[ வியாழக்கிழமை, 09 ஒக்ரோபர் 2014, 05:37.55 AM GMT ]
தற்போதைய தகவல்களின் படி ஆளுந்தரப்பின் சிரேஷ்ட அரசியல்வாதிகளில் பலரும் கட்சி தாவி ஐ.தே.க. வுடன் இணைந்து கொள்வது அல்லது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து கொண்டே தேசிய அரசாங்கம் ஒன்றை அமைப்பது குறித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வருவதாக தெரிய வந்துள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவரான அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, சிரேஷ்ட பெண் அமைச்சர் சுமேதா உள்ளிட்டோருடன் இளம் அரசியல்வாதிகள் பலரும் தேசிய அரசாங்கம் அமைப்பது தொடர்பாக நாட்டம் கொண்டுள்ளனர்.
மொனராகலைக்கு எதுவிதத்திலும் தொடர்பில்லாத சஷீந்திரவை முதலமைச்சராக்கி, இளம் வயது அரசியல்வாதியான அவருக்கு முன் தனது அதிகாரத்தை செல்லாக்காசாக்கியது தொடர்பில் அமைச்சர் சுமேதா கடும் அதிருப்தியுடன் இருக்கின்றார்.
இதற்கிடையே ஆளுந்தரப்பில் இருக்கும் சிறுபான்மை அரசியல்வாதிகளில் பலரும் அமைச்சர், பிரதி அமைச்சுப் பதவிகள் தொடர்பான கனவுகளில் இருக்கின்றனர். இதன் காரணமாக இவர்களில் யாரும் தற்போதைக்கு கட்சி தாவும் மனோநிலையில் இல்லை என்றும் கூறப்படுகின்றது.
http://www.tamilwin.com/show-RUmszATdKWls5.html
ரயில்வே ஊழியர்கள் பணிப் புறக்கணிப்பினால் வெறிச்சோடிய ரயில் நிலையங்கள்!
[ வியாழக்கிழமை, 09 ஒக்ரோபர் 2014, 05:41.38 AM GMT ]
கொழும்பு கோட்டை, மருதானை, கண்டி, காலி, ஹற்றன் உட்பட நாடு முழுவதிலும் உள்ள ரயில் நிலையங்களில் எந்த பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை.
எனினும் சில ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், அது பொதுமக்களின் தேவைக்கு போதுமானதாக இல்லை எனவும் ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் குறிப்பிட்டுள்ளது.
அலுவலக ரயில் இன்று காலை சேவையில் ஈடுபடுத்தப்பட்டது. இடநெரிசல் காரணமாக பயணிகள் அவதிக்கு உள்ளாகினர்.
ரயில்வே ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் காரணமாக கொழும்புக்கு வரும் பிரதான வீதிகளில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற ரயில்வே பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக அனைத்து ரயில் நிலையங்களில் சன நடமாட்டமற்று வெறிச்சோடிக் காணப்படுகின்றது.
http://www.tamilwin.com/show-RUmszATdKWls6.html
Geen opmerkingen:
Een reactie posten