தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பதவிக் காலத்தில் வந்த சோதனையானது, துன்பகரமான சம்பவமாகும். ஆனால் ஜனநாயக விழுமியங்களுக்கு அமைய சிந்திக்க வேண்டியதாக உள்ளதாயினும் மாநில, அரசியல் பழிவாங்கல் உள்ளதையும் மறுதலிக்கவில்லை என கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சி. பாஸ்க்கரா தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கை ஊழலில் எதிர்க்கட்சிகளின் கூற்று உண்மை என நிரூபித்து எமது ஜனாதிபதிக்கு எதிரான தீர்ப்பு வந்தால் காப்பாற்ற கூட இருப்பவர்களே இல்லாத நிலை ஏற்படும்.
தமிழக முதல்வர் மீதான தீர்ப்பு என்பது இந்திய ஜனநாயகத்தின் வெற்றி என்று பார்க்கும் பக்கத்துக்கு அப்பால், இலங்கை தமிழர் மீதான கரிசனை இலங்கை வடகிழக்கு மக்கள் மீது மத்திய அரசு இலங்கை அரசு சார்பாக முன்பு காங்கிரஸ் கட்சி காலத்தில் நடந்த நிகழ்வு, மாநில வேறுபாடு போட்டி உள்ளடக்கப்பட்டதை மறுதலிக்க முடியாது.
ஏனெனில் மத்திய அரசின் கொள்கை வகுப்பாளர்களாகவும் முடிவெடுக்கும் முக்கியஸ்தர்களாக கொள்கை வகுப்பாளர்கள் இருந்ததால் கேரளா, தமிழக மாநில வேறுபாட்டு பிரச்சினையை இலங்கை இனப் பிரச்சினையிலும் புகுத்தியதையும் அதனால் ஏற்பட்ட இலங்கை தமிழர் அழிவையும் மறுதலிப்பதற்கு இல்லை.
எது எப்படி எனினும், முதல்வர் ஜெயலலிதாவின் சிறைக்குபின் பொறுப்பேற்ற முதல்வர் பன்னீர்செல்வம் முதல் மற்றைய அமைச்சர்களின் கண்ணீர் மல்லக வெம்பி வெம்பி பெறுப்பேற்ற நிகழ்வு, தலைவர் மீதான நம்பிக்கையையும் கட்சி மீதான நம்பிக்கை கட்டுகோப்பையும் எடுத்துக் காட்டுகின்றது.
இதேவேளை இலங்கை ஜனாதிபதிக்கும் இந்தநிலை ஏற்பட்டால், சூழ்நிலை வேறுபாடாக அமையும் என்பது நிஜம்.
இதை மனதில் கொண்டு ஜனாதிபதி தமிழர் மீதான அடக்கு முறையை கைவிட்டு இனப்பிரச்சினைக்கு தீர்வை முன்னெடுத்து தனது இருப்பை தக்க வைக்க முயல வேண்டும் என்றார்.
http://www.tamilwin.com/show-RUmszATWKVfvz.html
Geen opmerkingen:
Een reactie posten