இது தொடர்பாக இலங்கை பாதுகாப்பு அமைச்சு தனது இணையத்தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில்,
அடைக்கலம் பெறுவதற்காக பிரித்தானியாவில் சட்டத்தரணிகளின் ஆலோசனையுடன் தங்களை தாங்களே சித்திரவதைக்குட்படுத்தி கொள்கின்றனர்.
இது குறித்து பிரித்தானிய அரசாங்கம் விசாரணை செய்யவேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு செல்பவர்கள் அங்கு தஞ்சம் கோரி, தமது அடைக்கலத்தை உறுதி செய்வதற்காக சட்டத்தரணிகளின் அறிவுறுத்தல்களுக்கு ஏற்ப தங்களுக்கு தாங்களே காயங்களை ஏற்படுத்திக் கொள்கின்றனர்.
பின்னர் இவர்கள் தங்கள் புகலிடக் கோரிக்கைகளுக்கு வலுசேர்ப்பதற்காக மருத்துவர்களிடமிருந்து சான்றிதழ்களை பெற்றுக்கொள்கின்றனர்.
இதன் அடிப்படையில் அங்குள்ள நீதிமன்றங்களில், இலங்கையில் யுத்தத்துக்கு பின்னரும் சித்திரவதைகள் தொடர்கின்றன என்று சட்டத்தரணிகள் வாதாடி அவர்களுக்கு தஞ்சம் பெற்றுக்கொடுக்கும் அதேசமயம், இலங்கையின் நற்பெயருக்கும் களங்கம் ஏற்படுத்துகின்றனர்.
இந்த காயங்கள் இலங்கையிலோ அல்லது இலங்கைப் படைகளாலோ ஏற்படுத்தப்பட்டவையல்ல. மாறாக பிரித்தானியாவிலே ஏற்படுத்தப்பட்டவை.
காயங்கள் அவர்களுடைய ஒப்புதலுடன் ஏற்படுத்தப்பட்டவை, அடைக்கலம் கிடைக்கும் என்ற உத்தரவாதத்துடன் அவை ஏற்படுத்தப்படுகின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszATcKWlqz.html
Geen opmerkingen:
Een reactie posten