தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 8 oktober 2014

தோல்வியுற்ற சமூகம் என்ற மாயையை உடைத் தெறிந்த தாயகத் தமிழர்கள்: பிரான்ஸில் மாவை!

கிளிநொச்சி செல்வா நகரில் மக்களை அச்சுறுத்தும் சமுர்த்தி உத்தியோகத்தர்
[ புதன்கிழமை, 08 ஒக்ரோபர் 2014, 09:48.06 AM GMT ]
கிளிநொச்சி செல்வாநகர் பகுதி சமுர்தி உத்தியோகஸ்தர் தகாத பல நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக செல்வாநகர் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
வசந்தன் என்பவர் கடந்த வடமாகாண சபை தேர்தலின்போது ஈ.பி.டி.பியினால் செல்வாநகர் பகுதிக்கு சமுர்தி உத்திஆயாகஸ்தராக நியமனம் வழங்கப்பட்டவர்.
தற்பொழுது ஈ.பி.டி.பியின் உறுப்பினராக செல்வாநகரில் செயல்ப்பட்டுவருவதுடன் அங்கு போரால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் மற்றும் விதவைகளை தொலைபேசியிலும் நேரிலும் அச்சுறுத்தி வருகின்றார்.
குறிப்பாக செல்வாநகரில் வாழ்வாதாரம் மற்றும் தொழில் பயிற்சி விழிப்புணர்வு தொடர்பாக நிறுவனங்களின் உத்தியோகத்தர்கள் அதிகாரிகள் வரும்போது தன்னுடைய அனுமதியுடனேயே செல்ல வேண்டுமென மக்களை மிரட்டிவருவாகவும் பல சந்தர்ப்பங்களில் கலந்துரையாடல்கள் கூட்டங்களுக்கு செல்வதற்கு விதவைகளை மிரட்டி தடுத்து அவர்களுக்கு கிடைக்கக்கூடிய உதவிகள் நன்மைகளை தடுத்துவருவதாகவும் தெரியவருகின்றது.
இது தொடர்பாக கிளிநொச்சிக்கு விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதிக்கு நேரில் முறையிடவுள்ளதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
http://www.tamilwin.com/show-RUmszATcKWlp1.html



தோல்வியுற்ற சமூகம் என்ற மாயையை உடைத் தெறிந்த தாயகத் தமிழர்கள்: பிரான்ஸில் மாவை
[ புதன்கிழமை, 08 ஒக்ரோபர் 2014, 10:26.48 AM GMT ]
தோல்வியுற்ற சமூகம் என்று தமிழ் சமூகத்தின் மீது படர்ந்த மாயையை புலம்பெயர் தமிழர்களின் பேராதரவுடன் தாயகத் தமிழர்கள் உடைத்தெறிந்து ஈழத்தமிழர் அரசியலில் புதிய வரலாற்றைப் படைத்தார்கள் என, இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
06.10.2014 அன்று மாலை 6.00 மணியளவில் பிரான்ஸ் பாரிஸின் புறநகரான லாகூர்னொவ் என்ற இடத்தில் 'பிரான்ஸ் தமிழர் சமூக ஒன்றியத்தின்" (F.T.S. A) ஏற்பாட்டில் ஒழுங்கு படுத்தப்பட்ட கலந்துரையாடல் நிகழ்வின் போது உரையாற்றிய மாவை சேனாதிராஜா,
கடந்த 30 வருடங்களாக நடந்த உள்நாட்டுப் போரின் காரணமாக தமிழினம், அழிவின் விழிம்பிற்கு சென்றுள்ளது. முக்கியமாக 70- 80 வீதமானகுழந்தைகள்,கர்ப்பிணித் தாய்மார்கள், பெண்கள் போசாக்கு குறைபாட்டிற்கு ஆளாகியுள்ளனர்.
இது எமது இனத்தை மிக மோசமாக அழிவுப் பாதையை நோக்கி இழுத்துச் செல்கின்றது. அத்துடன் போரின் காரணமாக உடல் ஊனமுற்றவர்கள், கணவனை இழந்த அல்லது தொலைத்த குடும்பங்கள் வாழ்வியல் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளன.
போர் முடிந்து ஐந்து வருடங்கள் நிறைவுற்ற போதிலும் இன்னும் அதிகளவு ராணுவப் பிரசன்னம் தமிழர் பிரதேசங்களில் நீடித்து வருவதால் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை, பெரும் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளது. இப்படியான இன்னும் பல காரணங்களால் தாயகத்தில் உள்ள நமது உடன்பிறப்புக்கள் படும் வேதனைகள் ஆயிரமாயிரமாக இருந்தபோதிலும் அவர்கள் தமது இன உரிமையை இழக்கவிடாமல், தமிழ் பேசும் மக்களின் ஏகோபித்த சக்தியான தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குதமது ஆதரவை வழங்கியுள்ளனர்.
2009 போர் முடிவடைந்த வேளை, பாரிய அழிவுகளை சந்தித்த நம்மினம் துவண்டு போயிருந்தது. உலக அரங்குகளில் தமிழர்கள் தோற்றுப் போன இனமாக சித்தரிக்கப்பட்டிருந்தனர்.
இவ்வேளையில் தான்,நம் மக்கள் தொடர்ந்து வந்த தேர்தல்களில் குறிப்பாக வடக்கு மாகாணசபை தேர்தலில் ஒன்று சேர்ந்த சக்தியாகதமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு ஆதரவு வழங்கியதன் மூலம் 'நாம் தோல்வியுற்ற சமூகம் அல்ல" என்ற செய்தியை உலகிற்கு அறிவித்தனர் எனசு ட்டிக்காட்டினார்.
தொடர்ந்து, பொதுமக்களின் கேள்விகளுக்கு மாவை அவர்கள் பொருத்தமானதும் விளக்கமானதுமாக பதிலளித்தார்.
குறிப்பாக, தமிழ் தேசிய கூட்டமைப்பு தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையில்,
இலங்கை தமிழரசுகட்சியின் தலைவர் என்ற முறையில் தமிழரசுகட்சியின் உறுப்பினர் ஒவ்வொருவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினராகவே செயற்படுவரெனவும் அதேபோல் தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஏனைய சகோதரகட்சிகளும் தமது தனித்துவத்தை இழக்காமல் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அங்கமாகவே செயற்பட்டு தமிழ் தேசிய கூட்டடைப்பினை இன்னும் பலம் பெரும் சக்தியாக விரிவடைய செய்ய வேண்டுமென்பதே தனது விருப்பமெனவும் தெரிவித்ததுடன் இது பற்றி சகோதர கட்சிகளுடன் கலந்துரையாடல்கள் நடைபெற்றுவருவதாகவும்,தொடர்ந்து தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கான மாநாடொன்றை கூடட்டி நல்லதொரு முடிவை தீர்மானித்து அறிவிப்பதாகவும் கூறியதுடன், இதேபோன்று முன்னொருதடவை தமிழ் பேசும் மக்களின் ஏகோபித்தசக்தியாகவிளங்கிய 'தமிழர் விடுதலைக் கூட்டணிக்கும்" 'சூரியன் சின்னத்திற்கும்"; நடந்தகதி போல் இன்னுமொருதடவை தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் நடந்துவிடக்கூடாதென்பதால் மிக அவதானத்துடன் செயற்படுவதாகவும் குறிப்பிட்டார்.
மேலும் வடமாகாணசபையின் முதல்வர் விக்கினேஸ்வரன் இந்த வாரம் ஏனைய அங்கத்துவகட்சிகள் தொடர்பாக வெளியிடப்பட்ட கருத்துக்கள் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில்,
தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து தமிழரசுகட்சி ஏனைய கட்சிகளுடன் இணைந்தே செயற்பட்டுவருகின்றது. தொடர்ந்தும் இணைந்தே செயற்படுவோம் என உறுதிபடக் கூறியஅதே வேளையில் தான் இந்தவாரம் ஐரோப்பாவில் இருந்தமையால் இச் செய்தி பற்றி உறுதிபடுத்தலை வெளிப்படுத்த முடியாமல் இருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும் கலந்துரையாடலின் இறுதியில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஜனநாயக வழி செயற்பாடுகளுக்கும், தாயக தமிழ் மக்களின் வாழ்வாதாரத்திற்கும் புலம் பெயர் சமூகம் என்றும் ஆதரவுடன் செயற்படுமென உறுதியுடன் எதிர்பார்ப்பதாக கூறியிருந்தார்.
http://www.tamilwin.com/show-RUmszATcKWlp3.html


Geen opmerkingen:

Een reactie posten