தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 3 oktober 2014

சிறுவனை தூக்கி மேசையில் அடித்த வாத்தி: சிங்களவர் அடித்தது போக இப்ப தமிழர்களே... ?

மட்டக்களப்பு கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட மயிலங்கரச்சை மலைமகள் வித்தியாலத்தில் ஆசிரியரினால் தாக்கப்பட்டதாக கூறப்படும் மாணவன் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக அதிர்வு இணையம் அறிகிறது. கடந்த 26ஆம் திகதி குறித்த சிறுவன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டான். ஆசிரியரால் குறித்த சிறுவன் மேசையில் தூக்கி அடிக்கப்பட்டுள்ளதாக முறைப்பாடு கிடைத்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
தந்தையை இழந்த இந்த சிறுவனின் தாய் சவுதி அரேபியாவில் பணிப்பெண்ணாக பணியாற்றி வருவதுடன், தாம் பாதுகாவலராக இருப்பதாக அவனது பாட்டனார் சோகம் ததும்ப தெரிவித்தார். பிழைகள் விடுவது மணவர்கள் மற்றும் சிறுவர்களின் இயல்பு. அதனை பொறுத்துக்கொண்டு கல்வி கற்றுக்கொடுக்கவேண்டியது ஆசிரியரின் கடமை. வீட்டில் மனைவியுடன் சண்டை போட்டுவிட்டு , அல்லது பணக் கஷ்டத்தில் ரத்தக் கொதிப்பில் பள்ளிக்கு வரும் ஆசிரியர்கள், தமது கோபதாபங்களை மாணவர்கள் மீது காட்டுகிறார்கள். தந்தையை இழந்து தாயைப் பிரிந்து பாட்டனாருடன் வாழ்ந்து வரும் இச் சிறுவன் என்ன பாவம் செய்தான் ?
அல்லது இவனை ஒரு மேசையோடு தூக்கி அடிக்கும் படி அவன் என்ன தான் அப்படிச் செய்துவிட்டான். இது போன்ற ஆசிரியர்கள் கைதுசெய்யப்படவேண்டும். சட்ட நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இவர்களைப் போன்ற ஆசிரியர்கள் இனியாவது திருந்துவார்கள்.
http://www.athirvu.com/newsdetail/1133.html

Geen opmerkingen:

Een reactie posten