[ புதன்கிழமை, 08 ஒக்ரோபர் 2014, 03:41.17 PM GMT ]
குறித்த 7 பேரும் தென்கொரியாவில் சட்டவிரோதமான தொழிலை பெற்றிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
இந்த வீரர்களில் இரண்டு இலங்கையர்கள், நேபாளியர்கள் மூவர், பங்களாதேஸ் மற்றும் பாலஸ்தீனத்தை சேர்ந்த தலா ஒருவர் உள்ளடங்குகின்றனர்.
இந்தநிலையில் குறித்த 7 பேருக்கும் சிலர் உதவியளித்த நிலையிலேயே அவர்கள் தொழிலை பெற்றிருக்கலாம் என்று தென்கொரிய பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
தென்கொரிய குடிவரவு துறையினர் ஏற்கனவே விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். அவர்களுக்கு பொலிஸாரும் உதவி வருகின்றனர்.
குறித்த 7 வீரர்களுக்கு ஒக்டோபர் 19ஆம் திகதியன்று வீசா நிறைவடைகிறது.
இதன்பின்னர் அவர்கள் சட்டவிரோத குடியேறிகளாகவே கருதப்படுவர் என்றும் தென்கொரிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எனவே கண்டுபிடிக்கப்பட்டவுடன் அவர்கள் நாடுகடத்தப்படுவர் என்று பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
ஏற்கனவே 2002ம் ஆண்டிலும் ஆசியன் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்ற வீரர்கள் பலர் தென்கொரியாவில் காணாமல் போன சம்பவம் நிகழ்ந்தமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmszATcKWlq7.html
இலங்கையில் இன்று இரவு நேர ரயில் சேவைகள் யாவும் நிறுத்தம்
[ புதன்கிழமை, 08 ஒக்ரோபர் 2014, 03:47.17 PM GMT ]
இலங்கையில் இன்று இரவு நேர ரயில் சேவைகள் யாவும் நிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
ரயில் சேவையின் இணையம் இன்று இரவு முதல் ஆரம்பிக்கும் தொழிற்சங்க போராட்டம் காரணமாக ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக திணைக்களம் அறிவித்துள்ளது.
இதனால், பதுளை, மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் பளை ஆகிய இடங்களுக்கான இரவு நேர தபால் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.
இதன்காரணமாக ஆயிரக்கணக்கான பயணிகள் அசௌகரிய நிலைக்கு உள்ளாகியுள்ளனர். ரயில் சேவைகள் அனைத்துப் பிரிவினரும் இந்த சேவைப் பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
ஏற்கனவே பல்வேறு கோரிக்கைகள் தொடர்பில் அதிகாரிகள் தமக்கு வழங்கிய உறுதி மொழிகள் நிறைவேற்றப்படவில்லை என்று குற்றம் சுமத்தியே சேவைப்புறக்கணிப்பு மேற்கொள்ளப்படுகிறது.
தமது அடிப்படை சம்பளம் 15 ஆயிரம் ரூபாவில் இருந்து 16ஆயிரம் ரூபாவாக உயர்த்தப்பட வேண்டும் என்ற பிரதான கோரிக்கை இந்த போராட்டத்தின் போது முன்வைக்கப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszATcKWlry.html
சப்ரகமுவ நிலையை எஸ்.பி. ஏனைய பல்கலைக்கழகங்களிலும் எதிர்நோக்கலாம் என்று எச்சரிக்கை
[ புதன்கிழமை, 08 ஒக்ரோபர் 2014, 04:01.12 PM GMT ]
இதேபோன்ற நிலைமையை அவர் ஏனைய பல்கலைக்கழகங்களிலும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் எச்சரித்துள்ளது.
மாணவர்கள் தமது உரிமைகளுக்காகவே குரல் கொடுக்கின்றனர்.
இதனை கண்ணீர்ப்புகை கொண்டு அடக்க முனைவது ஏற்றுக்கொள்ள முடியாது என்று அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszATcKWlrz.html
வட மாகாண சபையை புறக்கணித்த மஹிந்த! முதல்வர் விக்னேஸ்வரன் குற்றச்சாட்டு
[ புதன்கிழமை, 08 ஒக்ரோபர் 2014, 04:41.34 PM GMT ]
இரண்டு அமெரிக்க ராஜதந்திரிகளுடன் இன்று நடத்திய சந்திப்பின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கில் ஜனநாயகம் கிடையாது, வடக்கு மாகாணசபைக்கு அரசாங்கம் பணத்தையோ அதிகாரங்களையோ வழங்கவில்லை.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இந்த வார இறுதியில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்ய உள்ளார்.
இந்த விஜயம் தொடர்பில் வட மாகாணசபையின் எந்தவொரு உதவியும் பெற்றுக்கொள்ளப்படவில்லை.
இதன் மூலம் ஜனாதிபதியிடம் ஜனநாயகம் கிடையாது என்பது வெளியாகியுள்ளது என விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் இருவர் யாழ்ப்பாணத்திற்கு மேற்கொண்டிருந்த விஜயத்தின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszATcKWlr0.html
Geen opmerkingen:
Een reactie posten