[ வியாழக்கிழமை, 09 ஒக்ரோபர் 2014, 09:40.35 AM GMT ]
விமானத்தில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக இவ்வாறு அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
எயார் பஸ் ரகத்தை சேர்ந்த ஏ 320 என்ற இந்த விமானம் நேற்று மாலை 4.15 அளவில் திருச்சி விமானநிலையத்தில் இருந்து 142 பேர் பயணிகளுடன் புறப்பட்டுள்ளது.
விமானம் புறப்பட்டு சுமார் 70 மைல் தூரம் வரை பயணித்த பின்னர் விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளதை விமானி அறிந்துள்ளார்.
இதனையடுத்து திருச்சி விமானநிலைய கட்டுப்பாட்டு அறைக்கு இது குறித்து அறிவித்த விமானி அவசரமாக விமானத்தை தரையிறக்கியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszATdKWlu5.html
பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் சத்தியாக்கிரகப் போராட்டம்!
[ வியாழக்கிழமை, 09 ஒக்ரோபர் 2014, 09:44.42 AM GMT ]
இந்த சத்தியாக்கிரகப் போராட்டம் ஜோர்ஜ் ஆர். டி .சில்வா பூங்காவுக்கு எதிரில் நடைபெறுகிறது.
முகாமைத்துவ பீடத்தை மீண்டும் ஸ்தாபிக்குமாறு கோரி மாணவர்கள் கலஹா சந்தியில் ஆரம்பித்த சத்தியாக்கிரகப் போராட்டம் 50 நாட்களை கடந்துள்ள போதிலும் இதுவரை அதிகாரிகள் மாணவர்களின் கோரிக்கை தொடர்பில் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை.
இதன் காரணமாக கண்டியில் இந்த சத்தியாக்கிரகப் போராட்டத்தை மாணவர்கள் ஆரம்பித்துள்ளனர்.
கடந்த 7 வருடங்களாக இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டு வருவதுடன் அதிகாரிகளிடம் இருந்து எந்த பதிலும் கிடைக்கவில்லை என பேராதனை பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடத்தின் மாணவர் செயற்பாட்டுக்குழுவின் தலைவர் துமிந்து நுனுகுலசூரிய தெரிவித்துள்ளார்.
சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபடும் அதேவேளை பொது மக்களிடம் இருந்து 10 லட்சம் கையெழுத்துக்களையும் பெறவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszATdKWlu7.html
Geen opmerkingen:
Een reactie posten