[ புதன்கிழமை, 08 ஒக்ரோபர் 2014, 09:34.00 AM GMT ]
ரூ.66 கோடி சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் ஜெயில், ரூ.100 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் பெங்களூர் பரப்பன அக்ரஹாராவில் உள்ள ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.
ஜெயலலிதா தன்னை ஜாமீனில் விடுதலை செய்யக்கோரி பெங்களூர் ஐகோர்ட்டில் மனு செய்தார். நேற்று அந்த மனு மீதான விசாரணை நடந்தது. நீதிபதி சந்திரசேகரா முன்னிலையில் அரசு வக்கீல் பவானி சிங்கும், ஜெயலலிதா வக்கீல் ராம் ஜெத்மலானியும் வாதாடினார்கள்.
அப்போது அரசு வக்கீல் பவானிசிங், ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கொடுக்க எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றார். என்றாலும் நீதிபதி சந்திரசேகரா அதை ஏற்காமல் ஜாமீன் மனுவை நிராகரித்து உத்தரவிட்டார். ஜெயலலிதாவுக்கு ஜாமீன் மறுக்கப்பட்டதால் அ.தி.மு.க. நிர்வாகிகள் கடும் ஏமாற்றமும், சோகமும் அடைந்துள்ளனர்.
இந்த நிலையில் பெங்களூர் ஐகோர்ட்டு நீதிபதி சந்திர சேகரா வழங்கிய தீர்ப்பு நகலை அ.தி.மு.க. வக்கீல்கள் பெற்றனர். தீர்ப்பில் அவர் கூறியுள்ள அம்சங்களை ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில் சுப்ரீம் கோர்ட்டில் ஜாமீன் மனுதாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து ஜெயலலிதா சார்பில் புதிய ஜாமீன் மனு தயாரிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவை அ.தி.மு.க. வக்கீல்கள் நவநீதகிருஷ்ணன், அசோகன், செந்தில் ஆகியோர் இன்று ஜெயிலுக்கு எடுத்துச் சென்றனர். அவர்களுடன் ஜெயலலிதா ஆலோசனை நடத்தினார். இந்த ஜாமீன் மனுவை நாளை வியாழக்கிழமை தாக்கல் செய்யப்போவதாக அ.தி.மு.க. வக்கீல்கள் தெரிவித்தனர்.
ஜெயலலிதாவின் ஜாமீன் மனு சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிகிறது. இல்லையெனில் நாளை மறுநாள் விசாரணைக்கு வந்து விடும். இதனால் ஜெயலலிதாவுக்கு விரைவில் ஜாமீன் கிடைத்து விடுமா? என்ற எதிர்பார்ப்பு அ.தி.மு.க. தொண்டர்களிடம் அதிகரித்துள்ளது.

http://www.tamilwin.com/show-RUmszATcKWlpz.html
நடிகர் ரஜினிகாந்தை எந்தக் கட்சி தனதாக்கும்?
[ புதன்கிழமை, 08 ஒக்ரோபர் 2014, 10:07.50 AM GMT ] [ valampurii.com ]
கலைஞர் கருணாநிதியின் முதுமை அவரின் இறுதிக்கால அரசியலை கட்டி எழுப்பவிடப் போவதில்லை என்பதும் உறுதி. ஆக, திராவிட முன்னேற்றக் கழகம் தமிழகத்தில் ஆட்சி அமைப்பதென்பது இப்போதைக்குச் சாத்தியப்படப் போகும் விடயமன்று.
இது ஒருபுறம் இருக்க, செல்வி ஜெயலலிதாவுக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புத் தொடர்பில் மிகக் கடுமையான மெளனவிரதம் அனுஷ்டித்தவர் கலைஞர் கருணாநிதி என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை.
இவ்வாறு மெளனம் காக்கக் கூடிய ஒருவரா? கலைஞர் என்றால் இல்லவே இல்லை. அப்படியானால் அவர் ஏன்தான் மெளனம் கடைப்பிடித்தார் எனில், அதற்கு இரண்டு காரணங்கள் உண்டு.
அதில் ஒன்று செல்வி ஜெயலலிதாவுக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புத் தொடர்பில் இசகுபிசகாக முத்துவேல் கருணாநிதி கதைப்பாராக இருந்தால், அதிமுக தொண்டர்கள் அவரின் பிராணனை எடுத்தாக வேண்டும் என்று நிற்பர்.
சுப்பிரமணியசுவாமி மீது கொண்ட கோபத்தையும் அவர்கள் கலைஞர் மீதே காட்டுவர்.
எனவே மெளனமாக இருப்பதே புத்திசாலித்தனம் என்று கலைஞர் முடிவெடுத்திருக்கலாம். இது தவிர இரண்டாவது காரணமே மிகவும் முக்கியமானது.
அதாவது செல்வி ஜெயலலிதாவுக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ஜெயலலிதா மட்டுமல்ல, கலைஞர் கருணாநிதியும் எதிர்பார்த்திருக்கவில்லை.
அதேநேரம் கலைஞருக்கு மிகப்பெரும் மகிழ்ச்சியைக் கொடுக்க வேண்டிய நீதிமன்றத் தீர்ப்பு அவரை அதிர்ச்சிக்கு ஆளாக்கியது.
அட! ஜெயலலிதாவுக்கு இப்படித் தீர்ப்பு என்றால்; எனது மகள் கனிமொழியின் நிலை என்னவாகும்? என்பதே அவரின் அதிர்ச்சிக்கு அடித்தளம் எனலாம்.
ஜெயலலிதாவுக்கு நடந்த பேரதிர்ச்சியான சம்பவத்தை தனது குடும்பத்தினருக்கு நேர்ந்தால் எப்படி என்று நினைத்ததும் கலைஞர் அதிர்ந்து போவது நியாயமானதே.
இந்த அடிப்படையில் அவர் மெளமாக இருப்பதைத் தவிர வேறு வழி ஏதுமில்லை.
இப்போது தமிழகத்தின் இருபெரும் பிரதான கட்சிகளான திமுகவும் அதிமுகவும் பலம் குன்றி உள்ளன.
எதிர்காலத்தில் மூன்றாவது கட்சி ஒன்று ஆட்சியைப் பிடிக்குமா? என்ற கேள்விகளுக்கு மத்தியில்; திமுக, அதிமுக இரண்டில் ஒன்று ஆட்சி அமைக்க வேண்டுமாயின் நடிகர் ரஜினிகாந்தை எந்தக் கட்சி தனதாக்கிக் கொண்டு, அடுத்த முதலமைச்சர் அவர் என்று அறிவிக்கிறதோ அந்தக் கட்சிக்கு ஆட்சி அமைக்கும் வாய்ப்பு அதிகம் எனலாம்.
இரண்டு கட்சியும் இல்லை. மோடியின் பாரதிய ஜனதாக் கட்சியில்தான் நான் என்று ரஜினி கூறினால்; திமுக, அதிமுக தொண்டர்கள் பலரை பாரதிய ஜனதா தனதாக்கிக் கொள்ளும்.
http://www.tamilwin.com/show-RUmszATcKWlp2.html
Geen opmerkingen:
Een reactie posten