தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 8 oktober 2014

இரகசிய தகவல்கள் குடிவரவு திணைக்களம் ஊடாகவே கசிந்துள்ளது: மொரிசன் குற்றச்சாட்டு!

சந்தேக நபர்களை சித்திரவதை செய்த பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு சிறைத்தண்டனை
[ புதன்கிழமை, 08 ஒக்ரோபர் 2014, 05:19.24 AM GMT ]
சந்தேக நபர்கள் இருவரை சித்திரவதை செய்த குற்றத்திற்காக இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு தலா ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மஹியங்கனை பகரகம்மான பிரதேசத்தில் இரண்டு நபர்களை உப பொலிஸ் பரிசோதர்கள் தாக்கியதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
அம்பாறை பொலிஸ் நிலைய ஊழல் தவிர்ப்பு பிரிவின் பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய கஜநாயக்க மற்றும் மோட்டார் போக்குவரத்துப் பிரிவின் பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய சமந்த குமார தஸாநாயக்க ஆகியோருக்கே இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் 2003ம் ஆண்டு மஹியங்கனை பகரகம்மான என்னும் இடத்தைச் சேர்ந்த மொஹமட் நலீன் மற்றும் ஹஜ்ஜி மொஹமட் சன்சீல் ஆகியோரை கஞ்சா போதைப் பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்திருந்தனர்.
கைது செய்யப்பட்டதன் பின்னர் மிகவும் கடுமையான முறையில் தம்மைத் தாக்கியதாக சந்தேக நபர்கள் முறைப்பாடு செய்திருந்தனர்.
பொலிஸார் சந்தேக நபர்களை சித்திரவதை செய்ததாக குற்றம் சுமத்தி வழக்குத் தொடரப்பட்டிருந்தது.
வழக்கு விசாரணை பதுளை மேல் நீதிமன்றில் நடைபெற்று வந்தது.
குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் இருவருக்கும் தலா ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனையும், தலா பத்தாயிரம் ரூபா அபராதமும் விதிப்பதாக பதுளை மேல் நீதிமன்ற நீதவான் சம்பத் பீ.அபேயகோன் நேற்று அறிவித்தார்.
இலங்கையில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் சித்திரவதைகளில் ஈடுபடுவதாக குற்றம் சுமத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
பொலிஸார் சந்தேக நபர்களை சித்திரவதை செய்வது தொடர்பில் தண்டனை விதிக்கப்படுவதில்லை என சர்வதேச மனித உரிமை நிறுவனங்களும் உள்நாட்டு நிறுவனங்களும் குற்றம் சுமத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmszATcKWmxy.html
இரகசிய தகவல்கள் குடிவரவு திணைக்களம் ஊடாகவே கசிந்துள்ளது: மொரிசன் குற்றச்சாட்டு
[ புதன்கிழமை, 08 ஒக்ரோபர் 2014, 05:25.32 AM GMT ]
அண்மையில் நவ்ரு தீவு முகாம்களில் புகலிடக் கோரிக்கையாளர்களால் மேற்கொள்ளப்பட்ட, சிலர் தங்களை தாங்கள் துன்புறுத்தும் நடவடிக்கைகளின் தகவல்கள் குடிவரவு
திணைக்களத்தில் தொழில் புரியும் சிலரினால் தான் ஊடகங்களுக்கு கசிய விடப்பட்டுள்ளதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக அமைசர் மொரிசன் குறிப்பிட்டுள்ளார்.
இது எவ்வாறு நடந்தது என்பது குறித்து கண்டுபிடிக்குமாறு மொரிசன் மத்திய பொலிஸாரிடம் ஆணை பிறப்பித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
மேலும் நவ்ரு முகாமில் கடமையாற்றிய சிறுவர்கள் அமைப்பான சேவ்தசில்ரன் அமைப்பை சேர்ந்த சேவையாளர்கள் சிலரை அங்கிருந்து வெளியேற்றி உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
http://www.tamilwin.com/show-RUmszATcKWmxz.html

Geen opmerkingen:

Een reactie posten