[ வியாழக்கிழமை, 09 ஒக்ரோபர் 2014, 10:08.38 AM GMT ]
பொலிஸ் அவசர தொலைபேசி அழைப்பு எண்ணுக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் இந்த சடலம் மீட்கப்பட்டதாக கொள்ளுப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.
கூரிய ஆயுதம் ஒன்றில் தாக்கி இந்த நபர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
64 வயதான நபரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் கொள்ளுப்பிட்டி பொலிஸார் சம்பவம் குறித்து விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
சட்டவிரோதமாக தேக்கு மரக்கட்டைகளை எடுத்துச் சென்ற மூன்று பேர் இரணைமடுவில் கைது
அனுமதிப் பத்திரமின்றி தேக்கு மரக்கட்டைகளை எடுத்துச் சென்ற மூன்று பேர் கிளிநொச்சி இரணைமடு பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் அதிரடிப்படையின் கிளிநொச்சி முகாம் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலை அடுத்து மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் வண்டி ஒன்றில் ஏற்றிச் சென்ற சுமார் 20 லட்சம் ரூபா பெறுமதியான தேக்கு மரக்கட்டைகளை அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmszATdKWlvy.html
முதலாளித்துவத்தை தோற்கடிப்பதன் மூலமே அநீதியை ஒழிக்க முடியும்: ஜே.வி.பி
[ வியாழக்கிழமை, 09 ஒக்ரோபர் 2014, 10:17.04 AM GMT ]
யஹலகெலேவத்தையில் நேற்று நடைபெற்ற சோசலிச இளைஞர் சங்கம் ஏற்பாடு செய்த சேகுவேராவின் 47 வது நினைவு தின நிகழ்வில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
1971 ஆம் ஆண்டு ஜே.வி.பி புரட்சியில் ஈடுபட்ட போது முதலாளித்துவ வர்க்கத்தினர் எம்மை சேகுவேராகாரர்கள் என அழைத்தனர்.
அவர்கள் அறியாமையினால் அன்று சேகுவேராகாரர்கள் என்று எம்மை அழைத்தது எமக்கு பெருமை தரக்கூடியது. காரணம் அவர் மிக விசேடமான குணங்களை கொண்ட ஒரு புரட்சியாளன்.
உலகில் விசேடமான மனிதர்களாக மாற முயற்சிக்கும் நபர்கள் காரணமாக சேகுவேரா ஒரு மிக விசேடமான மனிதராகின்றார்.
பட்டினி அல்லது குணப்படுத்தக் கூடிய நோய் காரணமாக நான்கு நிமிடங்களுக்கு ஒரு குழந்தை இறக்கின்றது.
நவீன பொஷிஸ்டாக்களை தோற்கடிக்கும் போராட்டம் ஜே.வி.பிக்கு இருக்கின்றது.
முதலாளித்துவத்தை தோற்கடிப்பதன் மூலம் மட்டுமே அநீதி, சுரண்டல்கள், அநியாயம் நிறைந்த சமூகத்தை மாற்ற முடியும்.
அனைத்து சமூகங்களும் ஏனைய சமூகங்களை மதிக்கும் சமூகத்தை உருவாக்க வேண்டும்.
பெற்றோருக்கு சுமையின்றி பிள்ளைகள் கல்வி கற்கும் சமூகத்தை ஏற்படுத்துவதே நோக்கம்.
அதனை ஜே.வி.பியினால் மாத்திரமே செய்ய முடியும் எனவும் ரில்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszATdKWlvz.html
அரசாங்கம் மக்களுக்கு அழுத்தங்களை கொடுத்து வருகிறது!- விக்ரமபாகு குற்றச்சாட்டு
[ வியாழக்கிழமை, 09 ஒக்ரோபர் 2014, 10:17.14 AM GMT ]
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
அரசாங்கம் எந்த வழியில் பயணிக்கின்றது என கேள்வி எழுப்பியுள்ள அவர், அரசாங்கம் பல்வேறு அமைப்புகளை உருவாக்கி மக்களின் அமைதியான நிலைப்பாடுகளுக்கு அழுத்தங்களை கொடுத்து வருகிறது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszATdKWlv0.html
வருட இறுதிக்குள் படையினர் வெளியேற வேண்டும்! வடக்கு மாகாணசபையில் தீர்மானம்!
[ வியாழக்கிழமை, 09 ஒக்ரோபர் 2014, 10:31.21 AM GMT ]
ஆளுங்கட்சியினால் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தில் எதிர்க்கட்சி நடுநிலைமை வகித்ததுடன் வடக்கு மாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே சிவஞானத்தால் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
http://www.tamilwin.com/show-RUmszATdKWlv1.html
Geen opmerkingen:
Een reactie posten