தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 9 oktober 2014

குமார் குணரட்னத்தை கைது செய்ய தயாராகும் பாதுகாப்பு தரப்பு

ஜனாதிபதி தோல்வியடைவார் எனத் தெரிந்து கொண்டே சிலர் பொய்யாக பிரச்சாரம் செய்கின்றனர்: கயந்த
[ வியாழக்கிழமை, 09 ஒக்ரோபர் 2014, 05:45.03 AM GMT ]
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இம்முறை ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைவார் எனத் தெரிந்து கொண்டே சிலர் பொய்யாக பிரச்சாரம் செய்து வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
தேர்தலில் ஜனாதிபதி வெற்றியீட்டுவார் என அரசாங்கத்தினால் ஒரம் கட்டப்பட்டுள்ள சிரேஸ்ட அமைச்சர்கள் கூறுவது மனச்சாட்சிக்கு இணக்கமாகவல்ல.
ஜனாதிபதி மூன்றாம் தவணைக்காக போட்டியிட்டு வெற்றியீட்டக் கூடிய சாத்தியமில்லை என்பது மக்கள் அனைவருக்கும் தெரியும்.
சிரேஸ்ட அமைச்சுப் பதவிகளை தக்க வைத்துக்கொள்ள இவ்வாறு ஜனாதிபதிக்கு அமைச்சர்கள் முகஸ்துதி பாடி வருகின்றனர்.
நாட்டின் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது.  தனக்கு தேவையான வகையில் சட்டத்தை மாற்றியமைத்துக்கொண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டாலும் வெற்றியீட்ட முடியாது.
மஹிந்தவிற்கு முடியும் எனத் தெரிவிக்கும் தரப்பினருக்கு வெற்றியீட்ட முடியாது என்பது நன்றாகத் தெரியும் என கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
சிங்கள பத்திரிகையொன்றுக்கு அளித்த நேர் காணலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszATdKWls7.html
குமார் குணரட்னத்தை கைது செய்ய தயாராகும் பாதுகாப்பு தரப்பு
[ வியாழக்கிழமை, 09 ஒக்ரோபர் 2014, 05:51.37 AM GMT ]
முன்னிலை சோசலிசக் கட்சியின் தலைவர் குமார் குணரட்னம் அவுஸ்திரேலியாவில் இருந்து போலியான பெயரில் இலங்கைக்கு வந்தால், அவரை கைது செய்ய தயாராக இருப்பதாக குடிவரவு, குடியகல்வு திணைக்களமும், பாதுகாப்புத் தரப்பினரும் தெரிவித்துள்ளனர்.
குணரட்னம் கடந்த முறை இலங்கைக்கு போலியான பெயரில் வந்திருந்தார். அவரது கடவுச்சீட்டில் உள்ள சகல விபரங்களும் தம்மிடம் இருப்பதாகவும் பாதுகாப்பு தரப்பினர் கூறியுள்ளனர்.
2011 ஆம் ஆண்டு செப்டம்பர் 3 ஆம் திகதி நோயேல் முதலிகே என்ற போலி பெயரில் அவர் இலங்கைக்கு வந்திருந்ததுடன் 2012 ஏப்ரல் 07 ஆம் திகதி இலங்கையில் இருந்து அவுஸ்திரேலியாவுக்கு நாடு கடத்தப்பட்டார் எனவும் பாதுகாப்பு தரப்பினர் குறிப்பிட்டுள்ளனர்.
குமார் குணரட்னம் ஜே.வி.பியின் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்ததார். அந்த கட்சியில் ஏற்பட்ட கொள்கை வேறுபாடுகள் காரணமாக அவரும் மேலும் பலர் ஜே.வி.பியில் இருந்து விலகி முன்னிலை சோசலிசக் கட்சியை ஆரம்பித்தனர்.
1988 -1989 ஆம் ஆண்டுகளில் ஜே.வி.பியின் மேற்கொண்ட ஆயுதப் போராட்டத்தில் பங்கெடுத்த குமார் குணரட்னம் அந்த அமைப்பின் ஆயுதப் பிரிவின் முக்கிய உறுப்பினராகவும் திருகோணமலை மாவட்டத்தின் பொறுப்பாளராகவும் செயற்பட்டுள்ளார்.
பொறியியல் பட்டதாரியான இவர் 90 ஆம் ஆண்டுகளில் ஜே.வி.பியை மீள உருவாக்குவதில் பெரும் பங்காற்றியுள்ளார்.
இவரது சகோதரரான ரஞ்சிதம் குணரட்னம் பேராதனை பல்கலைக்கழத்தில் பொறியியல் பீடத்தில் பயின்று வந்ததுடன் ஜே.வி.பியில் இணைந்து செயற்பட்ட காரணத்தினால், 1989 ஆம் ஆண்டு அரச படையினரால் கொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmszATdKWlty.html

Geen opmerkingen:

Een reactie posten