[ புதன்கிழமை, 08 ஒக்ரோபர் 2014, 11:22.58 AM GMT ]
ஜனநாயகக் கட்சியின் சார்பில் வேட்பாளரை நிறுத்துவதா, நேர்மையான பொது வேட்பாளரை ஆதரிப்பதா அல்லது ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளரை ஆதரிக்குமாறு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கையை ஏற்பதா என்பனவே இந்த மூன்று விடயங்கள் என பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.
ராஜகிரிய மெட்டி அம்பலம பகுதியில் உள்ள ஜனநாயகக் கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அவர் இதனை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்த விடயங்கள் எது பற்றியும் இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. கட்சியினருடன் பேசி இறுதி முடிவு எடுக்கப்படும்.
இந்த விடயங்கள் எது பற்றியும் இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. கட்சியினருடன் பேசி இறுதி முடிவு எடுக்கப்படும்.
எவ்வாறாயினும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க என்னை தனிப்பட்ட ரீதியில் சந்தித்து தேர்தலில் ஆதரவு வழங்குமாறு கோரிக்கை விடுத்தார்.
இந்த கோரிக்கை குறித்து சுமூகமாக அவருடன் பேச தயாராக இருப்பதாக நான் கூறியுள்ளேன் என்றார்.
http://www.tamilwin.com/show-RUmszATcKWlp6.html
கசிப்பு விற்பனையை பிடிக்க சென்ற பொலிஸ் அதிகாரியை கடித்து காயப்படுத்திய யுவதி
[ புதன்கிழமை, 08 ஒக்ரோபர் 2014, 11:13.21 AM GMT ]
இந்த சம்பவம் இன்று முற்பகலில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தாக்குதல் சம்பவத்தில் மோசடி தடுப்பு பிரிவின் உப பொலிஸ் பரிசோதகரான நசீம் சிறு காயத்திற்கு உள்ளாகியுள்ளார்.
அத்துடன் காயமடைந்த பொலிஸ் உத்தியோகஸ் மற்றும் உப பொலிஸ் பரிசோதகர் ஆகியோர் முந்தல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து புத்தளம் ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இந்த பொலிஸ் அதிகாரிகள் ஜயசிறிகம பிரதேசத்தில் கசிப்பு விற்பனையில் ஈடுபடும் பெண்ணொருவரை கைது செய்ய சுற்றிவளைப்பில் ஈடுபட்டனர்.
அப்போது கசிப்பு விற்பனையில் ஈடுபடும் பெண்ணின் மகள் மோசடி தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரியான உப பொலிஸ் பரிசோதகரின் கையை கடித்து காயம் ஏற்படுத்தியுள்ளார்.
அத்துடன் அவருடன் சென்றிருந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் மீது இளைஞர் ஒருவர் மோட்டார் சைக்கிகளில் மோதிவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.
மோட்டார் சைக்களில் மோதிய இளைஞர் சந்தேக நபரான பெண்ணின் மகன் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உப பொலிஸ் பரிசோதகரை கடித்து காயப்படுத்திய 25 வயதான யுவதி மற்றும் அவரது தாய் ஆகியோர் கைது செய்யப்பட்டு புத்தளம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
தப்பிச் சென்றுள்ள இளைஞரை பொலிஸார் தேடி வருகின்றனர். முந்தல் பொலிஸார் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
http://www.tamilwin.com/show-RUmszATcKWlp5.html
யாழில் வேலையற்ற பட்டதாரிகளை இழுத்தடிக்கும் அமைச்சர் டக்ளஸ்
[ புதன்கிழமை, 08 ஒக்ரோபர் 2014, 10:35.43 AM GMT ]
பட்டதாரிகளுக்கு நியமனம் பெற்றுத் தருவது தொடர்பான கலந்துரையாடல் இன்று நண்பகல் 12 மணியளவில் யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
இதன் போது அமைச்சர், நாளைய அமைச்சரவைக் கூட்டத்தொடரில் நியமனம் தொடர்பாக கலந்துரையாடிய பின்னர் நியமனம் தொடர்பில் மீண்டும் 10 ஆம் திகதி பட்டதாரிகளுடன் கலந்துரையாடவுள்ளதாக தெரிவித்தார்.
இருப்பினும் இது போன்ற கலந்துரையாடல்கள் பலவற்றில் அமைச்சர் பெற்றுத் தருவதாக உறுதிமொழி வழங்கிய போதும் இதுவரை அதற்குரிய நடவடிக்கைகள் எதையும் மேற்கொள்ளவில்லை.
இதேவேளை ஜனாதிபதி யாழ். வருவதை முன்னிட்டு பல்வேறு அபிவிருத்தி வேலைத்திட்டங்களையும் வேலைவாய்ப்புக்களையும் குடாநாட்டிலுள்ள அரச ஆதரவுக் கட்சிகள் மிக மும்முரமான முன்னெடுத்து தேர்தலுக்கு தயாராவதாக பல தரப்பினரும் கருத்து தெரிவிக்கின்றனர்.
http://www.tamilwin.com/show-RUmszATcKWlp4.html
Geen opmerkingen:
Een reactie posten