தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 2 oktober 2014

இந்தியாவில் அரசியல்வாதிகள் தண்டிக்கப்பட்டாலும் இலங்கையில் நடக்க வாய்ப்பில்லை: விதுர விக்ரமநாயக்க

மத்திய கிழக்கில் அடிமைகளாக வேலை செய்யும் இலங்கை பணிப்பெண்கள்!- பொதுபல சேனா
[ வியாழக்கிழமை, 02 ஒக்ரோபர் 2014, 11:50.35 AM GMT ]
மத்திய கிழக்கு முஸ்லிம் நாடுகளுக்கு வீட்டுப் பணிகளுக்கென செல்லும் இலங்கை பெண்கள், அங்கு அடிமை சேவைகளில் ஈடுபடுத்தப்படுவதாக பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
சிங்கள வானொலி ஒன்றின் இணையத்தளத்திற்கு வழங்கிய பேட்டியில் அவர் இதனை கூறியுள்ளார்.
இது சம்பந்தமான எமது அமைப்பின் மாநாடுகள் மற்றும் சமய போதனைகளின் போது மக்களுக்கு விளக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கின் அடிமை தொழில் சம்பந்தமாக நாங்கள் கிராம மட்டத்தில் வேலைத்திட்டங்களை ஆரம்பித்து வருகிறோம்.
வீட்டுப் பணிகளுக்கு என பெண்கள் அழைத்து செல்லப்பட்டாலும் உண்மையில் அவர்கள் அடிமை சேவைக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர்.
இந்த அடிமை சேவை குறித்து நாங்கள் பலருக்கு விளக்கமளித்துள்ளோம். அது தற்போது வெற்றியளித்து வருகிறது.
மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்று பாதிக்கப்பட்டு வரும் பெண்களுக்கு நாங்கள் உதவிகளை செய்து வருகின்றோம்.
உதவிகளை செய்ய எங்களிடம் பணம் இல்லை. இப்படியானவர்களுக்கு உதவிகளை செய்வதற்கே வெளிவிவகார அமைச்சு இருக்கின்றது.
அமைச்சின் அதிகாரிகள் தமது மக்களுக்காக செய்ய வேண்டிய வேலைகளை செய்யாதன் காரணமாகவே சகல பிரச்சினைகளும் ஏற்பட்டுள்ளன எனவும் பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszATWKVfvy.html

இந்தியாவில் அரசியல்வாதிகள் தண்டிக்கப்பட்டாலும் இலங்கையில் நடக்க வாய்ப்பில்லை: விதுர விக்ரமநாயக்க
[ வியாழக்கிழமை, 02 ஒக்ரோபர் 2014, 11:14.21 AM GMT ]
இந்தியாவின் தமிழ் நாடு முதலமைச்சருக்கு எதிரான தீர்ப்பு அனைவரது கண்ணையும் திறக்க வைத்த தீர்ப்பு என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளர்.
அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி சொத்துக்களை குவித்ததாக தமிழ் நாடு முதலமைச்சருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இலங்கையில் எமக்கு தெரிந்தவரை அப்படியான தீர்ப்புகள் வெளியாக வாய்ப்பில்லை.
அதனை எண்ணி பார்க்கவும் முடியாது. இலங்கையில் அதிகாரிகள் மாத்திரமே குற்றவாளிகளாக இனங்காணப்படுவர். இது கவலையளிக்கும் நிலைமை.
இலங்கையில் எந்த அரசியல்வாதியும் இப்படியான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் குற்றவாளிகளாக இனங்காணப்படவில்லை.
என்னை பொருத்தவரையில் எதிர்காலத்திலும் அப்படி நடக்க போவதில்லை.
ஆனால், நாட்டில் இலஞ்ச ஆணைக்குழு இருக்கிறது, அந்த ஆணைக்குழுவிற்கு அரசியல்வாதிகள் குறித்து முறைப்பாடுகள் கிடைந்துள்ளன எனவும் விதுர விக்ரமநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.
விதுர விக்ரமநாயக்க முன்னாள் பிரதமர் ரட்ணசிறி விக்ரமநாயக்கவின் புதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmszATWKVfu7.html

Geen opmerkingen:

Een reactie posten