தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 9 oktober 2014

மஹிந்த வரும்போது 2500 ரூபா பெறுமதியான நீல நிற சேலை அணிய வேண்டும்: கட்டாயப்படுத்தும் பாடசாலைகள்

பத்து தடவைகள் என்றாலும் மஹிந்தவையே மக்கள் தெரிவு செய்வர்: கெஹலிய
[ வியாழக்கிழமை, 09 ஒக்ரோபர் 2014, 04:08.36 AM GMT ]
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மூன்றாவது தடவையல்ல, பத்து தடவைகள் போட்டியிட்டாலும் மக்கள் அவரையே தெரிவு செய்வர் என்று ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
கண்டி - கட்டுகஸ்தோட்டை பிரதேசத்தில் நடைபெற்ற கட்சி ஆதரவாளர்கள் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல இவ்வாறு கூறினார்.
அவர் இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
தேர்தல் ஒன்றின் மூலம் ஜனாதிபதியை தோற்கடிக்க முடியாது என்பதை நன்கு அறிந்து கொண்ட சிலரே அவ்வாறு வெற்று வார்த்தைகளை தெரிவித்து வருகின்றனர்.
இரண்டு ஜனாதிபதி தேர்தல்களுடன் 29 தேர்தல்களில் தோல்விகளைக் கண்டு மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட தயாராகிவரும் அவர்கள் எவ்வித சுய கௌரவமற்றவர்கள் எல்லாத் தேர்தல்களிலும் சிறந்த வெற்றிகளைக் கண்ட மகிந்த ராஜபக்ஷவுடன் போட்டியிட அச்சம் கொண்ட ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிற்கு மூன்றாவது தடவையாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியாது என கூறி வருகின்றனர்.
வெளிநாட்டு சக்திகளின் கைம்பொம்மைகளாக செயற்பட்டு அவர்களின் தேவைக்கேற்ப தலைவரை கொண்டு வருவதற்கு சதிகள் இடம்பெற்று வருகின்றது. சிலர் அதில் பிரதிநிதிகளாக செயல்பட்டு வருகின்றனர்.
மூன்றாவது தடவையல்ல பத்து தடவை போட்டியிட்டாலும் நாட்டின் தலைவரை தெரிவு செய்வது மக்களின் வாக்குகளாகும்.
எனவே, மக்களின் வாக்குப்பலம் எந்தக் குழுக்களுக்கும் கிடையாது அவற்றை பெறக்கூடிய ஒரே தலைவர் மகிந்த ராஜபக்ஷவே என்றார்.
http://www.tamilwin.com/show-RUmszATdKWls2.html
இராதாகிருஸ்ணன் பிரதி அமைச்சராக நியமனம்- ஊவாவில் ஆட்சியைத் தக்க வைக்கவே இந்த நியமனம்?
[ வியாழக்கிழமை, 09 ஒக்ரோபர் 2014, 05:01.03 AM GMT ]
மலையக மக்கள் முன்னணியின் அரசியல் தலைவர் இராதாகிருஸ்ணன் தாவரவியல் பூங்கா மற்றும் பொது பொழுது போக்குத்துறை பிரதி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச முன்னிலையில் சற்று முன்னர் அவர் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
தேசிய ரீதியான தேர்தல் ஒன்றுக்கான நகர்வாகவே இந்த நடவடிக்கைகள் நோக்கப்படுகின்றது.
ஊவாவில் ஆட்சியை தக்கவைக்கவே இராதாகிருஷ்ணனுக்கு பிரதியமைச்சர் பதவி: சிங்கள இணையத்தளம்
ஊவா மாகாண சபையின் ஆட்சி அதிகாரத்தை தற்காத்து கொள்ளவே மலையக மக்கள் முன்னணியின் அரசியல் பிரிவின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். இராதாகிருஷ்ணனுக்கு பிரதியமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.இராதாகிருஷ்ணன் இன்று பிரதியமைச்சராக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஊவா மாகாண சபையில் இரண்டு அமைச்சு பதவிகளை கோரியதால் ஏற்பட்ட நெருக்கடியை தவிர்ப்பதற்காக அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் மலையக மக்கள் முன்னணிக்கு இந்த பிரதியமைச்சு பதவி வழங்கப்பட்டுள்ளது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரான அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானையும் இணங்க செய்துள்ளதாக தெரியவருவதாக ஜே.வி.பியின் இணையத்தளம் தெரிவித்துள்ளது.
ஊவா மாகாண சபையின் அமைச்சர்கள் நியமனத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக இன்று அமைச்சரவை நியமிக்கப்படாமலேயே ஊவா மாகாண சபைக் கூடியது.
ஊவா மாகாண அமைச்சரவையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் செந்தில் தொண்டமான் மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பசறை தொகுதி அமைப்பாளரான வடிவேல் சுரேஷ் ஆகியோர் இடம்பெறலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
எவ்வாறாயினும் ஊவா மாகாண சபைத் தேர்தல் தருணத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான பிரபா கணேசன் மற்றும் பீ. திகாம்பரம் ஆகியோர் பிரதியமைச்சர்களாக நியமிக்கப்பட்டனர்.
http://www.tamilwin.com/show-RUmszATdKWls3.html
மஹிந்த வரும்போது 2500 ரூபா பெறுமதியான நீல நிற சேலை அணிய வேண்டும்: கட்டாயப்படுத்தும் பாடசாலைகள்
[ வியாழக்கிழமை, 09 ஒக்ரோபர் 2014, 05:05.20 AM GMT ]
ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் யாழ்ப்பாண வருகையின் போது பாடசாலைகள் சிலவற்றில், ஆசிரியைகள் கட்டாயம் நீலநிறச் சேலைகளே அணிந்து வர வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இவர்கள் அணியும் சேலையின் பெறுமதியும் 2,500 என்றும், அந்தச் செலவையும் ஆசிரியைகளே பொறுப்பேற்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மூன்று நாள் பயணமாக வடபகுதிக்கு எதிர்வரும் 12ஆம் திகதி யாழிற்கு மஹிந்த விஜயம் செய்யவுள்ளார். 12ஆம் திகதி கிளிநொச்சியிலும், 13,14ஆம் திகதிகளில் யாழ்ப்பாணத்திலும் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளார்.
இந்த நிலையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வருகை தரும் போது அவரது கட்சியினுடைய நிறமாகிய நீலநிறத்தில் ஆசிரியைகள் சேலை அணிய வேண்டும். அதற்காக சம்பளப் பணத்திலிருந்து 2,500 பெறப்பட்டு எதுவித கேள்வி கோரலும் இல்லாமல் அவசர அவசரமாக நீலநிற சேலைகள் அந்தப் பாடசாலைகளால் கொள்வனவு செய்யப்படுகின்றது.
நீலநிறச் சேலை அன்றைய தினம் அணிய வேண்டும் என்றால் அணியலாம். ஆனால் அதற்கு விலை குறைந்த சேலைகளை வாங்கியிருக்க முடியும். இவ்வாறு பெருந்தொகைப் பணத்தை செலவு செய்து ஒரு நாள் கூத்துக்காக சேலை வாங்குமாறு நிரப்பந்திக்கக் கூடாது என்று ஆசிரியைகள் கவலை தெரிவித்துள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmszATdKWls4.html

Geen opmerkingen:

Een reactie posten