தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 9 oktober 2014

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு அமைதி வழியில் போராடுவது குற்றமா? வன்னி எம்.பிக்கள் கேள்வி!

பந்துல குணவர்தன விரும்பியபடி கல்வியை மாற்ற முடியாது: மேர்வின் சில்வா
[ வியாழக்கிழமை, 09 ஒக்ரோபர் 2014, 11:07.11 AM GMT ]
கல்வியமைச்சருக்கோ அதிகாரிகளுக்கோ தேவையான விதத்தில் கல்வியில் மாற்றங்களை செய்ய முடியாது என அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
களனி ஹூணுப்பிட்டிய பண்டாரநாயக்க கல்லூரியில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
கல்விக் கொள்கைகளை மாற்ற வேண்டாம். கன்னங்கர அவர்கள் ஆரம்பித்த இலவச கல்வியை தொடர வேண்டும். கல்வியமைச்சர் பந்துல குணவர்தனவுக்கு விரும்பியபடி கல்வியை மாற்ற முடியாது.
இடி விழும் இடங்களில் இருப்பதற்கு நான் பயப்படுவதில்லை. இடி விழக்கூடிய பாவங்களை நான் செய்ததில்லை.
அண்மையில் ஒரு நாள் நான் கெபிலித்த பிரதேசத்திற்கு சென்றேன். அங்குதான் கதிர்காம கந்தன் தவ யோகியாக இருக்கின்றார்.
கடவுள் மேல் இருக்கும் அன்பில் அனைவரும் கதிர்காமத்திற்கு செல்வதில்லை. பக்தியும் இதற்கு காரணம் அல்ல.
தமது தேவைகளை நிறைவேற்றி கொள்ளவே அவர்கள் செல்கின்றனர். சிலர் தமது சட்டத்தரணிகள் போல் கடவுளை பயன்படுத்திக் கொள்கின்றனர். அது சரியல்ல எனவும் மேர்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszATdKWlv2.html
ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பிக்கும் அரசாங்கம்
[ வியாழக்கிழமை, 09 ஒக்ரோபர் 2014, 11:20.45 AM GMT ]
ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரச்சார பணிகளை அடுத்த வாரத்தில் இருந்து ஆரம்பிக்க ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தீர்மானித்துள்ளது.
இது தொடர்பான செயற்பாட்டு திட்டம் ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ளதுடன் அது பற்றிய விசேட கூட்டம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளரான அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவின் வீட்டில் நடைபெற்றது.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளரான அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளரான பசில் ராஜபக்ஷ, பொருளாரான அமைச்சர் டலஸ் அழகபெரும ஆகியோர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
அமைச்சர் பசில் ராஜபக்ஷவினால் உருவாக்கப்பட்டுள்ள இந்த செயற்பாட்டு திட்டம் குறித்து முதலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினருடன் ஆலோசித்து விட்டு, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கூட்டணி கட்சிகளுடன் ஆலோசிப்பது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வெளி அணியினர் தொடர்பான இணைப்பு பணிகள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszATdKWlv3.html
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு அமைதி வழியில் போராடுவது குற்றமா? வன்னி எம்.பிக்கள் கேள்வி
[ வியாழக்கிழமை, 09 ஒக்ரோபர் 2014, 11:24.28 AM GMT ]
வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் தலைவர் கே.தேவராஜா தாக்கப்பட்ட சம்பவமானது, ஜனநாயகப் போராளிகளின் அகிம்சை வழி செயற்பாடுகளை அடக்க நினைக்கும் அரசாங்கத்தின் கட்டு மீறிய செயலாகும் எனவும் இச்சம்பவத்தை தாம் கண்டிப்பதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன் மற்றும் எஸ்.வினோ நோகராதலிங்கம் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் அவர்கள் கூட்டாக விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு அமைதி வழியில் போராடுவது குற்றமான செயல் என்றால் எப்படி போராட வேண்டும் என அரசாங்கம் கருதுகின்றது.
புலிகள் மீள உருவாகின்றார்கள் என கண்ணுக்கு தெரியாத சம்பவங்களை வைத்து சந்தேகத்தில் பலரை கைது செய்து சிறைகளில் அடைக்கும் அரசாங்கம் இது போன்ற தாக்குதல் சம்பவங்களின் பின்னணியில் உள்ளவர்களை கைது செய்ய தயங்குவது ஏன்?
அரச தரப்பிற்கு தமது விசுவாசத்தை காட்டுகின்றவர்கள் குற்றச்செயல்களில் இருந்து இலகுவாக தப்பித்துக் கொள்ளுகின்றனர்.
அரசாங்கத்தின் ஆதரவு இல்லாமல் இது போன்ற தாக்குதல் சம்பவங்களை யாராலும் திட்டமிட்டு செய்திருக்க முடியாது.
எனவே அரசாங்கம் இதற்கான முழுப்பொறுப்பையும் ஏற்று வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் தலைவர் கே.தேவராஜா மீது தாக்குதல்களை மேற்கொண்ட குற்றவாளிகள் கைது செய்யப்பட உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszATdKWlv4.html

Geen opmerkingen:

Een reactie posten