[ புதன்கிழமை, 08 ஒக்ரோபர் 2014, 01:30.28 PM GMT ]
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டுள்ள அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
கடந்த செப்டம்பர் 27ஆம் திகதி முதல் இந்த சிறை வளாகத்தினை கோயில் போலவே மாற்றி வருகின்றனர் அதிமுகவினர். மொட்டை அடிப்பதும், தேங்காய் உடைப்பதும், சிறை வளாகத்திலேயே அங்கப் பிரதட்சணம் செய்வதும் என அமர்களப்படுத்தி வருகின்றனர் அதிமுகவினர்.
இந் நிலையில் பரப்பன அக்ரகாரா சிறை வளாகத்துக்கு வெளியே ஜோதிடர் ஒருவர் சுற்றி வருகிறார். அவர் பெயர் நாகராஜாம். அம்மாவுக்கு இந்த தண்டனை கிடைக்க முக்கிய காரணம், அவர் 16.5.2011 அன்று பதவியேற்றதுதான்.
அந்த நாளும் நேரமும் சரியில்லை. அதனால்தான் இந்த சிறைத் தண்டனை கிடைத்துள்ளது என்று கூறி வருகிறார். இதை அவருக்கு ஏற்கனவே ‘பக்ஸ்' மூலம் அனுப்பினேன் என்று கூறி அந்த பேப்பர்களை கைகளில் ஆதாரமாக வைத்துக்கொண்டுள்ளார்.
வரும் 19ம் திகதிக்கு மேல் அவருக்கு ஜாமீன் கிடைத்து விடும். சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு முன்பை விட வேகமாக செயல்படுவார். மீண்டும் நாடாளுவார். அந்த நாள் வெகுதூரத்தில் இல்லை என்று சொல்லிக் கொண்டு இருந்தார்.
அம்மாவுக்கே ஜோதிடம் சொல்வதால், அவரைச் சுற்றி அ.தி.மு.க.வினர் கூடி நின்று அவரது ஜோதிடத்தை ஆர்வத்துடன் கேட்கின்றனர். இதனால் ஜோதிடரைச் சுற்றி எப்போதும் பரபரப்பாக கூட்டம் இருக்கிறதாக தெரிவிக்கப்படுகிறது.
http://www.tamilwin.com/show-RUmszATcKWlq3.html
முல்லைத்தீவில் பெண் கொள்ளைக் கும்பல் கைது
[ புதன்கிழமை, 08 ஒக்ரோபர் 2014, 01:31.41 PM GMT ]
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு மற்றும் உடையார்க்கட்டு பிரதேசங்களில் உள்ள வர்த்தக நிலையங்களை உடைத்து பணம், பொருட்களை கொள்ளையிட்ட 4 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்ட தேடுதலில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த பெண்கள் கொள்ளையிட்ட பொருட் தொகை ஒன்று புதுக்குடியிருப்பு பிரசேதத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளன.
மின்சார தளபாட விற்பனை நிலையங்கள், ஆடை விற்பனை நிலையங்கள், மருந்தகங்கள் போன்றவற்றை உடைத்து, இந்த பெண்கள் பணம் மற்றும் பொருட்களை கொள்ளையிட்டு வந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட பெண்கள் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmszATcKWlq4.html
பொதுபல சேனாவின் கோரிக்கையினை ஆர்எஸ்எஸ் அமைப்பு நிராகரிப்பு
[ புதன்கிழமை, 08 ஒக்ரோபர் 2014, 03:23.20 PM GMT ]
இலங்கையின் பௌத்த கடும்போக்கு அமைப்பான பொதுபலசேனா நேற்று வெளியிட்ட தகவல் ஒன்றில், இந்தியாவின் ராஸ்ட்ரிய சுவாயம்சேவாக் சங்க் என்ற ஆர்எஸ்எஸ் என்ற அமைப்புடன் கூட்டணி அமைக்கவுள்ளதாக தெரிவித்திருந்தது.
எனினும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் பேச்சாளர் ராம் மாதவ், இன்று வெளியிட்டுள்ள கருத்தில்,
பொதுபலசேனாவுடன் பங்காளித்துவம் தொடர்பில் எந்த தகவலையும் தாம் அறியவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
எனவே பொதுபலசேனாவின் அறிவித்தல் ஏற்றுக்கொள்ளத்தக்க அறிக்கையல்ல என்றும் அவர் கூறியுள்ளார்.
ஆர்எஸ்எஸ் அமைப்பை பொறுத்தவரையில் அது பொதுவாக சர்வதேசத்தில் பங்காளித்துவத்தை கொண்டிப்பதில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszATcKWlq5.html
தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கு ஆட்சி மாற்றம் மட்டும் போதாது! சுரேஸ் எம்.பி
[ புதன்கிழமை, 08 ஒக்ரோபர் 2014, 03:31.09 PM GMT ]
யாழ்.குடாநாட்டுக்கு இன்றைய தினம் விஜயம் ஒன்றிணை மேற்கொண்டிருக்கும் மேற்படிக் குழு வடமாகாண முதலமைச்சர், வடமாகாண அமைச்சர்கள் ஆகியோரை சந்தித்ததுடன், தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்வில் நாடாளுமன்ற உறுப்பினரையும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர்.
இதன்போதே மேற்படி விடயம் சுட்டிக் காட்டப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
மேற்படி சந்திப்பு தொடர்பில் மேலும் அவர் தெரிவிக்கையில்,
சுமார் 2மணிநேரம் குறித்த சந்திப்பு இடம்பெற்றிருந்தது. இதன் போது வடமாகாணத்தில் நிலவும் மீள்குடியேற்றம் தொடர்பில் அவர்களுக்கு அதிகம் தெரியப்படுத்தியிருக்கின்றோம்.
வடக்கில் 28ஆயிரம் ஏக்கர் தமிழ் மக்களுடைய நிலங்களை ஆக்கிரமித்து படையினர் நிலைகொ ண்டுள்ளனர். அதாவது 10லட்சம் மக்களுக்கு ஒன்றரை லட்சம் படையினர் உள்ளனர்.
ஆனால் இந்த நிலைமை இலங்கையின் மற்றய மாகாணங்களில் இல்லை. எனவே படையினர் இவ்வாறு நிலை கொண்டிருப்பதனால் இந்தியாவில் ஒன்றைரை லட்சம் மக்கள் உட்பட வடக்கில் பல லட்சம் மக்கள் தங்கள் சொந்த நிலங்களில் மீள்குடியேற முடியாத நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.
எனவே படையினர் இங்கிருந்து வெளியேற்றப்படவேண்டும். அதுவே மீள்குடியேற்றத்திற்கான முதல் சாதகமான நிலையாகும்.
மேலும் படையினர் இங்கே நிலைகொண்டுள்ளமையினால் மக்களுடைய இயல்பு வாழ்க்கை மற்றும் ஜனநாயக தன்மை ஆகியனவும் பாதிக்கப்படுகின்றது. சாதாரணமாக மக்கள் ஒரு கூட்டத்தை கூட கூட்ட முடியவில்லை. என்பதை தெளிவாக தெரிவித்திருந்தோம்.
இதேபோன்று வடக்கு மாகாணசபை தமிழ் தேசிய கூட்டமைப்பினரிடம் உள்ளமையினால் இலங்கையின் மற்றய மாகாணங்களை விடவும் வடக்கு மாகாணம், அதிகமாக புறக்கணிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இங்கே ஆளுநருடையதும், பிரதம செயலாளரினதும் ஆட்சியே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
ஒட்டுமொத்தமாக வடமாகாணசபையை முடக்கும் நடவடிக்கையே நடக்கின்றது. என தெரிவித்தோம். இதன்போது அவர்கள் கேட்டார்கள் இலங்கையில் ஒரு ஆட்சி மாற்றம் உருவானால் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படும் என நினைக்கிறீர்களா? என நாம் அதற்கு கூறினோம். இன்று இந்த அரசாங்கம் செய்வதையே மற்றய அரசாங்கங்களும் செய்தன. இனிமேலும் செய்யப்போகின்றன.
எனவே ஆட்சிமாற்றத்தினால் தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் தீர்வு அல்லது அரசியல் இலக்கினை அடைய முடியும். என பேசப்படும் பேச்சுக்களில் எமக்கு நம்பிக்கையில்லை. எமக்கு மட்டுமல்ல தமிழ் மக்களுக்கும் நம்பிக்கையில்லை. என தெரிவித்தோம். என்றார்.
http://www.tamilwin.com/show-RUmszATcKWlq6.html
Geen opmerkingen:
Een reactie posten