தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 8 oktober 2014

கீதாஞ்சலி இடுப்பில் மகிந்தர் கையைப் போட: அவர் ஆடும் ஆட்டமே தனி !

பல்வேறு சவால்களுக்கு மத்தியில் நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்தியிருக்கும், மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் வடபகுதி மக்களைத் தேடிச்சென்று அவர்களின் தேவைகளை நிறைவேற்றி வருவதானது சிறுபான்மையினர் மீது அவர் கொண்டிருக்கும் அக்கறையை தெளிவாக வெளிக்காட்டுவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் கீதாஞ்சலி நகுலேஸ்வரன் தெரிவித்தார். முன்னதாக வெளியான படத்தில் கீதாஞ்சலி இடுப்பில் மகிந்தர் கைவைத்து அழைத்துச் செல்வது போன்ற காட்சிகளும் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்க விடையம்.
எதிர்வரும் 12ஆம் திகதி மகிந்தர் கிளிநொச்சிக்கு மேற்கொள்ளவிருக்கும் விஜயமானது கிளிநொச்சி மாவட்ட மக்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்திருப்பதாக அவர் கூறினார். மகிந்தர் விஜயம் தொடர்பாக மேலும் கருத்துத் தெரிவித்த அவர், கடந்த கால 30 வருட குழப்ப சூழ்நிலையிலிருந்து நாட்டை மீட்டிருக்கும் அவர், வடக்கில் பாரிய அபிவிருத்திப் பணிகளை முன்னெ டுத்துள்ளார் என்று புகழாரம் சூட்டியுள்ளார். இதன்மூலம், உட்கட்டுமான அபிவிருத்திகளில் மாத்திரமன்றி மக்களின் மனங்களிலும், அவர்களின் வாழ் வாதாரத்திலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதனை அனுபவ ரீதியாக உணரக் கூடியதாகவுள்ளது. குறிப்பாக மக்களின் பொதுவான சிந்தனைகளிலும், தனிப்பட்ட வாழ்க் கையிலும் அபிவிருத்தி ஏற்பட்டுள்ளது என்று பல விடையங்களை இவர்கள் கூறிவருகிறார்கள்.
ஆனால் 2009 மே மாதம் மட்டும் 40,000 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டார்களே ! அதனைப் பற்றி எவரும் வாய் திறக்கமாட்டார்கள் .
http://www.athirvu.com/newsdetail/1180.html

Geen opmerkingen:

Een reactie posten