தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 8 oktober 2014

இலங்கைக்கு எதிராக தீர்ப்பளிக்க முயற்சி: ஐ.நா மறுப்பு!

ஐ.தே.கட்சி தோல்வியை ஒப்புக்கொண்டு விட்டது: அமைச்சர் பவித்ரா
[ புதன்கிழமை, 08 ஒக்ரோபர் 2014, 12:27.51 PM GMT ]
அடுத்து நடக்க போகும் தேர்தல் எந்த தேர்தலாக இருந்தாலும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அமோக வெற்றியை பெறும் என மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மகளிர் அணியின் ஹோமாகம கிளையின் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வெற்றியை எந்த சக்தியாலும் தடுத்து விட முடியாது.
ஜனாதிபதித் தேர்தலோ, பொதுத் தேர்தலோ அடுத்து நடைபெறும் எந்த தேர்தலாக இருந்தாலும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வெற்றி உறுதியானது. அது சவாலானதாக இருக்க போவதில்லை.
எனினும் பல பிரச்சினைகளை எதிர் நோக்கிய ஐக்கிய தேசியக் கட்சியின் ஏற்கனவே தோல்வியை ஒப்புக்கொண்டு விட்டது.
இதனால், அடிப்படையற்ற குற்றங்களை அரசாங்கத்தின் மீது சுமத்தி அந்த கட்சி மக்களை தவறாக வழிநடத்தும் அவப்புகழான செயலில் ஈடுபட்டு வருகிறது எனவும் பவித்ரா வன்னியாராச்சி குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszATcKWlq0.html
நடுவானத்தில் திருட்டு: சிறைவாசம் அனுபவிக்கும் சீனப் பெண்
[ புதன்கிழமை, 08 ஒக்ரோபர் 2014, 12:45.59 PM GMT ]
கொழும்பில் இருந்து சிங்கப்பூர் நோக்கிப் பயணித்த விமானத்தில் சக பயணியின் பணத்தைக் கொள்ளையிட்ட ஒருவருக்கு 08 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. 
குறித்த விமானத்தில் பயணித்த கனேடிய பிரஜையின் பையிலிருந்து 175 டொலர்களை திருடியதாக, சீன பிரஜை ஒருவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.
சந்தேகநபர் குற்றத்தை நீதிமன்றத்தில் ஒத்துக்கொண்டதால் அவருக்கு குறைந்தபட்ச சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையில் விடுமுறையை கழித்து விட்டு  சிங்கப்பூருக்கு செல்லும் வழியில் சந்தேகநபரான சீனப் பிரஜை பணத்தை கொள்ளையிட்டிருந்தாக தெரிவிக்கப்படுகிறது.
http://www.tamilwin.com/show-RUmszATcKWlq1.html
இலங்கைக்கு எதிராக தீர்ப்பளிக்க முயற்சி: ஐ.நா மறுப்பு
[ புதன்கிழமை, 08 ஒக்ரோபர் 2014, 01:03.15 PM GMT ]
இலங்கைக்கு எதிராக தாம் தீர்ப்பளிக்க முயற்சிப்பதாக அனுமானிக்கப்படுவதை ஐ.நா மனித உரிமை குழு இன்று மறுத்துள்ளது.
நாடுகள் குறித்து தீர்ப்பளிப்பதும் அவற்றை ஒப்பிடுவதும் குழுவின் பணியல்ல என ஐ.நா மனித உரிமை குழுவின் தலைவர் சேர் நிஜல் ரொட்லி தெரிவித்துள்ளார்.
இலங்கையில் கடினமான மோதல் நடந்தது என்பதை குழு புரிந்து கொள்கிறது. ஆனால், அங்கு தொடரும் தண்டனையில் இருந்து தப்பித்தல் மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பான கரிசனைகள் தொடர்கின்றன எனவும் அவர் கூறியுள்ளார்.
ஐ.நா மனித உரிமை குழுவின் இலங்கை தொடர்பான இரண்டு நாள் மூடப்பட்ட ஆய்வுகளின் பின்னர் ஜெனிவாவில் அவர் இன்று இதனை குறிப்பிட்டுள்ளார்.
48 மணிநேரம் நடைபெற்ற இந்த ஆய்வில் குழு, சில பிரச்சினைகள் தொடர்பில் விளக்கங்களை எழுப்பியது.
முன்னதாக குழுவின் ஆய்வில் உரையாற்றிய ஜெனிவாவுக்கான இலங்கையின் தூதுவர் ரவிநாத ஆரியசிங்க, இலங்கை இதனை உணர்ந்தே காணாமல் போனவர்கள் தொடர்பான ஆணைக்குழுவை நியமித்து அதன் பதவி காலத்தையும் நீடித்துள்ளதாக கூறியிருந்தார்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, இந்த ஆணைக்குழுவை நியமித்துள்ளதுடன் அதன் பணிகளை செய்ய அனுமதித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
முள்ளிவாய்க்கால் தினத்தில் தமிழர்கள் இறந்தவர்களை நினைவுக்கூர அனுமதி மறுக்கப்படுவது குறித்து வெளியிடப்பட்ட கவலை குறித்து இன்று பதிலளித்த, ஆரியசிங்க, அந்த தினத்தில் பயங்கரவாதிகள் மற்றும் அதன் தலைவர்களை நினைவுக்கூருவது பொருத்தமான விடயம் அல்ல என தெரிவித்துள்ளார்.
போரின் இறுதிக்கட்டத்தில் இராணுவத்தினர் தமிழ் மக்கள் மீது தாக்குதல் நடத்துவதை தவிர்த்தாகவும் இராணுவத்தினர் முழுமையாக மனிதாபிமானத்தை மதிக்கும் சிறந்த ஒழுக்கங்களை கொண்டது இராணுவம் எனவும் அவர் கூறியுள்ளார்.
ஆனாலும் இராணுவத்தின் மீது நியாயமற்ற குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. இந்த நிலையிலும் இராணுவத்தின் மீதான ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கள் பற்றிய விசாரணைகள் தொடர்கின்றன.
அதேவேளை ஊடவியலாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் சுதந்திரமான தமது செயற்பாடுகளை முன்னெடுக்க நாட்டில் அனுமதியில்லை என்று சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களை ஆரியசிங்க மறுத்துள்ளார்.
கருத்துச் சுதந்திரம் மற்றும் ஒன்றுக் கூடும் சுதந்திரம் என்பன முழுமையாக மதிக்கப்படுகிறது. எனினும் அந்த சுதந்திரம் சில சந்தர்ப்பங்களில் மீறப்படுவதுடன் அதற்கு பரிகாரம் உள்ளது எனவும் இலங்கை தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszATcKWlq2.html

Geen opmerkingen:

Een reactie posten