[ புதன்கிழமை, 01 ஒக்ரோபர் 2014, 09:56.49 AM GMT ]
வாழைச்சேனை மயிலங்கரச்சை மலைமகள் வித்தியாலயத்தில் புலமை பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற ஆ.டல்றின் நிக்கோலா ஹாமா 158 புள்ளிகளைப் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளதாக பாடசாலை அதிபர் கே.பரமானந்தராஜா தெரிவித்தார்.
சித்தியடைந்த மாணவிக்கு செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் பாடசாலைக்கு சென்று பாராட்டி மாணவிக்கு துவிச்சக்கர வண்டி வழங்கி வைத்தார்.
அத்தோடு பரீட்சைக்குத் தோற்றிய ஏனைய மாணவர்கள் மற்றும் சித்தி பெற்ற மாணவியின் பெற்றோர்களையும் பாராட்டினார்.
இதன்போது பாடசாலை அதிபர் கே.பரமானாந்தராஜா, கற்பித்த ஆசிரியரான திருமதி.ற.சுபேந்திரகுமார், மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

லண்டனில் லியம் பொக்ஸ் மற்றும் ரணில் சந்திப்பு
[ புதன்கிழமை, 01 ஒக்ரோபர் 2014, 10:08.07 AM GMT ]
கன்சர்வேடிவ் கட்சியின் மாநாட்டில் கலந்து கொள்ள இங்கிலாந்து சென்றுள்ள எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க, லண்டன் மேயர் போரிஸ் ஜோன்சன் பிரபுவை சந்தித்துள்ளார்.
அத்துடன் இங்கிலாந்து முன்னாள் அமைச்சர் லியம் பொன்ஸை ரணில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
லண்டன் சென்றுள்ள எதிர்க்கட்சித் தலைவர் பிரித்தானிய எதிர்க்கட்சியின் பிரதிநிதிகளை சந்தித்து வருகிறார்.
வவுனியா உட்பட வன்னி மாவட்டத்தில் கடந்த 8 மாதங்களுக்கு பின்னர் தற்போது மழை பெய்துவருகிறது.
வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் அமைச்சர்கள் பொ.ஐங்கரநேசன், த.குருகுலராஜா, ப.சத்தியலிங்கம், பா.டெனீஸ்வரன் சகிதம் மன்னாரில் மக்கள் குறை கேட்கும் சந்திப்பு ஒன்றை நேற்று மேற்கொண்டுள்ளார்.
லண்டன் சென்றுள்ள எதிர்க்கட்சித் தலைவர் பிரித்தானிய எதிர்க்கட்சியின் பிரதிநிதிகளை சந்தித்து வருகிறார்.
நீண்டகாலத்திற்கு பின்னர் வன்னியில் மழை
[ புதன்கிழமை, 01 ஒக்ரோபர் 2014, 10:15.58 AM GMT ]
வறட்சியினால் பாதிக்கப்பட்டிருந்த வன்னி மக்களுக்கு மழை பெய்ய ஆரம்பித்திருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
2013 ஆம் ஆண்டு டிசம்பர் மாத்திற்கு பின்னர் வன்னி மாவட்டத்திற்கு குறிப்பிடத்தக்க மழை வீழ்ச்சி கிடைக்கவில்லை. இதனால் மாவட்டத்தில் இருக்கும் 80 வீதமான குளங்கள் வற்றி போயின.
குளங்கள் வற்றியதால், வன்னி மக்கள் குடிநீர் மற்றும் பயிர் செய்கையில் ஈடுபடுவதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வந்தனர்.

வடக்கு முதல்வர் அமைச்சர்கள் சகிதம் மன்னாரில் மக்கள் சந்திப்பு
[ புதன்கிழமை, 01 ஒக்ரோபர் 2014, 10:31.47 AM GMT ]
மன்னார் மாவட்டத்தில் பின்தங்கிய பகுதிகளான ஈச்சளவக்கை, சன்னார் பிரதேச மக்கள் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனிடம் தங்கள் பகுதிகளுக்கு நேரில் வந்து தாங்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளையும் அறிந்து அதற்கான தீர்வைப் பெற்றுத்தருமாறு வேண்டுகோள் விடுத்திருந்தனர்.
இதையடுத்தே முதலமைச்சர் தலைமையிலான அமைச்சர் குழுவினர் இப்பகுதிகளுக்குச் சென்று மக்கள் சந்திப்பை மேற்கொண்டுள்ளனர். இச்சந்திப்பின்போது பாராளுமன்ற உறுப்பினர்கள் செல்வன் அடைக்கலநாதன், வினோ நோகாதரலிங்கம் மற்றும் அமைச்சின் அதிகாரிகளும் கலந்துகொண்டிருந்தார்கள்.
ஈச்சளவக்கை, சன்னார் கிராமங்களில் மக்கள் குறைகேட்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முதலமைச்சரும் அமைச்சர்களும் அதன் பின்னர் மன்னார் மறைமாவட்ட ஆயர் வணக்கத்துக்குரிய இராயப்பு ஜோசப்பு அவர்களையும் சந்தித்துக் கலந்துரையாடினார்கள். இச்சந்திப்பின் போது மன்னாரில் மேற்கொள்ளப்படும் திட்டமிட்ட குடியேற்றங்கள், பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், ஐ.நா.மனித உரிமை ஆணையத்தின் விசாரணையில் தமிழர் தரப்பின் பங்களிப்பு உட்பட பல்வேறு விடயங்கள் விரிவாக ஆராயப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

Geen opmerkingen:
Een reactie posten