது முறை போட்டியிடுவது சம்பந்தமான ஒரு தனிப்பட்ட நபரின் அபிலாசைகளுக்கு உச்ச நீதிமன்றத்தில் வியாக்கியானமோ அல்லது விளக்கமோ கேட்கும் உரிமை கிடையாது.
அது அவரின் தனிப்பட்ட பிரச்சினையாகும். நாட்டின் தனிப்பட்ட நபரின் விருப்பு வெருப்புகளுக்கு உச்ச நீதிமன்றத்தை பயன்படுத்த முடியாது.
அரசியல் அமைப்பு மிக தெளிவாக பிரிவு 31(3A) தெரிவிப்பது ஆட்சியில் இருக்கும் ஜனாதிபதி ஒருவர் ஜனாதிபதி தேர்தலை நடாத்த எந்த சந்தர்ப்பத்திலும் நான்கு வருட முடிவில் தீர்மானிக்கலாம்.
ஆனால் 31(3A)(D) பிரிவு தெரிவிப்பது சத்திய பிரமாணம் செய்த நாளில் இருந்து ஆறு வருடங்களுக்கு அந்த பதவியின் காலம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
உயர் நீதிமன்றத்தை பொருத்தவரை ஜனாதிபதியாக இவர் பதவியேற்ற திகதி 19.11.2010 இந்த திகதியில் இருந்து ஆறு வருடங்கள் இவர் ஜனாதிபதியாக இருக்கலாம்.
ஆனால் 18வது திருத்த சாசனத்தின் 31 (2) பிரகாரம் தற்போதைய ஜனாதிபதி மூன்றாவது முறை போட்டியிட தகுதியற்றவர் என மேலும் குறிப்பிட்டார்.
இது சம்பந்தமாக J.V.P மக்களுக்கு தெளிவூட்டல் சம்பந்தமாக அழைப்பை தான் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வதாகவும் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszATcKWlo2.html

Geen opmerkingen:

Een reactie posten