வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் மற்றும் ஸ்ரீ.ல.மு.கா தலைவர் ரவூப் ஹக்கீம் ஆகியோருக்கு நாட்டைத் துண்டாட முயற்சிக்க வேண்டாம் என்று மல்வத்து பீடம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இலங்கையிலுள்ள அமெரிக்க தூதுவரான மிசெல் ஜே. சீசன், நேற்று மல்வத்து பீடத்தின் பிரதி சங்க நாயக்க நியாங்கொட விஜித தேரரை சந்தித்த போதே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நாட்டை துண்டாடும் எந்த முயற்சியிலும் இறங்க வேண்டாமென வடமாகாண முதலமைச்சரான சீ.வி.விக்னேஸ்வரனிடமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களிடம் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரான ரவூப் ஹக்கீம் உள்ளிட்ட அனைவரிடமும் எடுத்துக் கூறுங்கள் என நியாங்கொட விஜித தேரர் அமெரிக்கத் தூதுவரிடம் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட நியாங்கொட தேரர், பௌத்த மத குருமாரே இந்நாட்டின் கலாசாரத்தில் முதன்மையானவர்கள்.
தேரர்களைச் சுற்றியே கலாசாரமும், சமூக கட்டமைப்புகளும் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த நாட்டின் பெரும்பான்மையினர் சிங்களவர்களே. அவர்களுக்கு உள்ள உரிமைகளையும் சலுகைகளையும் விட தங்களுக்கு அதிகளவில் வேண்டுமென இந்த நாட்டில் வாழும் சிறுபான்மை இனத்தினர் எதிர்பார்க்கக் கூடாது,எதிர்பார்க்கவும் முடியாது.
இந்நாட்டின் அனைத்து மக்களும் பரஸ்பர நம்பிக்கையுடனும், ஒற்றுமையுடனும் வாழ வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Geen opmerkingen:
Een reactie posten