தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 3 oktober 2014

ஜனாதிபதி ஆணைக்குழு மீது நம்பிக்கை இழப்பு! அமர்வுகளில் பாரிய மொழிபெயர்ப்பு தவறுகள்

விராது தேரரை விமர்சித்த இணையத்தளம் மீது சைபர் தாக்குதல்
[ வெள்ளிக்கிழமை, 03 ஒக்ரோபர் 2014, 12:03.42 AM GMT ]
பிரசித்தமான மியன்மார் இணையத்தளம் ஒன்று நேற்று சைபர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது 
இராவட்டி என்ற இந்த இணையத்தளம் பிரசுரித்திருந்த தலைப்புக் காரணமாகவே அதன்மீது ஊடுருவல் நடத்தப்பட்டதாக வெளிநாட்டு செய்தி ஒன்று தெரிவித்துள்ளது.
குறித்த இணையத்தளத்தில் இலங்கைக்கு சென்றிருந்த பௌத்த பிக்குவான விராது தேரரும் இலங்கையின் பொதுபல சேனாவும் சந்திப்பு நடத்திய செய்தியில் இனவாதம் என்ற தலைப்பு இடப்பட்டிருந்தது.
இந்தநிலையில் இராவட்டி இணையத்தளம் முஸ்லிம்களுக்கு சார்பானது என்றும், அது ஜிகாத்துக்கு ஆதரவளிப்பதாகவும் ஊடுருவலாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmszATXKVfw5.html
ஜனாதிபதி ஆணைக்குழு மீது நம்பிக்கை இழப்பு! அமர்வுகளில் பாரிய மொழிபெயர்ப்பு தவறுகள்
[ வெள்ளிக்கிழமை, 03 ஒக்ரோபர் 2014, 12:23.03 AM GMT ]
இலங்கையின் காணாமல் போனோர் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அமர்வுகளின் போது மொழிபெயர்ப்பு தவறுகள் ஏற்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சர்வதேச செய்திச்சேவை ஒன்று மனித உரிமையாளர்களை கோடிட்டு இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
இதன்போது ஆங்கிலத்தில் பேசும் அதிகாரிகள் தமிழ் பேசும் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து வாக்குமூலங்களை பெறுகின்றனர்.
இதன்போது மொழிபெயர்ப்புக்காக நியமிக்கப்படுகின்றவர்கள், பாதிக்கப்பட்டவர்களின் வாக்குமூலங்களை சரியாக மொழிபெயர்க்கவில்லை என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
உதாரணமாக. போரின் போது ஷெல் தாக்குதல்கள் இடம்பெற்றனவா? என்று ஆங்கிலத்தில் ஆணைக்குழுவினர் பாதிக்கப்பட்டவர்களிடம் கேட்கும்போது, மொழிபெயர்ப்பாளர் அதனை, குறித்த இடத்தில் இராணுவம் முகாம் இருந்ததா? என்று மொழிபெயர்க்கிறார் என்று மாற்றுக்கொள்கைக்கான நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதேவேளை சாட்சியமளிப்போர் இராணுவ புலனாய்வாளர்களால் புகைப்படம் எடுக்கப்படுவதாகவும் மாற்றுக்கொள்கைகளுக்கான நிறுவனம் குற்றம் சுமத்தியுள்ளது.
எனவே ஜனாதிபதி ஆணைக்குழு மீது நம்பிக்கை இழக்கப்பட்டுள்ளதாகவும் அந்த நிறுவனம் கூறியுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszATXKVfw6.html

Geen opmerkingen:

Een reactie posten