[ வெள்ளிக்கிழமை, 03 ஒக்ரோபர் 2014, 01:34.49 AM GMT ]
இரண்டு கட்சிகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது.
தமிழ் முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் குறித்து பேச்சுவார்த்தையில் கவனம் செலுத்தப்பட உள்ளது.
குறிப்பாக வடக்கு கிழக்கு தமிழ் முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கி வரும் காணி மற்றும் பாடசாலை பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்தப்பட உள்ளது.
கடந்த வாரம் இந்த சந்திப்பு நடத்தப்படவிருந்தது. எனினும் தவிர்க்க முடியாத காரணத்தினால் இந்த சந்திப்பு நடத்தப்படவில்லை.
எதிர்வரும் வாரத்தில் கொழும்பில் இந்த சந்திப்பு நடத்தப்பட உள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர்கள் இந்த சந்திப்பில் பங்கேற்க உள்ளதாக ஹசன் அலி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் முஸ்லிம் காங்கிரஸும் கூட்டாக இணைந்து வடக்கு கிழக்கு மாகாணங்களை மீளவும் இணைக்க முயற்சிப்பதாக தேசிய சுதந்திர முன்னணி குற்றம் சுமத்தியுள்ளது.
வடக்கு கிழக்கு மாகாணங்களை ஒன்றிணைத்து சுயாட்சி அதிகாரங்களை நிறுவும் முனைப்புக்களில் இரு கட்சிகளும் ஈடுபட்டுள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் பேச்சாளர் முஸாம்மில் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszATXKVfx0.html
ஜனாதிபதி மூன்றாம் தடவையாக பதவி வகிக்க முடியும்: நாடு முழுவதிலும் கருத்தரங்கு
[ வெள்ளிக்கிழமை, 03 ஒக்ரோபர் 2014, 02:09.45 AM GMT ]
எதிர்வரும் ஜனவரி மாதத்தில் ஜனாதிபதித் தேர்தலை நடாத்தும் முயற்சிகளில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.
இவ்வாறான ஓர் நிலைமையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மூன்றாம் தவணைக்காக போட்டியிடுவது சட்டவிரோதமானது என முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா, ஜே.வி.பி கட்சி உள்ளிட்ட தரப்பினர் வாதிட்டு வருகின்றனர்.
எனினும், மூன்றாம் தவணைக்காக ஜனாதிபதி பதவி வகிப்பதில் சிக்கல் கிடையாது என ஆளும் கட்சி அறிவித்துள்ளது.
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதில் சிக்கல் கிடையாது என்பதனை தெளிவுபடுத்தும் வகையில் நாட்டின் பல பகுதிகளிலும் பிரச்சாரம் செய்யப்பட உள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால் இந்த விசேட கருத்தரங்குகள் நாடு முழுவதிலும் முன்னெடுக்கப்பட உள்ளன.
http://www.tamilwin.com/show-RUmszATXKVfx1.html
ரணில், ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியீட்ட மாட்டார்!– சோபித தேரர்
[ வெள்ளிக்கிழமை, 03 ஒக்ரோபர் 2014, 02:20.49 AM GMT ]
முன்னாள் நாடாளுமன்ற மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் கோட்டே ஸ்ரீ நாக விஹாரையில் வைத்து நேற்று சோபித தேரரரை சந்தித்தனர். இதன் போது அவர் பொது வேட்பாளர் குறித்து கருத்து வெளியிட்டுள்ளார்.
பொது வேட்பாளர் யார் என்பது மிக விரைவில் அறிவிக்கப்படும். ஏனைய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடாத்தி உரிய வேட்பாளர் ஒருவரை களமிறக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்க போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.
ரணில் விக்ரமசிங்கவினால் தேர்தலில் வெற்றியீட்ட முடியாது.
எனினும், ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவு இன்றி பொது வேட்பாளர் ஒருவரை போட்டியிடச் செய்வதில் பயனில்லை.
45 நாட்களுக்குள் ஜனாதிபதித் தேர்தலை நடாத்தி முடிக்க அரசாங்கம் முயற்சிப்பதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
ஆளும் கட்சி ஏற்கனவே ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளது.
எனவே விரைவில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பொது வேட்பாளர் குறித்து தீர்மானம் எடுக்க வேண்டுமென சோபித தேரர் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszATXKVfx2.html
முன்னாள் பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கு விசா வழங்க அமெரிக்கா மறுப்பு
[ வெள்ளிக்கிழமை, 03 ஒக்ரோபர் 2014, 03:35.40 AM GMT ]
இலங்கையின் முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் ஒருவர், விசா தொடர்பாக தாக்கல் செய்த மேன்முறையீட்டை அமெரிக்க நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபரான பிரேமதாச உடுகம்பொல, அமெரிக்காவில் விசா வழங்குமாறு கோரி தாக்கல் செய்த விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டிருந்தன.
மூன்று தடவைகள் விண்ணப்பித்திருந்ததாகவும் அவை அனைத்தையும் பல்வேறு காரணங்களுக்காக நிராகரிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து விசா வழங்குமாறு கோரி மேன்முறையீடு செய்யப்பட்டிருந்தது. இந்த மேன்முறையீட்டை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட அமெரிக்க நீதிமன்றம், வீசா வழங்குவதற்கு முடியாது என அறிவித்துள்ளது.
உடுகம்பொல மீது 1980களில் ஜே.வி.பி கிளர்ச்சியை ஒடுக்குவதற்கு கடுமையான வழி முறைகளை பின்பற்றியதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சட்டவிரோத படுகொலைகளுடன் தொடர்புடைய ஒருவருக்கு அமெரிக்க விசா வழங்கப்பட முடியாது என அமெரிக்க நீதிமன்றம் அறிவித்துள்ளது.
உடுகம்பொலவின் மனைவி மற்றும் நான்கு பிள்ளைகளுக்கு அமெரிக்கப் பிரஜை உரிமை வழங்கப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszATXKVfx3.html
Geen opmerkingen:
Een reactie posten